Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 26

Webmaster by Webmaster
December 12, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாள் 26: புறஜாதி ஊழியக்காரனைக் குணப்படுத்துதல் மத்தேயு 8:5-13

எங்கள் கர்த்தரின் முதல் குணப்படுத்தும் அதிசயம் யூத தொழுநோயாளியின் மீது நடந்தது, இரண்டாவது புறஜாதி போர் வீரனுக்கு செய்யப்பட்டது. குஷ்டரோகி தன் சொந்த நலனுக்காக இயேசுவிடம் வந்தான், ஆனால் நூற்றுக்கதிபதி பிறனுடைய நலனுக்காக வேண்டினான். இந்த நிகழ்வில் நான்கு விஷயங்கள் முக்கியமானவை.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

ஒரு அசாதாரண உறவு (மத்.8:6)

ரோமானியப் பேரரசில் பாதிக்குமேல் மக்கள் அடிமைகளாக இருந்த ஒரு காலத்தில், பொதுவாக ஒரு அடிமையின் நலனை அநேகர் கவனிக்கவில்லை. “எஜமானருக்கும் அடிமைக்கும் பொதுவானது எதுவுமில்லை” என்று அரிஸ்டாட்டில் வெளிப்படையான கருத்து தெரிவித்தார். “ஒரு அடிமை உயிருள்ள கருவி, உயிரில்லாத கருவியைப் போலவே ஆத்துமா இல்லாத அடிமை.” எனவே நூற்றுக்கு அதிபதி தனது அடிமையைப் பற்றி பேசியபோது வாலிபன் அல்லது மகனுக்கான வார்த்தையை பயன்படுத்தியது ஆச்சரியமாக உள்ளது. ஒரு எஜமான் தன் அடிமையிடம் மிகவும் அசாதாரணமான அன்பை வெளிப்படையாகக் காட்டியது மிகுந்த அசாதரணமாக இருந்தது. ” ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான்;” (மத்.8:6).

அசாதாரண பக்தி

லூக்கா 7:1-10 ல் உள்ள இணையான வசனத்திலிருந்து வாசிக்கும்பொழுது, இந்த நூற்றுக்கு அதிபதி, நல்ல குணநலன்களின் காரணமாகவும், அவரின் நற்கிரியைகள் காரணமாகவும யூதர்களால் மதிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். ” நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான்;” (லூக்.7:5). புறமதத்தை விட உயர்ந்த யூத மதத்தின் நெறிமுறைகளால் நூற்றுக்கதிபதி ஈர்க்கப்பட்டு, கொர்நேலியுவைப்போல அவரும் ஒரு தேவனுக்குப் பயந்த புறஜாதியானராக இருந்தார். வில்லியம் பார்க்லே என்பார் புதிய ஏற்பாடு பேசும் நூற்றுக்கதிபதிகள் இங்கு மரியாதையுடன் குறிப்பிடப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறார்.

அசாதாரண பணிவு (மத்.8:8)

அவன் தாழ்மையானவன், அதேநேரத்தில் இரக்கமுள்ளவன். இயேசுவை நேரடியாக சந்திக்க அவன் தகுதியற்றவன் என்று உணர்ந்து, தனக்காகப் பேசும்படி மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் அவரிடம் ” நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்” (லூக்.7:4) என்றார்கள். ஆனால் நூற்றுக்கதிபதியோ ” ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல” என்றான். நாங்கள் யாரும் கிறிஸ்து நமக்காக நிற்க வேண்டும் என்பதற்கு இன்னும் தகுதியானவர்கள் அல்ல. இயேசு அதைச் செய்தால் அது அவருடைய தூய கிருiபியனால் மட்டுமே செய்கிறார்.

அசாதாரண விசுவாசம் (மத்.8:10)

“இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இயேசு பாராட்டத்தக்க வகையில் இதைக் கூறினார். ஒரு புறஜாதியானின் விசுவாசம் மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாக இருந்தது. இயேசுவுக்கு அந்த வேலைக்காரனைக் குணமாக்க முடியும் என்ற முழுவிசுவாசம் இருந்தது, அந்த விசுவாசத்தை நூற்றுக்கதிபதி பின்பற்றினான் (மத் 8:8). போர்வீரர்கள் அவனுக்குக் கீழ்ப்படிவதுபோல, திமிர்வாதம் இயேசுவின் கட்டளைக்குத் தலைவணங்கும் (மத்.8:9). ஏனென்றால் இயேசு பிதாவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்ததால், தன் பிதாவின் அதிகாரத்தைப் பயன்படுத்த முடிந்தது. ” ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்;” என்ற வார்த்தையில் நூற்றுக்கதிபதியின் விசுவாசம் வெளிப்பட்டது. “நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது” என்பதுதான் எங்கள் அனுபவத்தின் அளவு. நாம் உரிமையாக்கிக்கொண்ட அளவுக்கு மட்டுமே விசுவாசம் நம்மிடம் இருக்கும்.

பரலோகத்தைப் பற்றிய யூதர்களின் கருத்தாக்கம் ஒரு பெரிய பண்டிகையுடன் ஒப்பிடத்தக்கது (மத்.8:11). புறஜாதியான நூற்றுக்கதிபதியின் விசவாசத்தில் பரலோக ராஜ்யத்தின் கதவு பெரும் எண்ணிக்கையான புறஜாதியினருக்காகத் திறந்ததை இயேசு கண்டார், அதேநேரத்தில் தங்கள் இனத்தை கூறும் பல யூதர்களுக்கு அது விலக்கப்பட்டிருந்தது. (மத்.8.12). கிருபை மரபுரிமை அல்ல.

சுய பரிசோதனைக்கு:

தேவன் எதிர்பார்ப்பது போல என் வாழ்க்கையில் விசுவாசம் ஒரு மேல்நிலையிலுள்ளதா? (எபி.11:6).

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

April 4, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

March 16, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

January 1, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

December 26, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

December 25, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 346 - 1 தீமோத்தேயு 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?