ஏகாந்தம் என்பது தனித்திருத்தல் அல்லது தனிமை எனப் பொருள் படும். ஒருவர் தனித்திருந்தால் அது அவருக்கு ஒரு பெரும் பளுவைச் சுமப்பது போன்று இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஏகாந்தத் தன்மையுடையதாகவே உள்ளது. வாலிபர் தனித்து விடப்பட்டதாக எண்ணுகின்றனர். ஏழைகளும் ஏகாந்த உணர்ச்சியினால் வாடி வதைக்கப்படுகின்றனர். சில செல்வந்தருங்கூட இவ்வித உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்றனர்.
வயோதிகர்கள் இவ்வித ஏகாந்த உணர்ச்சியினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள்: “வாழ்வில் வாழ்ந்த பல அரிய வாய்ப்புகளைத் தவற விட்டோம், பல நண்பர்கள் நம்மைக் கைவிட்டனர், யாருக்கும் இந்தக் கிழக்கட்டை தேவை இல்லை; காடு வா, வா என்கிறது” என்று சொல்லி ஏகாந்த உணர்ச்சியினால் ஏக்கமடைகின்றனர். வியாதிப்பட்டு பலவீனமடைந்து பல கஷ்டங்களைத் தாங்களே தங்களது வயோதிபக் காலத்தில். அனுபவித்துத் தவிக்கின்றனர்.
எல்லோரும் இத்தகைய ஏகாந்தம் தகர்த்தெறியப்பட வேண்டுமென்றே விரும்புகின்றனர்.
குறிப்பாக கடவுளும் இதையே நமக்கு வாக்குறுதியாக அளித்துள்ளார். “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று உறுதியாகக் கூறியுள்ளார். இது ஒரு மாபெரும் வாக்குறுதியன்றோ? ஒரு மனிதனும் இவ்வித வாக்குறுதியினைக் கொடுக்க இயலாது; ஏனெனில் எம்மனிதனாலும் இதைச் செய்து முடிக்க இயலாது.
தேவன் மற்றவர்களை உதவிக்கு அனுப்புவதாகச் சொல்லாமல் தாமே” “உன்னைக்காக்காமல் விடுவதில்லை” என்கிறார். தம்மையே முழுவதுமாய் உனக்கு அர்ப்பணிப்பதாய்க் கூறுகின்றார். தேவனது பிரசன்னத்தை அளவிடக் கூடியவன் யார்? தேவன் தம்முடைய எல்லாவற்றையும் உனக்குக் கொடுப்பதாய் வாக்குறுதி கூறுகிறார்.
தேவன், நமது பெருந் தேவையைச் சந்தித்த நாளில் ஒன்றையும் தமக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. நமது பாவத்தினால்தான், நாம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுக் கைவிடப்பட்டு ஏகாந்த உணர்ச்சி அடைகின்றோம். ஆகவே தேவன் தாமே மண்ணுக்கு வந்து சிலுவையில் தம்மையே தியாகம் செய்து நமது பாவங்களுக்கு ஒரு முடிவு கட்டினார். இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்டு தனித்திருந்தது. நாம் நித்தியத்தில் தேவனிடமிருந்து பிரிக்கப்படாதிருக்கவேயாகும்.
தேவன் தமது நட்பினையும் அன்பினையும் நமக்கு அருளுகின்றார். ஆயினும் ஒருவரிடமும் பலவந்தமாய் அவர் உட்பிரவேசிப்பதில்லை. அவர் இலவசமாய் அருளும் கிருபை நிறைந்த இரட்சிப்பினை, அவரது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தினால் அவரை ஏற்றுக்கொள்பவர்களுக்கே அளிக்கிறார் “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன் நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசாயா 41:10) என்று கூறுகிறார்.
நமது நண்பர்களுடன் கூடி வாழ்வதாலோ, அல்லது வேதனை நீங்கி வலியின்றி சுகமுடன் வாழ்வதாலோ ஏகாந்த உணர்ச்சி நீங்கி மகிழ்வுடன் வாழ இயலாது. இவைகள் நமக்குத் தேவைதான்; ஆனால் உண்மையான ஆறுதல் நாம் தேவனது பிரசன்னத்தில் வாழ்வதாலேயே கிட்டும். ஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இன்றே உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீராக. “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” (அப். 16:31)