Monday, March 2, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 3

Webmaster by Webmaster
May 1, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS

நாள் 3: சாஸ்திரிகளின் வருகை (மத்தேயு 2:1-8)

இன்று இதை வாசிக்கும் உங்களுக்கு கிறிஸ்துமஸ் அல்ல என்றாலும், இந்த மூன்று ஞானிகளுடனும் அவர்கள் யாத்திரையில் இராஜாவாகவும் இரட்சகராகவும் பிறந்தவரை கண்டுகொள்ள இணைவோம்.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இராஜாவின் பிறந்த இடம் (மத்.2:1,5,6,8)

மரியாள் மற்றும் யோசேப்பின் சொந்த ஊரான நாசரேத் ஊரே குழநதை பிறக்கும் இடமாக நாம் எதிர்பார்த்திருப்போம். ஆனால் மேசியா பெத்லகேமில் பிறக்க வேண்டும் என்று மீகா தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார் (மீகா 5). அவரது அனைத்தையும் உள்ளடக்கிய, விரிவான தொலைநோக்கு பார்வையில் தேவன் அவரது குமாரன் பெத்லகேமில் பிறக்கும்படி அவரது பெற்றோர்கள் அரசாங்கத்தின் கட்டளைப்படி தங்கள் வரிகளை செலுத்த செல்லவேண்டியதாயிருந்தது. (லூக்.2:1-4). மத்தேயு தீர்க்கதரிசனத்திற்கும் அதன் நிறைவேற்றத்திற்கும் இடையிலான தொடர்பை வலியுறுத்திக் கூறுகிறார். (மத்.2:5-6).

நெரிசலான பெத்லகேமின்; சத்திரத்தில் மகிமையின் தேவன் ஒரு தொழுவத்தில் பிறந்தார். “தேவன் சிறிது காலம் குழந்தையாக ஆனார்.” அவருடைய தாழ்மையை தொழுதுகொண்டு அவரை வணங்கி ஆச்சரியப்படுவோம் !

சாஸ்திரிகளின் வருகை (மத்.2:1,2)

உலகம் முழுவதும் ஒரு தேடுதலின் வாஞ்சை ஏற்பட்டது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இரட்சிப்பின் வாஞ்சை யூதர்களுக்கு மட்டும் உரிய சிறப்பியல்பு அல்ல. டாசிட்டஸ் என்பார் யூதேயாவிலிருந்து ஆட்சியாளர்கள் வந்து கிழக்கு தேசத்தார் தங்கள் நாடுகள் பெரும் வல்லமையுடைய தேசமாக மாறும் என்று நம்பிக்கையுடையவர்களாக இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறார்.

இந்த சாஸ்திரிகளின் நீண்ட பயணம் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த சாஸ்திரிகள் மெய்யாகவே தேவனைத் தேடுபவர்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நட்சத்திரத்தைப் பார்த்த ஜோதிடர்கள். நட்சத்திரத்தைப் பற்றி யூகங்களைச் செய்வது எந்த முடிவுக்கும் வழிவகுக்காது. ஆனால் வயலில் உள்ள மேய்ப்பர்களுக்கும் தரிசனமாகியும், சாஸ்திரிகளுக்கு வானத்தில் அடையாளத்தைக் காட்டியும் தேவன் நடப்பித்த கிரியையை நாம் மறுக்கமுடியாது. இது தேவனின் வழி. அவர் தம்மை நாம் புரிந்துகொள்ளும் முறைக்கேற்தான வழியில் நடத்துகிறார். சாஸ்திரிகளின் அனுபவத்திலிருந்து தேவன் கொடுக்கும் ஒளியை நாம் பின்பற்றும்போது கிறிஸ்துவிடம் வரமுடியும் என்பதைக் அறிந்துகொள்ளலாம்.

ஆனால் அந்த அடையாளம் அவர்களை எருசலேமுக்கு அழைத்துச் சென்றதே தவிர, வேதவசனங்களே அவர்களை பெத்லகேமுக்கு கொண்டு வந்தது. தேவன் அசாதாரணமான, இயற்கைக்கு அப்பாற்பட்டதை தேவைப்படின் பயன்படுத்துவார், ஆனால் வசனத்திற்கும், பரிசுத்தமான முடிவுஎடுத்தலுக்கும் நம்மை அழைக்கிறார்.

ஏரோதுவின் துன்மார்க்கம் (மத்.2:3-8)

எருசலேமில் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பிய மிகவும் திறமையான ஏரோது இராஜா தனது சிம்மாசனத்திற்குப் போட்டி ஏற்படும் என்ற பயத்தில் மோசமாக செயல்ப்படுகிறார். ஒரு ராஜாவின் பிறப்பு பற்றிய வதந்தி அவரை மோசனமான அச்சத்தில் ஆழ்த்தியது. அவர் யூத சங்கத்தை அழைத்து, மேசியா எங்கே பிறக்க வேண்டும் என்று கேட்டார். அவர் பெத்லகேம் என்று அறிந்தபோது சாஸ்திரிகளை அழைத்து குழந்தையை பெத்லகேமில் கண்டுபிடித்தபின் தானும் வந்து வணக்ங்கும்படி அதை அறிவிக்க கட்டளையிடுகின்றார்.

ஏரோது இயேசுவுக்கு அஞ்சினார். யூதர்கள் அவரை தவறாக புரிந்து கொண்டனர். ஆனால் சாஸ்திரிகள் அவரை வணங்கினர். “வாருங்கள் நாமும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்துவை தொழுகொள்வோம்;!”

உங்கள் சிந்தனைக்கு:

தேவன் எனக்குக் கொடுக்கும் ஒளியை தேவனைக்குறித்த கொஞ்ச அறிவையுடைய சாஸ்திரிகள் மாதிரி நான் உண்மையோடு பின்பற்றுகிறேனா?

Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 122 - 2 நாளாகமம் 30-32

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • புலம்பல்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?