மாறாத அன்பு
2024 மார்ச் 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,5) “ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்” (வசனம் 5). ராஜாவாகிய தாவீது வழிதவறிச் சென்ற தன் மகனின் மீது கொண்டிருந்த அன்பு எவ்வளவு அதிகமாக இருந்தது. இந்த நேரத்திலும்கூட தாவீது அவனை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றான். அப்சலோம் ஒரு மன்னிக்க முடியாத கிளர்ச்சியாளன் என்பதை தாவீது அறிந்திருந்தான். அவன் தனது வாழ்க்கையையும் சிம்மாசனத்தையும் அபகரிக்கும்படி…