January

ஐனவரி 15

“உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியம் உறுதியுமானவைகள்” (ஏசா.25:1)

‘உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக் கொள்ளுகிறவனுமாயிருக்க வேண்டும்” (தீத்து 1:9) என்கிற வசனம் ‘உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமுள்ளவைகள்” என்கிற ஏசாயாவின் வார்த்தைகளை எதிரொலிப்பதுபோல் தோன்றுகிறது. ‘தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்” (நீதி.30::5) எனக் கூறுகிறார் சாலமோன் ஞானி. அவரது வாக்குத்தத்தங்கள் யாவும் உண்மையுள்ளவைகள். வேதாகமம் முழுவதும் ஜீவனுள்ள தேவனுடைய உயிருள்ள வார்த்தைகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் ‘பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல…. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா?” (எண்.23:19).

தேவ வசனம் உண்மையுள்ளது. இழந்துபோன ஆத்துமாக்களைப் புதுப்பித்து, கிறிஸ்துவின் ஜீவனுக்குள் மறுபடியும் அக்கிரமக்காரனும் தேவனிடத்திற்குத் திரும்புகின்றனர் (ஏசா.55:6-7). விழுந்துபோன ஆத்துமா மனந்திரும்பிவர உணர்த்தும். சோர்ந்துபோனவர்களுக்கு மனமகிழ்ச்சியளிக்கும் (எரேமி.15:16). எல்லா வகையிலும் இது உண்மையுள்ளது. ஏனெனில், இதன் ஆசிரியர் உண்மையும் உத்தமமுமானவராயிற்றே.

மாரியும் உறைந்து மழையும் போன்றது என் வசனம் எனக் கூறியுள்ளார். அவர் விரும்புகிறதை அது செய்யும் (ஏசா.55:10-11). இவைகளோடே எதையாகிலும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது (வெளி 22:18). இதில் நமக்குப் போதுமான யாவும் உண்டு. இந்த உண்மையுள்ள சத்தியமான தேவனுடைய வசனத்தை நாம் சோதித்து, தியானித்து புர்pந்துகொள்ள வேண்டும். அப்பொழுது நாமும் யோசுவாவைப்போல், ‘கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஓரு வார்த்தையும் தவறிப்போகவில்லை: எல்லாம் நிறைவேறிற்று” (யோசு.21:45) எனக் கூறுவோம் என்பது தெளிவு.