March

சுயநலம் வேண்டாம்

2024 மார்ச் 16 (வேதபகுதி: 2 சாமுவேல் 19,15 முதல் 23 வரை) “(சீமேயி) இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்” (வசனம் 23). யூதா கோத்திரத்தாரின் அழைப்பை ஏற்று தாவீது மக்னாயீமை விட்டு புறப்பட்டு யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தான். தாவீதுக்கும் அவனுடைய மனிதர்களுக்கும் ஆற்றைக் கடக்க உதவி செய்யும்படி யூதா கோத்திரத்தாரும் கில்கால் வரைக்கும் வந்தார்கள். இந்தக் கில்கால் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.…

March

ஒருமனம்

2024 மார்ச் 15 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,11 முதல் 15 வரை) “நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்” (வசனம் 12). நாடு முழுவதும் தாவீது மீண்டும் ராஜாவாக வேண்டும் என்று பேச்சு இருந்தாலும், குறிப்பாக அப்சலோமுக்காக தன்னை முதலாவது நிராகரித்த தன் சொந்த யூதா கோத்திரத்தார் தன்னை எருசலேமுக்கு வரவேற்க வேண்டும் என்னும் முடிவு செய்தான். ஆனால் அவர்களோ…

March

நிலையான கொள்கையைப் பின்பற்றுதல்

2024 மார்ச் 14 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,9 முதல் 10 வரை) “(இஸ்ரவேலர்) இப்போதும் ராஜாவைத்திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக்கொண்டார்கள்” (வசனம் 10). அப்சலோமின் மரணத்துக்குப் பிறகு நாட்டு மக்கள் குழப்பத்தில் இருந்தார்கள். அப்சலோம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டான். அது நடைபெறவில்லை. ஆயினும் தாவீது மீண்டும் அரியணையில் அமரவில்லை. இந்தச் சூழ்நிலையில் மக்கள் தங்களது அறியாமையையும் தவறாக முடிவெடுத்ததையும் குறித்து ஒருவருக்கொருவர் விவாதங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அவர்கள்…

March

துக்கத்திலிருந்து மீளுதல்

2024 மார்ச் 13 (வேத பகுதி: 2 சாமுவேல் 19,1 முதல் 8 வரை) “ ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்” (வசனம் 2). தாவீது அப்சலோமின் இறப்பினிமித்தம் மிகுந்த துக்கம் அடைந்தான், இடைவிடாமல் அவனை நினைத்து அழுதுகொண்டிருந்தான். துக்கமும் அழுகையும் பல நேரங்களில் அவநம்பிக்கை மற்றும் சுயநலத்துடன் தொடர்புடையது. அன்பானவர்களைப் பறிகொடுத்த உறவினர்கள் எதிர்கால நம்பிக்கை அற்றவர்களாக அழுகிறதை நாமும் பல இடங்களில் கண்டிருக்கிறோம். இது தாவீதுக்காக போரிட்ட…

March

மெய்யான அன்பு

2024 மார்ச் 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,28 முதல் 33 வரை) “என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்” (வசனம் 33). அகிமாசோ அல்லது கூஷியோ இவர்களுடைய செய்தி என்னவாயிருந்தது என்பதைக் காட்டிலும் அப்சலோம் எப்படி இருக்கிறான் என்பதைக் குறித்தே தாவீதின் எண்ணம் இருந்தது. நாட்டின் மீது பற்றுள்ளவனாக அப்சலோமை அழிக்கப் படையை அனுப்பினான். அதேவேளையில் மகன்மீது அன்புள்ளவனாக “பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா” என விசாரித்தான். எந்தக் காலத்திலும், எத்தகைய…

March

வேகமும் விவேகமும்

2024 மார்ச் 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,19  முதல் 27 வரை) “ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்” (வசனம் 27). அகிமாஸ் விரைவாகச் செய்தி கொண்டு போவதற்காகப் பிரபலமானவன். அவன் ஏற்கனவே அப்சலோமின் திட்டங்களை தன் தந்தையிடம் கேட்டு, எருசலேமிலிருந்து தாவீதுக்குத் தெரிவித்தவன். இவனும் இவனுடைய தந்தையும் அரச குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். ஆகவே அப்சலோமின் மரணச் செய்தியை ராஜாவுக்கு நெருக்கமான ஒருவனிடம் ஒப்படைக்க யோவாப் விரும்பவில்லை.…

March

நினைவுகூருதல்

2024 மார்ச் 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,16 முதல் 18 வரை) “அப்சலோம் உயிரோடே இருக்கையில்: … ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்” (வசனம் 18). யோவாப் எக்காளம் ஊதினான். போர் முடிவுக்கு வந்தது. ஒரு நினைவேறாத கனவாகவே  அப்சலோமின் சகாப்தம் முடிவுபெற்றது . தன் அழகின் கவர்ச்சியையும், பெருமையையும் மூலதனமாகக் கொண்டு நேர்மையற்ற முறையில் களமிறங்கியவனின் பின்னே சென்ற இஸ்ரவேல் மக்களின் வழியும்…

March

சரியானதும் தவறானதும்

2024 மார்ச் 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,15) “அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்” (வசனம் 15).     அப்சலோம் அடித்துக் கொல்லப்பட்டான். யோவாப் மூன்று ஈட்டிகளை அவனுடைய மார்பில் பாய்த்தும் அவன் சாகவில்லை. அதன் பின்னர், அவனுடைய ஆயுததாரிகள் பத்துப் பேர் அவனை அடித்துக் கொன்றார்கள். ஆயினும் அப்சலோமைக் கொன்றதன் முழுப்பங்கும் யோவாபையே சாரும். அப்சலோம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை ஒரு படைவீரன் முதன் முதலில் யோவாபுக்கு…

March

நீதியும் அன்பும்

2024 மார்ச் 8 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,9 முதல் 14 வரை) “அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான்” (வசனம் 10). துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும் என்பதையும் (யோபு 20,5) அறியீர்களோ என்று சோப்பார் நமக்கு விவரிக்கிற வண்ணமாகவே அப்சலோமின் வாழ்க்கை சடிதியாக முடிவுபெற்றது. “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” (நீதிமொழிகள் 16,18…

March

சத்தியத்திற்குச் சாட்சி

2024 மார்ச் 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,6 முதல் 8 வரை) “யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்” (வசனம் 8). தாவீதின் சிறிய படையும், அப்சலோமின் மாபெரும் சேனையும் யோர்தான் ஆற்றின்  கிழக்கே, கீலேயாத் பகுதியைச் சேர்ந்த எப்பிராயீம் காடுகள் என அழைக்கப்பட்ட இடத்தில் மோதிக் கொண்டார்கள். இந்த இடத்தில்தான் போர் நடைபெற வேண்டும் என்பதை தாவீது தீர்மானித்திருந்தான். ஏனெனில், அதிக…