Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home படித்தவைகள்...

தடைகள் !!!

Webmaster by Webmaster
February 14, 2009
in படித்தவைகள்...
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா? நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா? நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும், ஒப்புரவாக மனமற்றவர்களாகவும் இருக்கிறோமா?

You might also like

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

(2) நாம் கோபப்படுகிறோமா? நம் உள்ளத்தில் ஏதேனும் கொதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா? நாம் இன்னும் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறோமா? கடுங்கோபத்திற்கு நாம் அடிக்கடி ஆளாகிறோமா?

(3) நமக்குள் பொறாமையின் சின்னங்கள் காணப்படுகின்றனவா? அடுத்தவர்கள் புகழப்படும்போது, அது நமக்கு சஞ்சலத்தை உண்டாக்குகிறதா? நம்மைவிட அதிகமாய் nஐபிக்கவும், பேசவும் , செய்யவும்கூடியவர்களை நாம் பார்க்கும்போது அவர்கள்மேல் பொறாமைகொள்கிறோமா?

(4) நாம் பொறுமையற்றவர்களாயும், எளிதில் எரிச்சலடைகிறவர்களாயும் இருக்கிறோமா? சிறிய காரியம்கூட நமக்குத் தொந்தரவாயும், வெறுப்பாயும் இருக்கிறதா? அல்லது எவ்வித சந்தர்ப்பத்திலும் நாம் பொறுமையாயும், சந்தோசமாயும் , குழப்பமில்லாமலும் இருக்கிறோமா?

(5) நாம் எளிதில் வருத்தமடைகிறோமா? பிறர் நம்மைக் கண்டு பேசாமல் போகிறதை நாம் பார்க்கும்போது, அது நமக்கு வேதனையைத் தருகிறதா? மற்றவர்கள் கனப்படுத்தப்பட்டும், நாம் அசட்டை செய்யப்பட்டும் இருக்கும் தருணங்களில் நமக்குள் எந்த உணர்ச்சி ஏற்படுகிறது?

(6) நமது இருதயங்களில் ஏதேனும் பெருமை உண்டா? நாம் கர்வங்கொள்ளுகிறோமா? நமது அந்தஸ்த்தைக் குறித்தும் தாலந்தைக் குறித்தும் பெருமிதங்கொள்ளுகிறோமா?

(7) நாம் உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறோமா? நமது ஊழியம் குறைகூறப்படாத நிலமையில் இருக்கிறதா? நாம் யோக்கியமாய் நடக்கிறோமா?

(8) நாம வீண் பேச்சுக்காரராயிருக்கிறோமா? மற்றவர்களின் நடத்தையைப்பற்றி அவதூறாய் பேசுகிறோமா? பிறர் காரியங்களில் அனாவசியமாகத் தலையிடவும், கொள் சொல்லுகிறவர்களாகவும் இருக்கிறோமா?

(9) நாம் பிறரை அன்பில்லாமலும், கடினமாகவும், கொடுரமாகவும் நியாயந்தீர்க்கிறோமா? நாம் எப்பொழுதும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாயும், பிறருடைய சிறு தவறுதலையும் பெரிதெனப் பேசுகிறவர்களாயும் இருக்கிறோமா?

(10) நாம் தேவனை வஞ்சிக்கிறோமா? அவருக்குரிய நேரத்தை நாம் திருடி இருக்கிறோமா? அவருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடாமல் வைத்திருக்கிறோமா?

(11) நாம் உலகத்தாரைப்போல் ஐPவிக்கிறோமா? இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா?

(12) நாம் களவு செய்திருக்கிறோமா? இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா?

(13) நம் உள்ளத்தில் பிறர்மேல் கசப்பு இருக்கிறதா? நமது இருதயங்களில் கசப்பையும், பகையையும் பேணி வைத்திருக்கிறோமா?

(14) நமது ஐPவியம் மாயையினாலும், அற்பத்தனத்தினாலும் நிறைந்திருக்கிறதா? நம் நடக்கை அருவருக்கப்படத்தக்க நிலையில் இருக்கிறதா? உலகம் நம்மைக் கண்டு தன் பக்கம் நம்மைச் சேர்த்திருக்கிறதா?

(15) நாம் யாருக்காவது கெடுதல் செய்து, அதற்குப் பதிலீடு செய்யாமல் இருக்கிறோமா? அல்லது சகேயுவின் சிந்தை நமக்குள் வந்திருக்கிறதா? தேவன் நமக்கு வெளிப்படுத்திக் காட்டின அநேக சிறு காரியங்களை நாம் சரிப்படுத்தியிருக்கிறோமா?

(16) நாம் கவலையுள்ளவர்களாகவும், வியாகுலம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறோமா? நமது இகபரத் தேவைகளுக்காக நாம் கடவுளிடம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோமா? நாம் நாளைக்காகக் கவலைப்படுகிறவர்களாயிருக்கிறோமா?

(17) மாம்ச இச்சைக்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா? நம் உள்ளத்தில் அசுத்தமான எண்ணங்கள் குடிகொண்டிருக்கின்றனவா?

