ஐனவரி 22
ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது (பிர.10:17). தன்னலமின்மை, பிறருக்கு உதவுதல், பிறருக்கென விட்டுக்கொடுத்தல், தேவனுடைய இராஜ்யத்திற்கென உதவுதல் போன்றவற்றில் மெய்யான சந்தோஷத்தைக் கண்டுகொண்டோர் பலர். நல்ல வேலை, நல்ல முதலாளி, கைநிறைய சம்பளம், நிலையான உத்தியோகம் போன்றவை மகிழ்ச்சி தரும் என்போர் பலர். மனுக்குலத்தின் தோற்றம் முதற்கொண்டு இப்படிப்பட்ட இருதரப்பட்ட மக்களை நாம் கண்டு வருகிறோம். குழப்பமும், கொடுமையும் நிறைந்த இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட…