January

ஐனவரி 17

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள் (யாத்.14:15).

தமது பலத்த கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும்சர்வ வல்லமையுள்ள தேவன் தம் மக்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார்.அவர் சர்வ வல்லமையள்ளவர். உதவி செய்யக்கூடியவர் என்பதற்கு சிவந்த சமுத்திரத்தின் கரையில்உள்ளனர். பார்வோன் தன் பிரதானமான இரதங்களுடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வருகிறான்.இதைக் கண்ட இஸ்ரவேலர் கதிகலங்கி நிற்கின்றனர். இவர்களைத் தேவன் ஏன் எகிப்தைவிட்டுவெளியேற்றிக்கொண்டு வரவேண்டும்? இப்படிப்பட்ட திகிலான வேளையில் அவர்கள், தங்கள்தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டோமோ என்று நினைத்தனர்.

தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளைக் காட்டிலும்மேலானது. ஆனால் அவர் நம்மை இவ்வுலக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதும், நமக்கு நன்குஅறிமுகமானதும், நடந்து நடந்து தேய்ந்துபோனதுமான வழித்தடங்களில் நடத்த வேண்டியதுஅவசியமில்லை. யயமும், திகிலும் வரும்போது திகைத்து தம்மை விட்டு விலகிச்செல்லாதவர்களை உண்மையுள்ள தேவன் நடத்துவார் என்பது உறுதி.

இப்பொழுது உன் வாழ்க்கையிலும் செங்கடல் போன்றஓர் இக்கட்டு குறுக்கிட்டுள்ளது. இம்மட்டும் உன்னை நடத்தின தேவனைச் சந்தேகிக்காதே. அவர்கடந்த காலங்களில் எத்துணை அருமையாக நடத்தி வந்துள்ளார் என்பதை நினைத்துப்பார். உன்னால்முடிந்த வரையில் நீ தேவனை நம்பி, அவருக்குக் கீழ்ப்படிந்து வந்தாய். இப்பொழுதும் நீ பயப்படத் தேவையில்லை. மோசேக்குக் கட்டளையிட்ட தேவன் உனக்கும் கட்டளையிடுகிறவராக இருக்கிறார்.பயப்படாதிருங்கள். நீங்கள் நின்று கொண்டு, இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும்இரட்சிப்பைப் பாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும்காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் (யாத்.14:13-14)என்றான் மோசே.

புறப்பட்டுப் போங்கள் என்ற கட்டளை வருகிறது.கீழ்ப்படியவேண்டும். கடல் போன்ற நமது சூழ்நிலைகள் அவரால் முடியாதபெரும் பிரச்சனைஅல்ல. மோசேயின் விசுவாசத்தால் செங்கடலைப் பிளந்தார். நீயும், நானும்கீழ்ப்படியும்போது அவர் நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்கிறவராகவே இருக்கிறார்.உன் வாழ்வில் தோன்றும் கடல் பேனர்ற பிரச்சனைகள் அவருடையவை. ஏனெனில், நாம் அவரதுபிள்ளைகள். நாம் அதை எதிர்த்து முன்னேறிச் செல்வோம். புறப்பட்டுப் போவோம்.