சபை – கிறிஸ்துவின் சரீரம்

January 25th, 2012 by Kesaran

தேவனுடைய சபை

January 24th, 2012 by Kesaran

எது தவறு ?

January 23rd, 2012 by Kesaran
  • நீ செய்தது பெரிய தவறு இல்லைதான் ஆனால் சிறிய தவறுக்கு பின்னர் வருவதுதான் பெரிய தவறு.
  • நீ சொன்னது பொய் அல்ல என்பது உண்மைதான் ஆனால் அந்த உண்மையை சொன்னதற்கு நீ சொன்ன காரணம் பொய்யானது.
  • நீ மற்றவரை விழவைக்கவில்லை என்பது உண்மையே ஆனால் மற்றவரை விழாமல் நிற்க வைக்கும் வாய்ப்பை நீ பயன்படுத்தவில்லை.
  • நீ செய்த தவற்றை தவறு என்று ஒத்துக்கொண்டாய் ஆனால் அதற்காக சற்றும் நீ வருந்தாதது பெரிய தவறு.
  • பிறருடைய தவறுகளை நீ நன்றாகவே சுட்டிக்காட்டுகிறாய் ஆனால் உன் தவறு மட்டும் உன்னை உறுத்தவில்லையே.
  • நீ செய்த நல்லவைகளை பிறர் நினைக்கவில்லை என்று     வருந்தாதே. நீ செய்த தீமைகளைக்கூட பிறர் நினைக்கவில்லையே.
  • நீ சொன்ன உண்மையை பிறர் நம்பாமல் போனதற்கு நீ பலமுறை சொன்ன பொய்களும் காரணமாயிருக்கும். நீ காட்டின நல்வழியில் பிறர் நடக்கவில்லை என வருந்தாதே அந்த வழியில் நீ நடந்தால் அதை எண்ணி மகிழ்ச்சியாயிரு.
  • மற்றவர்கள் உன்னை மதிக்கவில்லை என்பதுதானே உன் வருத்தம் பின்னர் ஏன் நீயும் அதே தவறைச் செய்கின்றாய்.
  • உன்னுடைய தவறை நீ நியாயப்படுத்தும்போதெல்லாம் மீண்டும் அந்த தவறை செய்ய ஆர்வமாயிருக்கிறாய் என்று பொருள்.
  • நீ செய்த தவறை தவறு என்று உணர மறுக்கின்றாய் ஏனென்றால் நீ ஒரு தவறான மனிதன்.

 

(ஜீவநீரோடை புத்தகத்திலிருந்து…)

கிறிஸ்துவின் நியாயாசனம்

January 22nd, 2012 by Kesaran

Ro.14:10

இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

மத்தேயு 23:12

January 21st, 2012 by Kesaran

நாவு

January 20th, 2012 by Kesaran

யாக்கோபு 3:1-12

நீதி 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.  உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

நீதி 19:9 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான். பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

நாவு – யாக்.1:19 கேட்கிறதற்கு தீவிரம் – பேசுகிறதற்கு பொறுமை – கோபிக்கிறதற்கு தாமதம்

(1) கடிவாளம் – குதிரை (யாக்.3:2-3)

(2) சுக்கான் – கப்பல் (யாக்.3:4)

(3) சிறிய நெருப்பு – காடு (யாக்.3:5-6)

(4) சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர் வாழும் ஜெந்துக்கள் (யாக்.3:7)

(5) விஷம் (யாக்.3:8)

(யாக்.3:9-12)

யாக்கோபு 3:13-17

1பேது 4:8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். அன்பு திரளான பாவங்களை மூடும்.

சங் 141:3 கர்த்தாவே, என் வாய்க்குக்காவல் வையும். என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

ஆவிக்குரிய புதிதாக்கல்

January 20th, 2012 by Kesaran

நெகேமியா 3ம் அதிகாரம்

- நமது அனுதின வாழ்வில் புதிதாக்கல் முக்கியமானது.

- ஓவ்வொரு பொருளும் சீர்படுத்தப்படுகிறது. (வீடு, தெரு, பாலம்,…)

 

நெகே.3:1 – ஆட்டு வாசல்

- ஆடுகள் பலியிடப்படுவதற்காக இந்த வாசலினால் கொண்டுவரப்படுகின்றன.

