March

பாகாலின் அழிவும், மாம்சத்திற்குரிய வைராக்கியமும்

2025 மார்ச் 31 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:18-28 “அப்படியே யெகூ சகல ஜனங்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலுக்குக் கொஞ்சமாய ஊழியஞ்செய்தான்; யெகூ அவனுக்கு மிகுதியாய் ஊழியஞ்செய்வான்” (வச. 18). இஸ்ரவேல் தேசத்திலிருந்து பாகால் வழிபாட்டை முற்றிலுமாக வேரறுக்க யெகூ எடுத்த ஒரு தந்திரமான நடவடிக்கையை இந்தப் பகுதியில் காண்கிறோம். யெகூ தன்னை ஒரு தீவிரமான பாகால் பக்தனாகக் காட்டிக்கொண்டு, இஸ்ரவேலிலுள்ள சகல பாகாலின் தீர்க்கதரிசிகளையும், ஆசாரியர்களையும் ஒரு மாபெரும் பலிக்காக அழைத்தான். அவனுடைய…

March

கத்தரிக்கும் தொழுவத்தில் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு

2025 மார்ச் 30 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:12-17 “அவன் எழுந்து சமாரியாவுக்குப் புறப்பட்டுப்போனான்; வழியிலே ஆட்டுமயிர்கத்தரிக்கிறவர்களின் தொழுவத்திலே அவன் வந்தபோது… யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரைக் கண்டு: நீங்கள் யார் என்று கேட்டான் (வச. 12,13). பாவத்தின் வேர்கள் எவ்வளவு தூரம் பரவியிருந்தாலும், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோடாரி அதைத் தேடிச்சென்று வெட்டி வீழ்த்தும் என்பதற்கு இந்தப் பகுதி ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். முந்தைய அதிகாரங்களில், ஆகாபின் குடும்பத்தோடு உறவு கொண்டாடியதால் அகசியா தன் ஜீவனை இழந்ததைப்…

March

உலகத்தின் வஞ்சகமும் தேவனுடைய மாறாத வார்த்தையும்

2025 மார்ச் 29 வேதபகுதி: 2 ராஜாக்கள் 10:1-11 “உம்முடைய சமுகத்தில் நாங்கள் அடிமைகள்; நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்…” ( வச. 5). ஆகாபுக்கு சமாரியாவில் எழுபது குமாரர்கள் இருந்தார்கள். தன் வம்சமும் அரசாட்சியும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஆகாபு தன் பிள்ளைகளை மிகவும் பாதுகாப்பாகப் பட்டணத்தின் பெரியோர்களிடம் ஒப்படைத்து வளர்த்து வந்தான். மனிதப் பார்வையில் ஆகாபின் சாம்ராஜ்யம் அசைக்க முடியாததாகத் தோன்றியது. ஆனால், தேவனுக்கு விரோதமாகக் கட்டப்படும் எந்தக் கோட்டையும் ஒருநாள்…

March

மாயையான அலங்காரமும் மாறாத நியாயத்தீர்ப்பும்

2025 மார்ச் 28 வேதபகுதி: 2 ராஜாக்கள் 9:30-37 “எகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; யேசபேல் அதைக் கேள்விப்பட்டபோது, தன் கண்களுக்கு மை யிட்டு, தன் தலையைச் சிங்காரித்து, பலகணியின் வழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள்” (வச. 30). மரணம் வாசற்படியில் வந்து நிற்கும்போது, ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்வான்? யேசபேலின் இந்தச் செயல் மனித இருதயத்தின் கடினத்தன்மையைக் காட்டுகிறது. நியாயத்தீர்ப்பின் கத்தி தன் கழுத்தை நெருங்குவதை அறிந்தும், மனந்திரும்புவதற்குப் பதிலாக அவள் தன் கண்களுக்கு மையிட்டுத் தன்னை அலங்கரிக்கிறாள். ஆத்துமா…

