April

ஆசீர்வாதத்தின் உச்சமும் பெருமையின் வீழ்ச்சியும் 

2025 ஏப்ரல் 12 வேதபகுதி: 2 ராஜாக்கள் 15:1-12 “கர்த்தர் ராஜாவை வாதித்ததினால், அவன் மரணமடையும் நாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனையை விசாரித்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்து வந்தான்” (5). அசரியா தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்று வேதம் சாட்சியளிக்கிறது. அவனுடைய ஆட்சியின் தொடக்கக் காலம் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. அவன் பலப்படும்வரை கர்த்தர் அவனுக்கு ஆச்சரியமான விதத்தில் உதவிசெய்தார்.…

April

தகுதியற்றவர்கள் மேல் பொழியும் தேவ கிருபை

2025 ஏப்ரல் 11 வேதபகுதி: 2 ராஜாக்கள் 14:17-29 “இஸ்ரவேலின் பேரை வானத்தின்கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாஷின் குமாரனாகிய எரொபெயாமின் கையினால் அவர்களை இரட்சித்தார்” (27). இந்த அதிகாரத்தின் இறுதிப்பகுதி, இரண்டு ராஜாக்களின் முரண்பாடான சரித்திரங்களை நம்முன் வைக்கிறது. ஒருபுறம், வெற்றியின் பெருமையினால் வீழ்ந்துபோன யூதாவின் ராஜா அமத்சியா, தன் சொந்த ஜனங்களாலேயே சதி செய்யப்பட்டு, லாகீசுக்குத் தப்பியோடி அங்கே பரிதாபமாகக் கொல்லப்படுகிறான். தேவனை விட்டு விலகுகிறவர்கள், தங்களுக்குரிய பாதுகாப்பையும் சமாதானத்தையும் தாங்களே இழந்துபோகிறார்கள்.…

April

வெற்றியின் பெருமையும் வீழ்ச்சியின் துவக்கமும்

2025 ஏப்ரல் 10 வேதபகுதி: 2 ராஜாக்கள் 14:8-16 “நீ எதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்விப்பண்ணிற்று; நீ மகிமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடுவானேன் என்று சொல்லியனுப்பினான்” (10). உப்புக் பள்ளத்தாக்கிலே எதோமியரைத் தோற்கடித்த யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் இருதயம், வெற்றியின் களிப்பினால் பெருமையடைந்து மேட்டிமை கொண்டது. இந்த மாபெரும் வெற்றி கர்த்தரால் கொடுக்கப்பட்டது என்பதை மறந்து, அது தன் சொந்த பலத்தினால் வந்ததாக…

April

அரைகுறை ஒப்புவித்தல்

2025 ஏப்ரல் 9 வேதபகுதி: 2 ராஜாக்கள் 14:1-7 “அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்” (வச.3). யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் வாழ்க்கை, நமக்கு மிகவும் அவசியமானதும் அதேவேளையில் எச்சரிப்பானதுமான ஓர் ஆவிக்குரிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது. அமத்சியாவிடம் பக்தி இருந்தது, ஆனால் வைராக்கியம் இல்லை. அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான் என்று வேதம் சாட்சியளித்தாலும், அடுத்த வார்த்தையே ‘ஆனாலும்’ என்ற ஒரு பெரிய…

April

முழுமையான ஜெயமும்

2025 ஏப்ரல் 8 வேதபகுதி: 2 ராஜாக்கள் 13:14-25 “பின்பு அவனை நோக்கி: அம்புகளை எடுத்துக்கொள் என்றான்; அவன் எடுத்துக்கொண்டான்; அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடி என்றான்; அவன் மூன்றுதரம் அடித்து நின்றான்” (வச.18). இஸ்ரவேலின் மகா தீர்க்கதரிசியான எலிசா மரணப்படுக்கையில் இருக்கும்போது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனைக் காண வருகிறான். “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே” என்று கண்ணீர் வடிக்கிறான். யோவாஸின் கண்ணீரைக் கண்ட எலிசா,…