- ஓவ்வொரு கிறிஸ்தவனும் முதலில் இந்த வாசலைக் கடந்து செல்லவேண்டும்.

 

நெகே.3:3 – மீன் வாசல்

- அசெனாவின் குமாரர் கட்டினார்கள்

- கலிலேய மீனவர்கள் மீன்களை இவ்வாசல் வழியாகக் கொண்டு வந்தார்கள்.

- நாம் ஒவ்வொருவரும் மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாயிருக்கிறோம்.

 

நெகே.3:6 – பழைய வாசல்

- பழையவைகளை நோக்கிப் பார்க்கவேண்டும்.

- மேகம் போன்ற திரளான சாட்சிகள்

 

நெகே.3:13 – பள்ளத்தாக்கின் வாசல்

- பழைய வாசலுக்கும் பள்ளத்தாக்கின் வாசலுக்கும் தூரம் அதிகம்

- இருளின் பள்ளத்தாக்கு…

- சோதனைகள் ஏற்படுகின்றன.

 

நெகே.3:13 – குப்பைமேட்டு வாசல்

- விசுவாசம் வரள வாழ்க்கையில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படவேண்டும்.

 

நெகே.3:15 – ஊரணி வாசல் (ஊற்று)

- பள்ளத்தக்கை கடந்து, குப்பைகளை துப்பரவு செய்யும்போது ஊற்றுக்கள் புறப்படும்.

- பரிசுத்த ஆவியானவரின் வல்லமை தேவபலத்தில் வாழச்செய்கிறது

 

நெகேமி.3:26 – தண்ணீர் வாசல்

- வசனத்தினால் நம்மைக் கழுவவேண்டும்

 

நெகே.3:28 – குதிரை வாசல்

- வருகைக்கு ஆயத்தமாகுதல்

- முடிவை நோக்கி ஓடுதல்

 

நெகே.3:29 – கிழக்கு வாசல்

- வருகையை எதிர்நோக்குதல்

- வாசல் பூட்டப்பட்டிருக்கிறது

 

நெகே.3:31 – மிப்காத் வாசல்

- கிரியைக்குப் பலன்

Words of Life TAMIL (தமிழ்)

January 19th, 2012 by Webmaster

Good News TAMIL (தமிழ்)

January 18th, 2012 by Webmaster

Words of Life TAMIL (தமிழ்)

January 17th, 2012 by Webmaster

10 கன்னிகைகள்

Mat 25:1 – 13

அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக்  கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.  அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.  புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை.  புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.  மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.  நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.  அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.  புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.  புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.  அப்படியே அவர்கள் வாங்கிப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்.  ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.  பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.  அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

