March

மார்ச் 17

மார்ச் 17

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.34:8).

காரல் ஆண்டர்சன் என்பவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றமடைந்த தேவ மனிதர்களில் ஒருவர். வேதத்தை நன்கு கற்றவர். ஆவியில் நிறைந்தவர். தேவனோடுகூட தாழ்மையாக நடந்து வருகிறவர். ஆண்டவரை எவ்வாறு தன் முழு நம்பிக்கையாகக் கொண்டார் என்பதை அவர் எனக்குத் தெரிவித்தார்.

சுவீடனில் அவர் சிறு பையனாக இருந்தபோது ஒரு நண்பருடன் மீன் பிடிக்கச் சென்றாராம். அந்த அனுபவத்தை கீழ்க்கண்ட முறையில் விவரிக்கிறார். ஒரு பெரிய மீனைப் பிடித்தோம். அந்த மீன் வெளியே வருகையில் நான் அதைப் படகில் இருந்தபடியே எட்டிப்பிடிக்க முயன்றேன். இந்த வேளையில் படகு அசைந்தது தூண்டில் கம்பு முறிந்து மீன் தூண்டில் முள்ளோடு தப்பியது. நான் அந்தத் தூண்டில் முள்ளை ஒருவரிடம் இரவல் வாங்கியிருந்தேன். ஆகவே நான் படகில் இருந்தபடியே அந்த முள் எனக்குத் திரும்பக் கிடைக்கவேண்டும் என ஜெபி த்தேன். அந்த இடத்தை அடையாளம் வைத்துக்கொண்டு நாங்கள் வீட்டிற்குத் திரும்பிவிட்டோம். அன்று இரவிலும் அந்த முள் கிடைப்பதற்காக ஜெபித்தேன். மீண்டும் காலையில் எழுந்து வலையை எடுத்துக்கொண்டு அதே இடத்திற்கு மீன்பிடிக்கச் சென்றோம். வலையைப்போட்டு இழுத்தோம். அதில் ஏதோ பாரமாகத் தெரிந்தது. முழுவதுமாக வெளியே இழுத்துப் பாhக்கும்போது அங்கே எங்களது பழைய மீன், தூண்டில் முள்ளுடன் இருப்பதைக் கண்டோம். சத்தமில்லாமல் மெதுவாக வலையை இழுத்தோம். அந்த மீனானது மறுபடியும் ஏரிக்குள் குதித்து விட்டது. ஆனால் அந்த வலையில் என்னுடைய பழைய தூண்டில் முள் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டோம்.

நம்மை நாம் ஒரு கேள்வி கேட்போம். நான் தூண்டில் முள்கிடைத்தால்மட்டும் போதும் என்று திருப்தியடைகிறேனோ அல்லது எனக்கு அந்த மீனும் சேர்ந்து கிடைக்கவேண்டும் என்று விரும்புவேனா?