June

மூன்று நாள் பயணம்

(வேதபகுதி: எண்ணாகமம் 10:11-36) “அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்று நாள் பிரயாணம் போனார்கள்; மூன்று நாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படி அவர்கள் முன் சென்றது” (வச. 33). ஒவ்வொரு கோத்திரத்தாரும், அவரவருடைய இடத்தில், அவரவருடைய கொடிகளுடன், ஆசரிப்புக்கூடாரத்தைப் பின்பற்றி அணிவகுத்துச் செல்வது எத்தனை அற்புதமான காட்சி. கர்த்தருடைய மக்கள், நாங்கள் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள் என்று அறிக்கையிடுகிறார்கள். தங்களுடைய ஐக்கியத்தின் அழகையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறார்கள். விசுவாசிகள் இவ்வாறு செல்வதன் மூலம்…

June

செய்தி சொல்லும் ஒலிகள்

(வேதபகுதி: எண்ணாகமம் 10:1-10) “சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளையங்களைப் பிரயாணப் படுத்துவதற்கும் உபயோகமான இரண்டு வெள்ளிப்பூரிகைகளைச் செய்து கொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித் தகட்டால் செய்யப்பட வேண்டும்” (வச. 2). கர்த்தருடைய மேகம் மக்களை வழிநடத்தும் வழிகாட்டியாக இருக்கிறது. வெள்ளிப்பூரிகைகள் மேகம் சொல்லும் செய்தியை மக்களிடத்தில் தெரிவிக்கும் வாயாக இருக்கின்றன. ஆசரிப்புக்கூடாரத்தில் எழும்பும் மேகம் அதைச் சூழக் கூடாரங்களில் குடியிருக்கும் மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றிலும் அதன் அருகிலேயே குடியிருக்கும் ஆசாரியர்கள் அதைக் கண்டு பூரிகைகளை…

June

வழிநடத்தும் மகிமையின் மேகம்

(வேதபகுதி: எண்ணாகமம் 9:15-23) “மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளையமிறங்குவார்கள்” (வச. 17). ஆசரிப்புக்கூடாரத்தின் மேல் அக்கினிமயமான மேகம் இரவில் அமர்ந்தது, அது விடியற்காலை வரை இருந்தது, அது தினந்தோறும் இருந்தது. இது மக்களின் கண்களுக்குத் தெரியக்கூடிய அடையாளமாக இருந்தது. இது பாளையத்தின் நடுவில் இருந்தது. இஸ்ரயேல் மக்களை எதிரிகளிடமிருந்து காத்த இந்த மேகம் (யாத். 13:21-22) இப்பொழுது பயணத்தின் வழிகாட்டியாக இருக்கிறது. எதிரியிடமிருந்து நம்மைக் காத்த…

June

பாலைவனத்தில் முதலாம் பஸ்கா

(வேதபகுதி: எண்ணாகமம் 9:1-14) “அந்தப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான்” (வச. 4). இஸ்ரயேலர் எகிப்திலிருந்து விடுதலை பெற்ற இரண்டாம் ஆண்டு பாலைவனத்தில் தங்களது முதலாவது பஸ்காவை ஆசரித்தார்கள். பஸ்கா பண்டிகை என்றால் நினைவுக்கு வருவது அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியும் தேவனுடைய வல்லமையுமே. கிறிஸ்துவே நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி. நம்முடைய இரட்சிப்பு கல்வாரியில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தத்தையே முற்றிலும் சார்ந்ததாக இருக்கிறது. இவை மட்டுமின்றி, புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நம்முடைய ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவுக்குள்ளாகவே நாம்…

June

லேவியர் என்னும் அசைவாட்டும்பலி

(வேதபகுதி: எண்ணாகமம் 8:5-26) “லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கைiயாக்கி, இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள்.” (வச. 13,14). தேவன் லேவியர்களை ஆசரிப்புக்கூடாரத்தில் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் உதவி செய்யும்படியாக ஏற்படுத்தினார். இவர்கள் ஆசாரியர்களுக்குத் தத்தமாகக் கையளிக்கப்பட்டவர்கள். இவர்கள் தேவனால் சிறப்பான வகையில் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் தேவனுடையவர்கள். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நம்மையும்கூட தேவன் இவ்விதமாகவே தம்முடைய சிறப்பான பணிக்கு அழைக்கிறார். முதலாவது தேவன்…