கதவருகில் நிற்கும் ஜீவாதிபதி

December 31st, 2011 by Kesaran

டிசம்பர் 31
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்@ ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி 3:20)
இன்னொரு ஆண்டின் முடிவிற்கு நாம் இப்பொழுது வந்திருக்கிறோம். உள்ளே வருகிறதற்கு அனுமதிகோரி மனிதரின் வாசற்படியில் பொறுமையுடன் கர்த்தர் இன்னும் நின்றுகொண்டிருக்கிறார். வெகுநேரம் அவர் வெளியிலே காக்கவைக்கப்பட்டிருக்கிறார். வேறு யாராக இருப்பினும் நம்பிக்கை இழந்து, திரும்பி வீட்டிற்குப் போயிருப்பார். ஆயின் நமது இரட்சகர் அங்ஙனம் செய்யார். அவர் நீடிய பொறுமையுடையவர், ஒருவரும் கெட்டுப்போகக் கூடாதெனக் காத்திருக்கிறார். ஒருநாள் கதவு வேகமாய்த் திறக்குமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பிற்கு பதில் கூற மறுப்போரைக் காணும் வேளையில் நாம் வியப்படைகிறோம். அயலகத்தார் கதவைத் தட்டுவார்கள் எனில், உடனடியாக கதவு திறக்கப்படுகிறது. ஒருவேளை விற்பனையாளன் கதவைத் தட்டியிருந்தால், வீட்டில் யாராவது ஒருவர் கதவைத் திறந்து, எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று சொல்லுவார். ஒருவேளை நாட்டின் குடியரசுத்தலைவரோ மாநிலத்தின் ஆளுநரோ வந்திருந்தால், வீட்டில் இருப்போர் முந்தியடித்துக் கொண்டுபோய் கதவைத் திறப்பார் என்பது நிச்சயம். அவரை வரவேற்பது தாம் பெற்ற நற்பேறு என்று கருதுவார். ஆயின் படைப்பாளரும், தாங்குகிறவரும், மீட்பரும் கதவருகில் நிற்கும்போது பாராமுகத்தோடு அமைதியாயிருப்பது மிகுந்த விநோதமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைக் கொள்ளையிட வரவில்லை, நமக்குக் கொடுக்கவே வந்திருக்கிறார் என்பதை அறிந்தும் மனிதன் அவருக்கு மறுப்புரை கொடுப்பது பகுத்தறிவற்ற செயலாகும். அவர் நீடுவாழ்வை மிகுதியாக நல்கவே வந்திருக்கிறார்.
வானொலி இறையியல் சொற்பொழிவாளர் ஒருவரிடம் இரவில் வெகுநேரம் கழித்துத் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டார். தனது வீட்டிற்குச் செல்லும் முன்னர் அவரைச் சந்திக்க அனுமதி கோரினார். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதே என்று கருதி, பிரசங்கியார் அவர் வருவதைத் தடைசெய்யவேண்டும்மென்று நினைத்தார். பல காரணங்களைக் கூறியும் அவர் வற்புறுத்தவே கடைசியில் இணங்கினார். பார்வையாளர், வானொலி ஊழியத்திற்குச் செலவாகும் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு உடனடியாகச் சென்றுவிட்டார். அப்பொழுது அந்தப் பிரசங்கியார், அவரை வீட்டிற்கு வரவேற்றது எவ்வளவு நல்லது என்று சொல்லி மகிழ்ந்தார்.

ஜோ பிலிங்கோ இதனை உயிரூட்டம் உடைய கதையாக வடிவமைத்துக் கூறியுள்ளார். வீட்டில் உள்ளோர் உரையாடிக் கொண்டிருந்தனர். வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் திடீரெனக் கேட்டது. யாரோ வந்திருக்கிறார் என்று ஒருவர் கூறினார். மற்றொருவர் குதித்தெழுந்து ஓடிச்சென்று கதவைத் திறந்தார். வேறோருவர், வந்திருப்பது யார்? என்று வினவினார். வாசற்கதவு அருகிலிருந்து பதில் வந்தது. இறுதியில் வீட்டின் தலைவர் அவரை உள்ளே வரச்சொல் என்று கத்தினார்.

சுருங்கச் சொன்னால், இதுவே நற்செய்தியாகும். கவனித்துக் கேளுங்கள்! யாரோ ஒருவர் கதவருகில் நிற்கிறார். அவர் யார்? அவரே ஜீவாதிபதியும் மகிமையின் கர்த்தருமாவார். அவரே நமக்குப் பதில் ஆளாக மரணத்தை ஏற்றுக்கொண்டு, அடக்கம்செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர். மகிமையில் முடிசூட்டப்பட்டவராக இப்பொழுது திகழ்கிறார். தம்முடைய மக்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வரப்போகிறவர் அவரே, அவரை உள்ளே வரும்படியாக அழைப்பீர்களாக.

