Monday, March 2, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 6

Webmaster by Webmaster
July 9, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS

நாள் 6: ஏரோதுவின் இராஜ்யம் (மத்தேயு 3:1-12)

யோசேப்பு தனது குடும்பத்துடன் எகிப்திலிருந்து திரும்பிவந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றன. புதிய நட்சத்திரம் ஒன்று யூதாவில் எரிந்தது பிரகாசிக்கிறது. யோவான் ஸ்நானகன் உள்நாட்டில் பழைய ஏற்பாட்டு எலியா போன்று பிரவேசித்தார். யோவான் ஸ்நானகன் இயேசுவின் உறவினர், இயேசுவைவிட சுமார் ஆறு மாதங்களும் மூத்தவர். அவரது குறுகிய, மாற்றக்கூடிய, சமரசமற்ற ஊழியம் ஒரு வருடத்திற்குள் மக்களை அடிஅஸ்திவாரங்கள் அசையும்படி மாற்றியது. 400 ஆண்டுகளாக அமைதியாக இருந்த தீர்க்கதரிசிகளின் குரல் அவர்மூலம் மீண்டும் பேசியது. அவரது செய்தி மிகவும் சக்தி வாய்ந்திருந்தபடியால் யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்த யோர்தான் பள்ளத்தாக்குக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் மக்கள் திரண்டனர்.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

மனிதன்

யோவான் ஸ்நானகன் அதிகாரம் கொண்ட ஒரு நிதானமான நபர். வலிமை மற்றும் சுய மறுப்பின் தாழ்மையால் அவர் அடையாளம் காணப்பட்டார். இயேசு அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” (மத்.11:11). ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை (மத்.3:3-5) அவர் தான் என்று கூறி தனக்குத்தானே பயன்படுத்தி, வரவிருக்கும் ராஜாவின் முன்னோடியாக இருப்பார் என்று கூறுகிறார் (மத்.3:3). இயேசு அவரைப் தீர்க்கதரிசிகள் வரிசையில் மேன்மையானவராகப் புகழ்கின்றார். அவர் காற்றினால் அடிக்கப்பட்டு வளைகின்ற ஒரு நாணல்போல ஒரு கோழை அல்ல, ஒரு உறுதியான மனிதர். அவர் ஒட்டக முடி உடை அணிந்திருந்தார், அவரது கச்சை வாரினால் செய்யபஇபட்டதயிருந்தது, மற்றும் வெட்டுக்கிளிகள், காட்டு தேன் உட்கொண்டார். (ஒப்பிடுங்கள்: லூக்.7:24-28, மத்.3:4, லூக்.7:24-28) யோவான் ஸ்நானகனின் மகத்தான செல்வாக்கைக் கண்டு ஏரோது மிகவும் பயந்தான் என்று யூத வரலாற்றாசிரியரான ஜோசபஸ் கூறுகிறார். இயேசு அவரை எரிந்து பிரகாசிக்கும் விளக்கு என்று அழைத்தார் (யோ.5.35). அவர் எவ்வித பயமின்றி, யாருக்கும் ஆதரவாகப் பிரசங்கிக்கவில்லை. அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தினரிடையே, அவர் வேதபாரகர்களையும், பரிசேயர்களையும் விரியன் பாம்புக் குட்டிகளே என்ற கடிந்துகொண்டார் (மத்.3:7). அவருடைய உயிருக்கே ஆபத்தாக இருந்தும்கூட, ஏரோது முன்னிலையில் அவர் தமது செய்தியின் தரத்தைக் குறைக்கவில்லை.

செய்தி

அவரது பிரசங்கத்தின் ஆரம்பமே மனந்திரும்புதலும் தேவனுடைய இராஜ்யம் நெருங்குகிறது என்பதைப் பற்றியதாகும். மனந்திரும்புதல் என்பது பாவத்தின்மேல் நமது அணுகுமுறைகளில் ஒரு தீவிரமான மாற்றமாகும் மற்றும் முற்றிலும் ஒரு புதிய சுபாவத்தைக் கொடுக்கிறது. தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மனந்திரும்புதல் முக்கியமானது. ஆபிரகாமை யூதர்கள் அழைப்பதை (மத்.3:9) யோவான் கடுமையாகக் கண்டித்தார்: ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்@ “உண்மையான மனந்திரும்புதல் ஒரு நேர்மையான மற்றும் நீதியான வாழ்க்கை முறையில் காணப்பட வேண்டும் (மத்.3:8).
ஞானஸ்நானம் என்பது சுத்திகரிப்பு, புறமதத்திலிருந்து யூதமார்க்கத்திற்கு மாறியவர்களிடம் யூதர்கள் வேண்டிநின்றார்கள். ஆனால் யோவான் தனது கோரிக்கையில் மிகவும் தீவிரமானவர். அவர் யூதர்களையே மனந்திரும்பி வரப்போகும் தேவகோபத்திற்கு தப்பிக்கொள்ளும்படி பிரசங்கித்தார் (மத்.3:10). இந்த செய்தி மதத் தலைவர்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்யிருக்காது என்பதை நாம் நன்றாக கற்பனை செய்து பார்க்கலாம்.

வாக்குத்தத்தம்

யோவான் ஸ்நானகன் மிகவும் அர்த்தமுள்ள ஞானஸ்நானம் பற்றி பேசினார் (மத்.3:11,12), இது பெந்தெகொஸ்தே நாளில் நிறைவேறியது. ஆவியின் மூலம் எதிர்பார்த்திருக்கும் விசுவாசிகள் ஞானஸ்நானத்தினூடாக ஒரே சரீரமாக இணைக்கப்படுவார்கள். (1.கொரிந்தியர் 12:13). ஆவி என்பதற்கான எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தையின் பொருள் “சுவாசம்” அல்லது “காற்று” ஆகும். ஆவியானவரின் வருகை புதிய ஆன்மீக வாழ்க்கையில் ஜீவனையும் மற்றும் வல்லமையையும் கொண்டுவந்தது. நெருப்பைப் பற்றிய குறிப்பு (மத்.3:11) அவருடைய வருகையில் அவரைத் தொழுதுகொள்ளுபவர்களுக்கு ஞானமும் சுத்திகரிப்பும் பெறுவர்.

உங்கள் சிந்தனைக்கு:

நான் பயம் இல்லாமல் தீமையை எதிர்க்கிறேனா, நான் நன்மைக்காக நிற்கிறேனா?

Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 190 - நீதிமொழிகள் 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • புலம்பல்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?