June

விசுவாசிகள் என்னும் சுடர்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 8:1-4) “நீ ஆரோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போதும் ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரிய வேண்டும் என்று சொல் என்றார்” (வச. 2). ஆசரிப்புக்கூடாரத்தின் பரிசுத்த ஸ்தலமும் மகாபரிசுத்த ஸ்தலமும் முற்றிலும் காற்றும் வெளிச்சமும் புகாத திரைகளால் மூடப்பட்டது. குறிப்பாக பரிசுத்த ஸ்தலத்துக்குள் ஆசாரியன் நாள்தோறும் செல்ல வேண்டும். அங்கு பணிவிடை செய்வதற்கு வெளிச்சம் அவசியம். ஆகவே முதலாவது ஆரோன் குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். கிறிஸ்து நானே உலகத்தின் ஒளி என்றார்…

June

கோத்திரப் பிரபுக்களின் காணிக்கைகள்

(வேதபகுதி: எண்ணாகமம் 7:1-89) “பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்” (வச. 10). இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் ஆண்டின் முதல் மாதம் முதல் தேதியிலே ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது *(காண்க யாத். 40). அந்த நாளிலே இஸ்ரயேல் புத்திரரின் கோத்திரப் பிரபுக்கள் தங்கள் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்து தேவனுக்கென்று படைத்தார்கள். முதலாவது இவர்கள் வண்டிகளையும் மாடுகளையும் கொண்டுவந்தார்கள் (வச. 3). இவை லேவியர்களின் வேலைக்கு…

June

ஆசீர்வாதத்தின் தேவன்

(வேதபகுதி: எண்ணாகமம் 6:22-27) “இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்” (வச. 13-15). ஆசாரியர்கள் கர்த்தரின் திருப்பெயரில் மக்களை ஆசீர்வதிப்பது எத்தனை பெரிய சிலாக்கியம்! கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது எவ்வளவு பெரிய பேறு! நான் உன்னை ஆசீர்வதிப்பேன், நீ ஆசீர்வாதமாயிருப்பாய் என்று கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னார் (ஆதி. 12;1-3). இந்த வாக்குறுதி கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரிடத்திலும் நிறைவேறக்கூடியதாக இருக்கிறது. இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்…

June

அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான பாடுகள்

(வேதபகுதி: எண்ணாகமம் 6:13-21) “நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக்கூடார வாசலிலே வந்து, … போஜனபலியையும், பானபலிகளையும், கர்த்தருக்குக் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்” (வச. 13-15). தான் கர்த்தருக்காக நசரேய விரதம் பண்ணிக்கொள்கிற ஒருவன் அதில் நிலைத்திருந்து, அதைக் கவனத்தோடும், கருத்தோடும் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அக்காலம் முடிந்தவுடன் அவன் அதற்கான சடங்கு முறைகளைச் செய்து நிறைவேற்றுவது ஆகும். என்னுடைய நசரேய விரதக் காலம் முடிந்துவிட்டது, இனி அதிலிருந்து…

June

பிரித்தெடுக்கப்பட்ட நாட்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 6:1-12) “புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக் கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்” (வச. 2). லேவி கோத்திரம் முழுவதையும் தேவன் தம்முடைய ஊழியத்துக்கென்று பிரித்து எடுத்துக்கொண்டார். லேவியர் தவிர வேறு எவரும் கர்த்தருக்குத் தங்களை ஒப்புவிக்க விரும்பினால் என்ன செய்வது? இதற்கான வழியே நசரேய விரதம். நான் என்னைக் கர்த்தருக்கென்று ஒப்புவிக்கிறேன் என மனபூர்வமாகவும், தன்னிச்சையாகவும் ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ எடுக்க வேண்டிய தனிப்பட்ட தீர்மானமாகும்…