நாள் 32: நோய் மற்றும் மரணத்தை வென்றவர் மத்தேயு 9:18-26
இயேசுவின் இரண்டு வல்லமையின் நிகழ்வுகளுடன் மத்தேயு இந்த அதிகாரத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து, விசுவாசத்தை பிரதிபலிக்கும் ஒரு தலைவனையும் இரத்தப்போக்குள்ள ஸ்திரியையும் குணப்படுத்தி அதை வெளிப்படுத்துகின்றார். யாவீரு என்ற ஜெப ஆலயத்தின் தலைவனும், யூத மரபுவழியின் தூணுமானவன், இயேசு யோவானுடைய சீஷர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் நடுவே உட்புகுந்து, தனது மகளின் மரணஅவஸ்தையைக் குறித்த மிக முக்கியமான வேண்டுகோளை முன்வைத்தான். (மாற்.5:23). யாவீருவின் வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு நோய்வாய்ப்பட்ட பெண்மணியால் இயேசு சூழப்பட்டிருந்தார், பின்னர் அவளை “மகளே” என்று அழைத்தார் (மத்.9:22). இந்த நோய்வாய்ப்பட்ட சிறுபெண் அவர்கள் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது இறந்திருக்கலாம். (மாற்.5:35).
நோய்வாய்ப்பட்ட மகள்
இயேசு நோயையும் மரணத்தையும் மனிதனின் நிலையை மீட்டெடுக்க அடையாளமாகப் பயன்படுத்தினார். வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது அவரது முழுமையான இரட்சிப்பின் அறிகுறிகளாகும். அவர் தம்முடைய சீஷர்களைப் பிரசங்கிக்க மட்டுமல்லாமல், நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும், இறந்தவர்களை எழுப்பவும் அனுப்பினார் (மத்.10.8). பன்னிரண்டு ஆண்டுகளாக இந்தப் பெண் ஒரு பயங்கரமான நோயால் அவதிப்பட்டார், அது அவளை உடல் ரீதியாகப் பலவீனப்படுத்தியது மட்டுமல்லாமல், யூத வழக்கப்படி அவளைத் தீட்டுள்ளவளாக்கியது. அதனால் அவள் பொதுவான ஆராதனையில் இருந்து விலக்கப்பட்டாள், மற்றும் இந்த நோய் விவாகரத்துக்களுக்கும் ஒரு காரணமாக அமைகிறது. எவ்வளவு தனிமை மற்றும் அன்பை இந்தப் பெண் எதிர்பார்த்திருப்பாள் என்று கற்பனை செய்து பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
அவளுடைய விசுவாசம் மூடநம்பிக்கையில் தங்கியிருந்தது, இன்றும் வழிபாட்டு சின்னங்களில் மனிதர்கள் பார்ப்பதுபோன்று, இயேசுவின் ஆடைகளுக்குச் சக்தியுள்ளது என்று நம்பிக்கை வைத்தாள். அவளது விசுவாசம் பூரணமில்லாமலும், நடுக்கத்துடனிருந்தாலும், அவள் அவரின் வஸ்திரத்தொங்கலைத் தொட்டது அதற்குப் போதுமாயிருந்தது. (மத்.9:22). இருப்பினும் பகிரங்க வாக்குமூலம் இல்லாமல் இயேசுவை அவளைப் போகவிடவில்லை. அவள் நடுங்கியபடி வந்திருந்தாலும், நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் மீண்டும் அவரிடமிருந்து சென்றாள்.
மரித்த சிறுபெண் (மத்.9:18,19,23,26)
கொடுமையான பயத்தில் வாழ்ந்த யாவீருக்கு, இந்தச் சம்பவம் ஒரு பெரிய சவாலாக இருந்திருக்க வேண்டும். அவனது நம்பிக்கையும் பொறுமையும் சோதிக்கப்பட்டன. இயேசு அந்தப் பெண்ணை நோக்கி: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று கூறியபோது, ஒருவன் யாவீருவின் மகள் மரித்துவிட்டாள் என்ற தகவலைக் கொண்டுவந்தான். மீண்டும் அந்த தலைவனின் விசுவாசத்திற்கு ஒரு சவாலாக இருந்தது.
அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, அந்நாட்டின் வழக்கப்படி துக்கப்படுபவர்களைக் கண்டார்கள், அவர்கள் தாரை ஊதுகிறவர்களையும் மற்றும் இரைகிறவர்களையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஜனக்கூட்டம் மிகப்பெரிய சத்தமிட்டும், ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டும் இருந்தார்கள். (மத். 9:23). (தாரை -புல்லாங்குழல்- இசை எப்போதும் மரணத்துடன் தொடர்புடையதாயிருந்தது) இயேசு பெற்றோரைக் கருத்தில்கொண்டு, துக்கப்படுபவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்” (மத் 9:24) என்று அவர் சொன்னபோது அவருடைய வார்த்தைகளை அவர்கள் கேலிக்கூத்தாக்கியதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்றும் இயேசு கிரியை செய்வதற்கு முன்பு, சிலர் வெளியேற்றப்பட வேண்டும்.
யாவீரு தன் மகளின் மீது கையை வைக்கும்படி இயேசுவிடம் கேட்டிருந்தார் ( மத்.9:18), அதனால்தான் இயேசு அங்கு சென்று அவளைக் கையால் தொட்டு, அந்தப் பெண் தன் பெற்றோரின் மகிழ்ச்சிக்கும், குழுமியிருந்து ஜனங்களின் ஆச்சரியத்திற்கும் ஏற்க எழுந்திருந்தாள்.
இந்த நிகழ்சி வருத்தத்தையும் வேதனையையும் சமாளிக்க முழு விசுவாசத்துடன் இயேசுவுக்காகக் காத்திருப்பதை ஊக்குவிக்கிறது. ஏற்ற இறக்கமான விசுவாசம் மற்றும் போதிய உந்துதல் இல்லாமை தெய்வீக கிருபையை கட்டுப்படுத்துகின்றவை அல்ல. இந்த ஸ்திரியைக் குறித்த பகுதியில் இந்த பெண்ணைப் போலவே, மீட்பு என்பது நமக்கு விசுவாசமில்லாமல் பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட சாத்தியமாகிறது.
சுய பரிசோதனைக்கு:
இயேசு இன்றும் நோயுற்ற, கஷ்டத்திலுள்ள மக்களின் கதறலைக் கேட்கின்றார் என்பதை நாம் அறிந்த மகிழ்சியடையவேண்டும். குணப்படுத்தவும் நன்மை செய்யவும் இன்றும் அவருக்கு அதிகாரம் உண்டு.