April

மாறாத தேவகிருபை

2025 ஏப்ரல் 7 வேதபகுதி: 2 ராஜாக்கள் 13:1-13 “யோவாகாஸ் கர்த்தரை நோக்கி கெஞ்சினான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் படுகிற ஒடுக்கத்தைக் கர்த்தர் பார்த்து, அவனுக்குச் செவிகொடுத்தார் ” (வச. 4). இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாஸின் ஆட்சிக்காலம் இருண்ட சரித்திரமாகும். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பொல்லாப்பானதைச் செய்து, விக்கிரக ஆராதனையில் மூழ்கியிருந்தான். தேவனுடைய கோபம் மூண்டது; தேசத்தைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். இஸ்ரவேல் கடுமையாக ஒடுக்கப்பட்டது. அந்தப் பெருந்துயரத்தின் உச்சகட்டத்தில், வேறு…

April

விசுவாசத்தின் வீழ்ச்சியும்

2025 ஏப்ரல் 6 வேதபகுதி: 2 ராஜாக்கள் 12:14-21 “அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ் … கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களிலும் ராஜாவின் அரமனையிலும் அகப்பட்ட பொன் முழுவதையும் எடுத்து, சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்” (வச. 18). கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும் உன்னதமான பணியோடு தொடங்கிய யோவாஸின் சரித்திரம், மிகவும் வேதனைக்குரிய ஒரு வீழ்ச்சியோடு முடிவடைகிறது. இந்த அதிகாரத்தின் மையப்பகுதியில் (வச. 15), ஆலய வேலையைச் செய்த தச்சர்களும் சிற்பிகளும் “உண்மையாய் நடப்பித்தார்கள்” என்று வாசிக்கிறோம். பணத்தைக்…

April

 மெய்யான அர்ப்பணிப்பும் சீர்ப்பொருந்துதலும்

2025 ஏப்ரல் 5 வேதபகுதி: 2 ராஜாக்கள் 12:1-13 “யோவாஸ் ஆசாரியர்களை நோக்கி: …ஆசாரியர்கள் …கர்த்தருடைய ஆலயத்தில் எங்கே பழுதுகாணப்படுகிறதோ, அந்தப் பழுதுகளைப் பார்க்கக்கடவர்கள் என்றான்” (வச. 4, 5). யோவாஸ் தன் ஏழாவது வயதில் ராஜாவாகிறான். அவனுடைய ஆட்சிக்காலம் ஒரு சிறப்பான குறிப்புடன் தொடங்குகிறது: “ஆசாரியனாகிய யோய்தா தனக்குப் போதித்த நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்” (வச. 2). இது ஒருபுறம் ஆசீர்வாதமாகத் தெரிந்தாலும், இதில் ஒரு பெரிய ஆவிக்குரிய ஆபத்தும் மறைந்திருக்கிறது.…

April

கிரீடமும் சாட்சியின் ஆகமமும்

2025 ஏப்ரல் 4 வேதபகுதி: 2 ராஜாக்கள் 11:12-21 “அவன் ராஜாவின் குமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி, கைகொட்டி: ராஜா வாழ்க என்றார்கள்” (2 ராஜாக்கள் 11:12). ஆறு வருடங்களாகத் தேசத்தைக் கவ்வியிருந்த பாவ இருள் விலகும் நேரம் வந்தது. ஏழு வயதான யோவாஸ் ராஜா சிம்மாசனத்தில் அமர்த்தப்படுகிறான். பிரதான ஆசாரியனாகிய யோய்தா, அவனுக்கு வெறும் அதிகாரத்தின் அடையாளமான ‘கிரீடத்தை’ மட்டும்…

April

அழிக்கப்பட முடியாத தேவவாக்குத்தத்தம்

2025 ஏப்ரல் 2 வேதபகுதி: 2 ராஜாக்கள் 11:1-3 “ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபாள் … அகசியாவின் குமாரனாகிய யோவாசைத் திருட்டாயாய் எடுத்து… அவன் கொல்லப்படாதபடிக்கு, அவனையும் அவன் தாதியையும் பள்ளியறையிலே ஒளித்துவைத்தார்கள்” (வச. 1, 2). யூதாவின் சரித்திரத்தில் மிகவும் இருண்ட காலகட்டம் இது. அத்தாலியாள் என்ற கொடிய ராணி, தன் அதிகார வெறிக்காகத் தன் சொந்தப் பேரப்பிள்ளைகளையே ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கிறாள். இது வெறுமனே ஒரு ராஜ்யத்தைக் கைப்பற்றும் அரசியல் சதி மட்டுமல்ல; இதன் பின்னணியில்…