தகுதியற்றோரிடம் காட்டும் கிருபை

December 30th, 2011 by Kesaran

டிசம்பர் 30

யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். (2.சாமு.9:1)

தாவீதின் உயிரைக் குடிக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்த சவுலின் பேரனே மேவிபோசேத் என்பவன். தாவீது அரியணையில் அமர்ந்த பின்னர், அவனுடைய எதிரியின் குடும்பத்தைச் சார்ந்த மேவிபோசேத் கொன்று போடப்பட்டிருக்கவேண்டும். மேலும், அவன் நடக்கக்கூடாத முடவன். அவன் சிறுவனாக இருந்தபோது அவனைப் பராமரித்த தாதி அவனைக் கீழே போட்டுவிட்டாள். இப்பொழுது அவன் வேறொருவனுடைய வீட்டிலே வசித்துக்கொண்டிருந்தாள். மேய்ச்சல் இல்லாத இன்னும் பொருளுடைய லோதாபாரில் குடியிருந்தான். அவன் வறுமையுற்றிருந்தான்  என்பதை லோதேபார் என்னும் பெயர் வெளிப்படுத்துகிறது. லோதேபார் யோர்தான் நதிக்குக்   கிழக்கே இருந்த காரணத்தினால்   தேவனுடைய வாசஸ்தலமாகிய எருசலேமை விட்டுத் தொலைதூரத்தில் இருந்தது. தாவீதின் தயவு பெறத்தக்க ஏதொரு சிறப்பும் மேவிபோசேத்தினிடத்தில் காணப்படவில்லை.

இவையாவும் இவ்விதமாக இருந்தபோதிலும், தாவீது அவனைக் குறித்து விசாரித்தான். அவனைத் தேடி ஆட்களை அனுப்பினான். அரண்மனைக்குக் கொண்டுவந்தான், அச்சம்கொள்ளத்தேவையில்லை என்று உறுதியளித்தான், அவனுக்குப் பணிவிடைசெய்ய ஒரு பரிவாரத்தையே கொடுத்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அரசனின் பந்தியிருப்பில், இளவரசர்களுக்கு அளிப்பது போன்று நிரந்தரமாக ஓரிடத்தைக் கொடுத்து அவனைக் கனப்படுத்தினான்.

இவ்வகையில் இரக்கத்தையும், கிருபையையும், பரிவையும்   தாவீது அவனிடத்தில் காணப்பிக்கத்த வகையில் என்ன மேன்மையை அவன் உடையவனாயிருந்தான் ? அதன்விடை „யோனத்தான் நிமித்தம்“ என்னும் சொற்றொடரில் அடங்கியிருக்கிறது. மேவிபோசேத்தின் தகப்பனாகிய யோனத்தானின் குடும்பத்தாருக்குத் தயiபாராட்டுவதை நிறுத்திவிடமாட்டேன் என்று தாவீது அவனோடு உடன்படிக்கை செய்திருந்தான். இஃது நிபந்தனையற்ற கிருபையின் உடன்படிக்கையாகும் (1.சாமு.20:14-17).

முதல்முறையாக அரசனின் சமுகத்திற்கு கொண்டுவரப்பட்டபோது மேவிபோசேத் இதனை உணர்ந்தான். அரசனின் அடிமுன்னர் வீழந்து, „செத்தநாய்“ என்று தன்னைத் தாழ்த்திப் பணிந்து கொண்டான். இப்பேற்றைப் பெறுதற்குத் தனக்கு எவ்விதத்திலும் தகுதியில்லை என்பதை இங்ஙனம் அவன் அறிக்கை செய்தான்.

இந்தச் சித்திரத்தில் நம்மை இருத்திப் பார்ப்பதில் எவ்விதச் சிரமமும் இல்லை. கலகக்காரர்களும் பாவம் நிறைந்தவர்களுமாகிய இனத்தில் பிறந்து மரண ஆக்கினைக்குக் கீழாயிருந்தோம். ஒழுக்கத்தின் அடிப்படையில் உருவற்றுப்போனவர்களாகவும், பாவத்தினால் முடமாகிப்போனவர்களாகவும் இருந்தோம். மேய்ச்சல் அற்ற நிலத்தில் வாழ்ந்தோம். ஆவிக்குரிய வகையில் பசிப்பிணி பிடித்தவர்களாயிருந்தோம். நாம் உதவியற்றவர்களும், வறுமையுற்றவர்களும், அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தோம். அதற்கும் மேலாக தேவனைவிட்டுத் தூரமானவர்களாகவும், கிறிஸ்து அற்றவர்களாகவும், நம்பிக்கை அற்றவர்களாகவும் இருந்தோம். தேவனுடைய அன்பைப் பெறுவதற்கும் அவருடைய தயவை அடைவதற்கும் நம்மிடத்தில் எவ்விதத் தகுதியம் இல்லாதிருந்தது.

