Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 14

Webmaster by Webmaster
October 29, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாள் 14: இயேசுவும் பிரமாணங்களும் (மத்தேயு 5:17-20)

சீஷர்களின் தன்மையையும், அவருடைய இராஜ்யத்தில் வகிக்கும் பங்கையும் இயேசு சித்தரித்த பின்பு, அவர் ஒரு கேள்வியை தொடுத்து அதற்குப் பதிலளித்தார். அது சிந்தனையோடு கேட்போரிடமிருந்து தவிர்க்க முடியாததாக வந்திருக்கும்.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நியாயப்பிரமாணம் குறித்த அவரது நிலைப்பாடு

இயேசுவின் போதனை அந்தக் காலத்தின் மதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது மிகவும் தீவிரமானதாகவும் புரட்சிகரமானதாகவும் இருந்தது, யூத மதத் தலைவர்கள் அவரைப் பொறுப்பற்ற புரட்சியாளர்களில் ஒருவராக சித்தரித்து தற்போதுள்ள ஒழுங்கை தூக்கி எறியும் ஒரு மனிதனாகக் கண்டிருப்பார்கள். இதைத் தவிர்க்க, அன்றைய மதக் குழுக்களுடனான தனது உறவையும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன வெளிப்பாட்டையும் அவர் தெளிவுபடுத்தினார். அவரது புதிய கருத்துக்கள் அனைத்தையும் கண்டிக்கத்தக்கதாக கண்ட பழமைவாதிகளின் சந்தேகங்களைக் களையவும், புரட்சிகர நடவடிக்கைகளைப் பற்றிய இடதுசாரிகளின் கருத்துக்களை விரட்டவும் இயேசு விரும்புகிறார்.

இயேசுவின் பிரமாணத்தின் விளக்கம்

இயேசு பாரம்பரியத்தால் தீர்மானிக்கப்பட்ட பிரமாணங்களிற்கும், பரிசேயர்கள் வேதபாரகர்களுடைய எழுத்துக்களிற்கு தாம் உடன்பாடு இல்லாதவராக தெளிவுபடுத்தினார்.

இயேசு ஒரு உருவகஅழிப்பாளர் அல்ல. அவரது ஊழியம் ஆக்கபூர்வமானமாக இருந்ததேயல்லாமல் அழிவுகரமானதாக இருக்கவில்லை. அவர் தாமே மதித்த பிரமாணங்களை ஒழிக்க வராமல், அதை நிறைவேற்றி அதற்கு மதிப்பைக் கொடுக்க உதவினார். அவர் அதை அகற்றவில்லை, குறைக்கவில்லை. அவரது ஒரே நோக்கம் அதற்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்து, அதன் கோரிக்கைகளை விரிவுபடுத்தி அதன் நோக்கத்தையும் பயன்பாட்டையும் வலுப்படுத்துவதாகும்.

இயேசு பிரமாணத்தை எதிர்ப்பவர் அல்ல. ஒரு பிரமாணத்தையும் இலகுவாக்க அவர் அக்கறை காட்டவில்லை, மற்றும் ஜனங்களின் தார்மீக மற்றும் ஆன்மீக கோரிக்கைகளிலிருந்து விடுவிப்பதும் அவரது நோக்கமல்ல. மெய்யான இயேசுவின் சீஷன் பிரமாணத்தின் கீழ் தேவனுக்கு முன்பாக நில்லாமல், பிரமாணம் கூறும் தேவனுடைய நீதியின் நிறைவேறுதலாக நிற்கிறான். (ரோமர் 8). தேவ கிருபை மனிதனை நியாயப்பிரமாணச்சட்டத்திலிருந்து விடுவிப்பதில்லை – அவன் எப்போதும் „கிறிஸ்துவின் பிரமாணத்தின் கீழ் இருக்கிறான்” (1.கொரி.9:21). ஆனால் இப்போது பிரமாணத்துடனான நமது உறவு அன்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது, கடுமையான கிரியைகளை நிறைவேற்றுதல் அல்ல. கிருபையை ஒழுக்கக்கேடான நடத்தைக்கு ஒரு மறைவான திரையாக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

இயேசுவே நியாயப்பிரமாணத்தின் நிறைவு

இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றவும் உயிர்ப்பிக்கவும் வந்தார். அவர் அதற்குள் மறைந்திருக்கும் முழு ஆழத்தையும் வெளிப்படையாக்க விரும்பினார்.

ஒரு கலாச்சாரக் கண்ணோட்டத்தில், அவர் குறிப்பிடும் சட்டத்தின் பகுதிகளை அவர் நிறைவேற்றினார். நெறிமுறை அடிப்படையில், அவர் பிரமாணத்தை மிகுந்த மனசாட்சியுடன் நிறைவேற்றினார். ஆனால் அவர் பரிசேயர்களைப் போல விளக்கமளிக்கப்பட்டு, கடுமையாக்கப்பட்ட சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பை உருவாக்கினர். மாறாக அவர் சட்டபூர்வமான விதிமுறைகளிலிருந்து ஜனங்களை விடுவித்தார், அதேநேரம் பிரமாணத்தின் உண்மையைப் பலவீனப்படுத்தாமல் நிறைவேற்றினார். வரலாற்று ரீதியாக, அவர் தனது பிறப்பின்மூலம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார், இதனால் அவரைப்பற்றிய முன்னறிவிப்புகள் நிறைவேறின. ஒரு பிரதிநிதியாக, அவர் தனது முழுமையான கீழ்ப்படிதலின் மூலம் தனது வாழ்க்கையில் பிரமாணத்தை பூரணமாக நிறைவேற்றினார். தனது பலியினால் பூரண பாவபலியாக அதை நிறைவேற்றினார்.

உங்கள் சிந்தனைக்கு:

கடவுளுடைய வார்த்தையை நோக்கி இயேசு கொண்டிருந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பிரமாணத்தைப் பற்றி நாம் என்ன உணருகிறோம்?

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

April 4, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

March 16, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

January 1, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

December 26, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

December 25, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 302 - லூக்கா 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?