Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

Webmaster by Webmaster
December 26, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15

அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6)

எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள் அல்லவா? ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்?

a. அது ஒரு தெய்வீக உத்தி. தேவனின் திட்டத்தில் யூதர்களுக்கு ஒரு சிறப்பு இடம் இருந்தது, அதுவும் முதலில் யூதர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும். இது அவர்களுக்காக முதலுரிமை அல்ல, ஒரு ஞானமான திட்டம்,

b. இயேசுவின் ஊழியம் யூதர்களுக்கான தகுதிகாண் காலத்தின் உச்சத்தை குறிக்கிறது,

c. புறஜாதியினருக்கு பிரசங்கிப்பதில் அப்போஸ்தலர்கள் இன்னும் பயிற்சி பெறவில்லை. அவர்களுக்கு இன்னும் இந்த பணிக்கான கூடுதல் பயிற்சி தேவைப்பட்டது,

d. இது ஒரு இராணுவக்கொள்கையாகும், செயல்ப்பாட்டுத்திறன்கொண்ட தளபதி வரையறுக்கப்பட்ட இலக்கை அறிந்திருப்பார், மற்றும் குறைவான குழுவோடு செயற்படும்பொழுது, தாக்குதலின் பரப்பளவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும். இயேசு எதிரிகளின் மைய கோட்டைகளில் தாக்குதல் நடத்த இந்த சிறிய மந்தைகளுக்குக் கட்டளையிட்டிருந்தார்,

e. அப்போஸ்தலர் 1:8 ல் பார்க்கின்றபடி சிறிது காலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. பின்னர் சீஷர்கள் “பூமியின் முடிவுபரியந்தமும்” அனுப்பப்பட்டனர்.

தெளிவாக வரையறுக்கப்பட்ட நிரல் (மத்.10:7-10)

இயேசு தம்முடைய சீஷர்களுக்கு விரிவான அறிவுறுத்தல்களைக் கொடுத்தார். உங்களுக்கான கட்டளை: வியாதியஸ்தர்களைக் குணமாக்குங்கள்;, மரித்தவர்களை எழுப்புங்கள், குஷ்டரோகிகளைச் சுத்திகரியுங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள் (மத்.10:8). இந்த நற்செய்தியை அவர்கள் இலவசமாகப் பெற்றதால் கட்டணமின்றி மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும். எனவே அவர்கள் ஊதியம் இல்லாமல் ஜெப ஆலயங்களில் போதித்த ரபீக்களுக்கு நிகராக உயர்த்தப்பட்டனர். அவர்கள் உலக விஷயங்களில் சிக்கக்கொள்ளாமல், தேவனை முழுவதுமாக சார்ந்து இருப்பதோடு, நற்செய்தி கேட்பவர்களின் இதயங்களில் கிரியைசெய்யும்பொழுது, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படவும் வேண்டியதில்லை என்றார். தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த அக்கறை முதலில் வரும்போது மற்றயவை அவர்களுக்குக் கூட கொடுக்கப்படும் (மத்.10:10). அவர்கள் தங்கள் கர்த்தரைப் போல ஏழ்மையாக இருந்து, அவர்களின் பிரயாணங்களைக் கவலையற்றதாக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கை முறை எளிமையாய்க் காணப்படவேண்டும்.

சில மிஷனரிகள் தமக்கும் ஒப்பீட்டளவில் ஏழைகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட தீர்க்கமுடியாத இடைவெளியைக் கொண்டுள்ளனர், கிறிஸ்துவிடம் அவர்களை வழிநடத்த வேண்டியவர்கள் தொன் கணக்கான பொருட்களையும் உபகரணங்களையும் மிஷன்பணித்தளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.

யூதர்கள் ரபீக்களைப் போஷிக்க வேண்டியிருந்தது, அதனால்தான் “ஒரு வேலையாள் தனது ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான்;” என்ற சொற்றொடரைப் மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். அவர்களை ஒரு வீட்டிற்குள் ஏற்றுக்கொண்டிருக்கும்போது அங்கே தங்கியிருக்கவேண்டும், சிறப்பானதைத் தேடி அலையக்கூடாது (மத்.10:11). ஆனால் மறுபுறம் அவப் பெயரைக் கொண்ட ஒரு வீட்டில் அவர்கள் தங்கியிருந்தால் அவர்களின் நற்செய்தியின், நம்பகத்தன்மை அசைக்கப்படும். இந்த அறிவுறுத்தல்கள் ஒரு குறிப்பிட்ட ஊழியப்பணிக்கு மட்டுமே தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ளவும், இது வரையறுக்கப்பட்ட கால அளவைக் கொண்டதும் என நாம் கவனிக்கவேண்டும். (லூக்.22:35-36 பார்க்கவும்)

ஆசீர்வாதங்களை வழங்குங்கள் (மத் 10:13-14)

நற்செய்தியைக் கூறுவோர் தங்களுக்கு விருந்தோம்பல் செய்பவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும். ” ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்”. இந்த வாக்கியம் ஒரு வீட்டில் விருந்தினர்களாக இருக்கும் அனைத்து தேவராஜ்ஜியத்தின் பணியாளர்களுக்கும் பொருந்தும். இரக்கமும் கவனிப்பும் நற்செய்தியாளர்களுக்கும் சுவிசேஷத்திற்கும் உகந்தது. ஆனால் சிலர் இரட்சிப்பின் நற்செய்தியை ஏற்க விரும்பவில்லை. அவர்கள் எடுத்த முடிவால், தேவனின் நியாயத்தீர்ப்பை தங்களுக்குத் தாங்களே தீர்மானிக்கிறார்கள்.

சுய பரிசோதனைக்கு:

அப்போஸ்தலர்கள் மிகப் பெரிய உற்சாகத்தோடும் உண்மையோடும் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். நாங்கள் இந்த நோக்கத்தை விட்டுவிட்டோமா?

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

April 4, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

March 16, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

January 1, 2023
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

December 25, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 33

December 23, 2022
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 33: இரண்டு குருடர்கள் மற்றும் பிசாசினால் கட்டப்பட்ட ஊமையன்; மத்தேயு 9:27-34 ஏசாயா தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்:" அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான், ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்". (ஏசா.35:5-6)....

Read moreDetails
Next Post
நாள் 365 – வெளிப்படுத்தின விசேஷம் 19-22

நாள் 360 - வெளிப்படுத்தின விசேஷம் 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?