இருந்தபோதிலும், தேவன் நம்மை நாடினார், கண்டடைந்தார், சாவின் அச்சத்திலிருந்து விடுவித்தார், விண்ணுலக நற்பேறுகளால் ஆசீர்வதித்தார். அவருடைய விருந்துசாலைக்கு அழைப்பித்து தமது நேசத்தின் கொடியால் நம்மைத் தழுவிக்கொண்டார்.

இதனை அவர் செய்ததன் காரணம் யாது? கிறிஸ்துவின் நிமித்தம் அவர் இதைச் செய்தார்.  இவ்வுலகத்தோற்றத்திற்கு முன்னரே, அவருடைய கிருபை மிகுந்த உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்துவுக்குள்ளாக அவர் நம்மைத் தெரிந்துகொண்டதினாலே இதைச் செய்தார்.

இதற்கு உகந்த பதில், அவர் திருவடி முன்னர் தாழவீழ்ந்து, „செத்தநாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம்?“ என்று கூறிப் பணிந்துகொள்வோம்.

கீர்த்தனைகளும் ஞானப்பாட்டுகளும்

December 2nd, 2011 by Kesaran

டிசம்பர் 2

சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, (எபேசி.5:19)

இங்கு பாடல் பாடுதல் ஆவியின் நிறைவோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது. ஆவியின் நிறைவினால் பாடல்கள் எழும் என்பதன் அடிப்படையில் இங்ஙனம் கூறப்பட்டிருக்கிறது. ஆகவேதான், வரலாற்றில் காணும் கிறிஸ்தவ மறுமலர்ச்சிகள் யாவும் பாடல்களோடு இணைந்து வந்துள்ளனபோலும். வேல்ஸ் மறுமலர்ச்சி இதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கிறிஸ்தவர்களைப்போன்று வேறு எவரும் இவ்வளவாகப் பாடினதில்லை. கிறிஸ்தவர்கள் பெற்றுள்ளது போன்று வேறு எவரும் சங்கீதங்கள், கீர்த்தனைகள், ஞானப்பாட்டுக்கள் ஆகிய பாரம்பரிய செல்வத்தைப் பெற்றதில்லை. நாம் அவ்வப்போது உணர்ந்தும் நம்மால் வெளிப்படுத்த முடியாதவற்றை நமது கீர்த்தனைகள் மகத்தவமான மொழியில் வெளிப்படுத்துகின்றன. நம்முடைய சொந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளைச் சில கீர்த்தனைகள் வெளிப்படுத்துகின்றன. “ஒப்புவிக்கிறேன் இயேசுவுக்கே ஒப்புவிக்கிறேன்” என்னும் பாடல் அவற்றில் ஒன்று. இன்னும் சில பாட்டுக்களில் நிறைவான சமர்ப்பணம் பேசப்படுகின்றது. அப்படிப் பாடுகின்ற வேளையில் நமது இருதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துகிறோம்.

ஆவிக்குரிய பாடல்களைப் பாடுங்கால் இசையொழுக்கோ, இசை இனிமையோ கணக்கிடப்படுவதில்லை. இருதயத்தின் ஆழத்தினின்று செய்தியானது எழுந்து, தூய ஆவியானவரின் வல்லமையோடு விண்ணுலகத் தந்தையைச் சென்றடைவதே இன்றியமையாததாகும். கர்த்தாவே பாடல் எவ்வளவு இனிமையுடையதாக இருக்கிறது என்பது பொருட்டன்று என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆவியினால் கற்பிக்கப்பட்டால் ஒழிய எந்த இருதயமும் உமக்கு இனிமையைக் கொண்டுவருவதில்லை என மேரி பௌலே என்பார் கூறி இவ்வுண்மையை விளக்கியுள்ளார்.