March

சமரசமில்லாத மனந்திரும்புதல்

2025  மார்ச் 27 வேதபகுதி: 2 ராஜாக்கள் 9:21-29 “யோராம் எகூவைக் கண்டபோது: எகூவே, சமாதானமா என்று கேட்டான். அதற்கு அவன்: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய சூனியங்களும் இவ்வளவு அதிகமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்” ( வச. 22). பாவத்தை அறிக்கை செய்யாமலும், அதை விட்டு விலகாமலும் தேவனோடு சமாதானமாக இருக்க முடியும் என்று எண்ணுவது மனித சுபாவத்தின் மிகப் பெரிய மாயையாகும். இஸ்ரவேலின் ராஜாவான யோராம், எகூவைச் சந்திக்க வந்தபோது “சமாதானமா?” என்று…

March

ராஜரீக அழைப்பு

2025 மார்ச் 26 வேதபகுதி: 2 ராஜாக்கள் 9:11-20 “அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தை எடுத்து, அந்தப் படிகளின்மேல் அவனுக்குக் கீழே விரித்து, எக்காளம் ஊதி: எகூ ராஜாவானான் என்றார்கள்” (வச. 13). தேவனுடைய வார்த்தை ஒருபோதும் வீணாகத் திரும்பாது. தீர்க்கதரிசியின் மூலமாய் ஊற்றப்பட்ட தைலம், எகூவின் இருதயத்தில் ஒரு புதிய அக்கினியை மூட்டியது. ஒரு மனுஷன் தேவ அழைப்பைப் பெற்றவுடன் அவன் எடுக்க வேண்டிய தீர்மானத்தையும், செயல்பட வேண்டிய விதத்தையும் இந்த எகூவின்…

March

கீழ்ப்படிதலில் காட்ட வேண்டிய அவசரம்

2025 மார்ச் 25 வேதபகுதி: 2 ராஜாக்கள் 9:1-10 “தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்” (வச. 3). தேவனுடைய பொறுமை முடிவற்றது அல்ல; அக்கிரமம் நிறைவடையும்போது, அவருடைய நியாயத்தீர்ப்பு மின்னல் வேகத்தில் இறங்குகிறது. பல ஆண்டுகளாக ஆகாபின் குடும்பம் செய்த அக்கிரமங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. எலிசா ஒரு வாலிபனான தீர்க்கதரிசியை அனுப்பி,…

March

விஷச் செடியின் நிழலில் ஒரு சிம்மாசனம்

2025 மார்ச் 24 வேதபகுதி: 2 ராஜாக்கள் 8:24-29 “அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள்” (வச. 26). நல்ல திராட்சைத் தோட்டத்தில் கசப்பான கனிகள் உருவாவது போல, யூதாவின் ராஜவம்சத்தில் ஒரு இருண்ட அத்தியாயம் தொடங்குகிறது. யோசபாத்தின் பேரன் அகசியா, தாவீதின் சிம்மாசனத்தில் அமர்ந்தாலும், அவனது இருதயம் சமாரியாவின் பலிபீடங்களிலேயே இருந்தது. ஒரு வருடம் மட்டுமே நீடித்த அவனது ஆட்சி,…

March

இருளின் ஆட்சிக்குள் எரியும் கிருபையின் தீபம்

2025 மார்ச் 23 வேதபகுதி: 2 ராஜாக்கள் 8:14-23 “கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை” (வச. 19). ஆசகேல் சீரியாவின் ராஜாவான பிறகு, யூதாவிலே யோசபாத்தின் குமாரனாகிய யோராமின் ஆட்சி தொடங்குகிறது. ஆனால், ஒரு நீதிமானின் மகனாக இருந்தும், அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்து, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். இதற்குக் காரணம், அவன் ஆகாபின்…

March

ஊடுறுவிப் பார்க்கும் தேவனின் கண்கள்

2025 மார்ச் 22 வேதபகுதி: 2 ராஜாக்கள் 8:7-13 “அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்” (வச. 13). சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதிப்பட்டிருந்தபோது, தேவனுடைய மனுஷனாகிய எலிசா தமஸ்குவுக்கு வருகிறான். ராஜாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஆசகேல் நாற்பது ஒட்டகங்கள் சுமக்கத்தக்க தமஸ்குவின் சகலவிதமான நன்மைகளையும் காணிக்கையாகக் கொண்டுவருகிறான். ஆனால், எலிசாவோ அந்தப்…