Thursday, January 15, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 31

Webmaster by Webmaster
December 21, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS

நாள் 31: பாவிகளின் சிநேகிதன் மத்தேயு 9:9-17

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

அழைப்பு மற்றும் பதில் (மத்.9:9)

மாற்கு 2:14 ன் படி லேவி என்பது மத்தேயுவைக் குறிப்பது மிகவும் சாத்தியம். அவரது பெயரில் அவருடைய மூதாதையர்கள் ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிகிறது, ஆனால் அவரோ இந்த மரபுரிமையில் இருந்து வெகு தொலைவில் இருந்தார். ஒரு வெளிநாட்டு சக்திக்கு வரி வசூலிப்பவர் என்ற வகையில் அவர் மக்களால் வெறுக்கப்பட்டு, எதிரியாகக் கருதப்பட்டார். ரோமானியர்கள்; ஒரு சீரான விகிதத்தில் வரிகளை வசூலிக்க உரிமையை வழங்கினர், மற்றும் வரி வசூலிப்பவர் அதன் ஒரு பகுதியைக் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனால் எல்லோரும் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க முயன்றனர்.

இந்த துரோகியையும், மிரட்டலாளியையும் இயேசு மட்டும் தனது ராஜ்யத்திற்கான விலைமதிப்பற்ற முத்து என்று கண்டார். இந்த வரி வசூலிப்பாளரை சுவிசேஷகராக எவரும் அங்கீகரிக்கவில்லை. ” எனக்குப் பின்சென்றுவா!” என்ற வார்த்தையை மத்தேயு கேட்டு, தயக்கமின்றி பதிலளித்தார். ” அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்” என்று ஒன்பதாவது வசனம் கூறுகிறது. அவன் அநேகத்தை பின்னால் விட்டான், ஆனால் அதிசிறந்ததை வென்றான். தனது எழுத்து திறமையை அவருடைய ஊழியத்திற்கு அர்ப்பணித்தான். நம்முடைய அனுபவத்தையும் பயிற்சியையும் நாம் அவரைப் பின்பற்றுவதற்கு முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது, கர்த்தர் அதற்கு மதிப்பளிக்கின்றார்.

விருந்தும் உபவாசமும் (மத்.9:10-15)

இந்த வசனங்கள் ஒரு மனித நிகழ்வைக் கூறுகின்றன. மத்தேயு தனது நன்றியைக் காட்டும்படி ஒரு விருந்தை ஆயத்தம்செய்து, தன்னைப் போலவே வெறுக்கப்பட்ட அவரது சிநேகிதர்கள் பலரை அழைத்தார். இயேசு ஒரு துறவி அல்ல, ஒவ்வொரு விருந்திலும் அவரோடு இருப்பது மகிழ்ச்சியை அதிகரித்தது. சீஷர்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்தார்கள், மற்றும் அவர்களுடன் சேர்ந்த அனைவரும் இந்த மகிழ்ச்சியை அனுபவித்தார்கள்.

இயேசு வெறுக்கப்பட்டவர்களிடமும், தள்ளப்பட்டவர்களிடமும் பேசுவதாக பரிசேயர் கண்டு விசனமடைந்தார்கள், ஏனெனில் இவர்கள் பிரமாணத்திற்குத் தூரமானவர்கள். அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்ட பின்பு, “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று கூறி அவரது செயல்களை நியாயப்படுத்தினார் (மத்.9:13). ஒரு விருந்தில் பாவியின் பங்கேற்பில் எந்தவித பங்கமும் இல்லை, அதாவது ஒரு மருத்துவரிடம் ஒரு நோயாளி இருப்பதைப் போல (மத்.9:12). இயேசு எங்கு பெரிய தேவைகள் காணப்பட்டதோ, அங்கே எப்போதும் இருந்தார். (ஓசி. 6:6).

யோவானின் சீஷர்கள் மற்றொரு வாதத்தை முன்வைத்தனர்: ” உம்முடைய சீஷர்கள்; உபவாசியாமலிருக்கிறது என்ன?” என்று கேட்டார்கள். கர்த்தர் அவர்களை நோக்கி, ஒரு திருமண விருந்தில் உபவாசம் இருப்பது பொருத்தமற்ற செயல் என்பதையும் (மத்.9:15), மேசியா அவர்களிடையே இருக்கின்றார் என்பதையும் எடுத்துக்காட்டினார். சில சூழ்நிலைகள் நிலைமையை மாற்றுகின்றன, இயேசு சொன்னதுபோலவே சீஷர்கள் பின்னர் உபவாசம் இருந்தனர்.

கிழிதலும் பீறலும் (மத்.9:16-17)

சுவிசேஷத்தின் அடக்கமுடியாத மகிழ்ச்சியைப் பழைய பிரமாணங்களினால் பாதிக்கமுடியாதது என்பதை இயேசு தமது பதிலில் தெளிவுபடுத்தினார். யூத மதப் பிரமாணங்களை கிறிஸ்தவத்துடன் இணைக்கமுடியாது. பழைய துணிகளை சரிசெய்ய நீங்கள் புதிய துணிகளைப் பயன்படுத்தினால், ஒரு விரிசல் உருவாவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

யூத சட்டமான பழைய தோல் துருத்திகள் தேவனுடைய இராஜ்யத்தின் புதிய ரசத்தைச் சேகரித்துவைக்க முடியவில்லை. அவை பீறிக் கிழிக்கும். இயேசு கொண்டு வந்த புதிய உபதேசம் யூத மதத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை உடைந்தெறிந்தன. எனவே அவர் நற்செய்தியின் வெற்றியைத் தீர்க்கதரிசனமாக உரைத்து, தேவனின் கிருபையை பாவிகளுக்கு வெளிப்படுத்தினார்.

சுய பரிசோதனைக்கு:

தேவனுடைய இராஜ்யத்தின் புதிய திராட்சை ரசம் நம்முடைய நாட்களில் எத்தகைய பங்கை வகிக்கிறது?

Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post
நாள் 365 – வெளிப்படுத்தின விசேஷம் 19-22

நாள் 355 - 1 பேதுரு 1-5

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?