(18) நம் வார்த்தையில் உண்மை அல்லது சத்தியம் காணப்படுகிறதா? அல்லது ஒன்றைப் பத்தாகப் பேசி துரும்பைத் தூணாக்குகிறோமா? நாம் பொய் பேசியிருக்கிறோமா?

(19) அவிசுவாசமாகிய பாவத்திற்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா? கர்த்தர் நமக்குச் செய்த எண்ணிறந்த நன்மைகளை நாம் மறந்தவர்களாய் இன்னும் அவருடைய வாக்குத்தத்தங்களை விசவாசிக்க மறுக்கிறோமா?

(20) nஐபம் செய்யாமை என்ற பாவத்திற்கு நாம் ஆளாயிருக்கிறோமா? நாம் பரிந்து பேசுகிறவர்களாயிருக்கிறோமா? நாம் nஐபிக்கிறோமா? நமது முழங்காலில் நின்று எத்தனை தடவை nஐபித்திருக்கிறோம்? நமது ஐPவியம் பல வேலைகளினால் நிறைந்திருக்கிறபடியால் , அங்கு nஐபத்திற்கு இடமில்லையா?

(21) நாம் வேதவாசிப்பை அசட்டை செய்திருக்கிறோமா? தினமும் எத்தனை அதிகாரங்பகள் வாசிக்கிறோம்? நாம் வேதமாணாக்கரா? வேதத்திலிருந்து ஆதாரங்களை நாம் எடுக்கிறோமா?

(22) நாம் பகிரங்கமாய் கிறிஸ்துவை வெளிப்படுத்தத் தவறினோமா? இயேசுநாதரைப் பற்றி நாம் பிறரிடம் கூற வெட்கப்படுகிறோமா? உலகத்தார் மத்தியில் நாம் இருக்கையில் அவரைப் பற்றிப் பேசாமல் வாயை மூடுகிறோமா? நாம் தினமும் சாட்சி கொடுத்து வருகிறோமா?

(23) ஆத்துமாக்களையேபற்றிய பாரம் நிறைந்தவர்களாய் இருக்கிறோமா? கெட்டுப்போன ஆத்துமாக்களின்மேல் அன்புள்ளவர்களாயிருக்கிறோமா? அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காகப் பரிந்து பேசும் சிந்தை ஏதேனும் நம்மில் உண்டா?

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

February 5, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

(யோவான் 20:30,31, 21:25) மரித்தோரை எழுப்பினது 1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16 2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56 3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44 பிசாசைத் துரத்தினது 4. அசுத்த ஆவியுள்ள...

Read moreDetails

பழைய ஏற்பாட்டில் அற்புதங்கள்

January 31, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. ஆதாம் ஏவாள் சிருஷ்டிப்பு. ஆதி.2:7,21,22 2. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம். ஆதி.6:7,8 அதிகாரங்கள். 3. கர்த்தர் பாபேலில் பாஷையைத் தாறுமாறாக்கினது. ஆதி.11:7-9 4. சோதோம் மனிதருக்குக் குருட்டாட்டம் உண்டானது. ஆதி.19:11 5. சோதோம் கொமோரா பட்டணங்கள் வான...

Read moreDetails

இயேசுவை நீதிமான் என்று அறிக்கையிட்ட ஏழுபேர்

January 23, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. பிலாத்து. மத்.27:24 2. பிலாத்துவின் மனைவி. மத்.27:19 3. நூற்றுக்கதிபதி. லூக்.23:47 4. பேதுரு. அப்.3:14, 1.பேது.3:18 5. ஸ்தேவான். அப்.7:52 6. யாக்கோபு. யாக்.5:6-8 7. யோவான். 1.யோ.2:1,29

Read moreDetails

சூலமித்தியாளை ஆத்தும நேசர் அழைக்கிறார்! (உன்னதப்பாட்டு)

January 19, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. என் பிரியமே! 1:9,15, 2:2,7,10, 4:7, 5:2, 6:4,10, 7:6 2. என் ரூபவதியே! 1:8,15, 2:10, 4:1,7, 5:9, 6:1, 7:6 3. என் உத்தமியே! 5:2, 6:9 4. என் புறாவே! 1:15, 2:14,...

Read moreDetails

நமது அழைப்பு

January 14, 2022
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள்

1. மனந்திரும்ப அழைப்பு. மத்.9:13, மாற்.2:17, லூக்.5:32 2. ஒளியினிடத்திற்கு அழைப்பு. 1.பேது.2:9 3. சமாதானமாயிருக்கும்படி அழைப்பு. 1.கொரி.7:15 4. பரிசுத்தமுள்ளவர்களாகும்படி அழைப்பு. ரோ.1:2, 1.கொரி.1:2 5. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அழைப்பு. 1.தீமோ.6:12 6. இயேசு கிறிஸ்துவுடனே...

Read moreDetails
Next Post

தாழ்வில் நம்மை நினைத்தவர்!

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?