ஆதியாகமத்திலிருந்து தின தியானங்கள்” என்னும் தலைப்பில் இந்தத் தியான வரிசையில் வெளியிடப்படுகிற முதல் நூல் இது. இந்த நூலில் ஆதியாகமப் புத்தகத்திலிருந்து 95 தியானங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தியான நூலின் நோக்கம் எக்காலத்திலும் தலைசிறந்து விளங்குகிற புனித திருமறையின் மகத்துவத்தை விசுவாச மக்களுக்கு விளங்கச் செய்வதும், அதுகூறும் நபர்கள், விவரிக்கும் நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் படிப்பினைகளை தற்கால வாழ்க்கையுடன் பொருத்தி, புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் ஆலோசனைகளை அருளி அவர்களை நல்லதொரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ உற்சாகப்படுத்துவதே ஆகும்.
ரூத் வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய புத்தகம். ஆயினும் நமது வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது. இந்தச் சிறிய புத்தகத்தின் கதை நம்முடைய வாழ்க்கையோடு மிக நெருக்கமாக இருக்கிறதைக் காணமுடியும். பெரும்பாலான கிறிஸ்தவ இல்லங்களில் காணப்படுகிற எல்லா நிகழ்வுகளையும்...
Read moreDetails