Monday, March 2, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 1

Webmaster by Webmaster
March 29, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS

நாள் 1: அவர் யாருடைய மகன்? மத்தேயு 1:1-17

கிழக்கின் பெரும்பாலான மக்களைப் போலவே, யூதர்களும் தங்கள் வம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஒரு யூதன் தனது ஆசாரிய வம்சாவளியை நிரூபிக்க ஆரோனின் வம்சவரலாறுவரை தெரிந்தால்தான் ஆசாரியராக தகுதி பெற முடியும். எங்களைப் பொறுத்தவரை, வம்சவரலாறு ஒரு முக்கிய பங்கைத் தீர்மானிக்கவில்லை. ஆனால் யூதர்களுக்கு இது மிகவும் முக்கியமானதொன்றாகும். மத்தேயு இயேசுகிறிஸ்துவை ஒரு வரலாற்று நாயகனாக எமக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறார், ஒரு கற்பனைப் பாத்திரமாகவல்ல. அதனால்தான் அவர் இயேசுவின் வம்ச வரலாற்றை நமக்கு முன்வைக்கிறார்.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

குறிப்பிடத்தக்க மூன்று நபர்கள்

மத்தேயு கிறிஸ்துவை ஆபிரகாம் மற்றும் தாவீதுடன் தொடர்புபடுத்துகிறார் (மத்.1:1). தாவீதின் குமாரன் என்று கூறுவதன்மூலம் இயேசுவை அரச வம்சத்துடன் நேரடியாக இணைத்து, யூதர்கள் எதிர்பார்க்கும் மேசியா என்பதை விவரிக்கிறார். ஆபிரகாமின் குமாரன் என்று கூறுவதன்மூலம் இயேசுவை எபிரேய மக்களின் மூதாதையருடன் முன்னிறுத்தி, யூதர்களுக்கு மட்டுமல்ல, பூமியின் அனைத்து வம்சங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று வாக்களிக்கிறார். ஆகவே யூத மதத்துடனான இயேசுவின் தொடர்பு அரச மற்றும் இனரீதியானது.

மூன்று வரலாற்று நெருக்கடிகள்

இந்த வம்சவரலாறு இஸ்ரேலின் வரலாற்றில் மூன்று முக்கியமான காலங்களாக மத்தேயுவினால் பிரிக்கப்பட்டுள்ளது.
a) ஆபிரகாம் முதல் தாவீது வரை (மத். 1:2-6ய)
b) தாவீதிலிருந்து சிறைப்பட்டுப்போனது வரை (மத்.1:6-11)
c) சிறையிருப்பிலிருந்து மேசியாவும் இரட்சகர் வரை (மத்.1:12-17)

ஒரு நினைவூட்டலாக, மத்தேயு எப்போதும் இயேசுவின் வம்சவரலாற்றைத் தலா 14 சந்ததிகளாக மூன்று பிரிவுகளாக உருவாக்கினார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். நமக்கு நன்கு தெரிந்த நான்கு இராஜாக்கள் இங்கு விடுபட்டிருக்கின்றனர் – அகசியா, யோவாஸ், அமத்சியா, யோயாக்கீன்

மத்தேயு இயேசுவின் சட்டப்பூர்வ வம்சாவளியை இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு மூலமாக குறிப்பிடும் அதே நேரத்தில், லூக்கா மரியாளின் வம்சாவளியைக் குறிப்பிடுகின்றார்.

மூன்று கவனிக்கத்தக்க பெண்கள்

நம்முடைய கர்த்தரின் நரம்புகளில் பாய்ந்த இரத்தத்தின் கலவை மனிதர்களுடன் தேவன் தம்மை அடையாளப்படுத்த இதைவிட சிறந்த சான்று எதுவும் இல்லை. இங்கே பட்டியலிடப்படும் ஆண்களும் பெண்களும் அவர்களின் பக்திக்கு அல்லது அவர்களின் சீரழிவுக்குப் பெயர்பெற்றவர்கள் ஆவர். ஒருபோதும் ஒரு பெண்ணின் யூதவம்சாவளியில் இல்லாதபோதும், இது பெண்களுக்கு எதிரான யூத பாரம்பரியத்தில் ஒரு சவாலாகும். நமது கர்த்தரின் பெண் மூதாதையர்களான தாமார், முறையற்ற விபச்சாரத்தில் குற்றவாளியானவள், மற்றும் விபச்சாரியான ராகாப், மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பத்சேபாள் அடங்குவர். இந்த பெண்கள் குழுவில் மோவாபில் இருந்து வந்த ரூத் என்பவரும் அடங்குவார். இது யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் இருந்த பிரிவினைச் சுவரைத் தகர்த்தது. எனவே மத்தேயு தனது ஆரம்ப செய்தியில் மறைந்திருந்த ஒரு புதிய இரட்சிப்பின் காலத்தைத் தெரிவித்தார். குறிப்பாக, மத்.1:16ல் பரிசுத்த ஆவியானவர் மூலம் இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு பற்றிய உண்மையை வெளிப்படுத்திக் காண்பிக்கின்றார்.

உங்கள் சிந்தனைக்கு:

நம்மிடையேயுள்ள சுயநல மற்றும் அழிந்துபோகிற ஜனங்களுக்காக பரலோகத்திலிருந்து வந்த பாவமற்ற கிறிஸ்துவின் தாழ்மையை நாம் கண்டு ஆச்சரியப்படக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 89 - 1 இராஜாக்கள் 1-4

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • புலம்பல்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?