March

மார்ச் 16

மார்ச் 16

சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. (சங்.89:8)

சங்கீதம் 89ல் நாம் உண்மையைப்பற்றி அதிகமாகக்கூறியிருக்கக் காணலாம். இச்சங்கீதத்தின் மையக்கருத்து முதல் வசனத்தில் கூறப்பட்டுள்ளது.உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன். இந்தச் சங்கீதம்முழுவதிலும் இதற்குப் பல சான்றுகளைக் காணலாம். உண்மையுள்ள தேவன் நம் நம்பிக்கைக்குப்பாத்திரர். சமுத்திரத்தின் அலைகள் எழும்பும்போது அதாவது நம் பகைஞர் பெருகும்போது அவர்நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். புயல் எழும்பி நம்மை அடித்துக்கொண்டு போகும்போதுஅழிவின் வேளையில் உங்களால் பாட முடியுமா? என்று ஐhர்ஜியாவிற்குச் சிறிய கப்பலில்பயணப்பட்ட மொரோவியர்களைக் கேட்டார் வெஸ்லி. உடனே கலக்கமுற்ற ஓர் இளம் மிஷனறிதாழ்மையுடன், முடியும், ஏனெனில் தேவன் புயலைக்காட்டிலும் பெரியவர் என்று பதிலளித்தார்.சங்கீதக்காரன் தைரியமாக கூறியதைப் பிரதிபலிப்பதாக உள்ளது இவருடைய வார்த்தைகள். அவன்கூறுகிறான், சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்?உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்.அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப் பண்ணுகிறீர் (சங்.89:8-9).

நம்மோடுகூட வாழ்க்கைப் படகில் பயணம் செய்துவரும்வல்லமையுள்ள ஒருவர், அன்று கலிலேயா கடலைப் பார்த்து, இரையாதே! அமைதியாயிரு எனக் கூறியதேவன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்றும்சொல்லியிருக்கிறாரே. அதனால் நாம் தைரியங்கொண்டு கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்… என்று சொல்லலாமே (எபி.13:5-6). கொந்தளிக்கும் கடலோ,கொடுங்காற்றோ, திகிலோ, காரிருளோ, ஆபத்தோ எதையும் கண்டு நீ லகங்காதே, பயப்படாதே.வல்லமையுள்ள அவர் தம்முடையவர்களைக் காக்க உண்மையுள்ளவராயிருக்கிறார். புயல் நீங்கி,நிலாவொளி தோன்றும்போது அவரது பிரசன்னத்தைத் தாழ்மையுள்ள யாவரும் தெளிவாக உணர இயலும்.