தேவ ஆவியானவர் எங்ஙனம் திருமறையை ஒருவர் பிரசங்கிக்கும்போது பயன்படுத்துகிறாரோ, அதுபோன்றே பாடல்களையும் அவர் பயன்படுத்துகிறார். கிரேட்டன் கின்னஸ் என்பாரின் தாயார், வயல்வெளியில் உழுதுகொண்டிருந்த உழவர் ஒருவர் பாடின பாடலைக்கேட்டு, ஆற்றில் மூழ்கித் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்னும் தனது எண்ணத்தைக் கைவிட்டார். முனைவர் கின்னஸ் பிற்காலத்தில் இவ்வாறு கூறினார்: முற்றிலும் நான் தேவனுக்குச் சொந்தம். அந்தக் கிறிஸ்தவ உழவர் தனது தாழ்மையான உழைப்போடு, கர்த்தரைத் துதித்துப் பாடினார். அதற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

இருவகை ஆபத்துகளினின்றும் இசை நிகழ்ச்சி ஊழியம் செய்வோர் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். முதலாவது சுயம் அவர்களைப் பற்றிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. வெளியரங்கமாக ஆற்றப்படுகின்ற மற்ற ஊழியங்களைப்போலவே, இதிலும் மிகப்பெரிய சுயம் என்னும் மாயையில் ஒருவர் தனது வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வது எளிது. அவர் தனது சொந்தத் திறமையை வெளிப்படுத்து மக்களைக் கவரவேண்டும் என்னும் சோதனைக்கள் அகப்பட்டுக்கொள்வார். ஆனால், தேவ மக்களின் நற்பேற்றைக் கருத்திற்கொண்டு தேவ மகிமைக்காகப் பாடுவதே சாலவும் சிறந்தது.

இரண்டாவது, மற்றவர்களுக்குப் படிப்பினைய+ட்டுவதற்கு மாறாக மகிழச் செய்வதற்காக மட்டும் பாடுவதாகும். மகத்துவமான இசை ஞானத்தோடு ஒருவரால் பாடக்கூடும். ஆயின், கேட்போராது உள்ளங்களை தேவசெய்தி சென்றடையத்தக்கதாகப் பாடுவதே சிறந்ததாகும். நாம் அன்புகூருகிற கர்த்தருக்குத் தகுதியற்றதும், கருத்துச் செறிவு அற்றதும், கேட்பொர் உணர்ச்சிகளை எழும்பிவிடக் கூடியதுமான பாடல்களைப் பாட ஒருவரால் கூடும். ஆயின் அதில் என்ன பயன்?

வௌ;வேறு பண்பாட்டில் வௌ;வேறு இசை நாட்டம் உண்டாயிருக்கும். ஆனாலும் எல்லா பண்பாட்டிலும் பாடல்கள் வேதஉபதேசங்களைக் கொண்டதாகவும், தேவ மகிமையைப் பறைசாற்றுவதாகவும், ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் இருக்கவேண்டும்.

விசாரித்து ஆராய்ந்து அறிதல்

December 1st, 2011 by Kesaran

டிசம்பர் 1

…… என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்… (உபா.13:13-14)

இஸ்ரவேலிலே ஒரு நகரத்திலே தேவனைப் புறக்கணித்து, சிலை வணக்கத்தைப் பற்றிக்கொண்டார்கள் என்று வதந்தி பரவினால், அந்நகரத்திற்கு எதிராகத் தண்டனையைச் செலுத்தும் முன்பு தீர விசாரணை நடத்தவேண்டும்.

நாமும் ஒரு வதந்தியையோ புறங்கூறுதலையோ கேட்கும்போது கவனமற்றவர்களாகச் செயல்ப்படக்கூடாது. மாறாக ஆறுவகையான சோதனைகளின் மூலமாகச் சோதித்து அறிய வேண்டும். இது வெறும் வதந்தியா? நான் விசாரித்தேனா? நன்றாக நான் ஆராய்ந்து பார்த்தேனா? கவனமாய்க் கேட்டேனா? அது மெய்தானா? அது நிச்சயம் நிகழ்ந்ததா?

உண்மையில், சமய உலகில் அவ்வப்போது வெளிவருகின்ற, பெரும் பரபரப்ப+ட்டுகிற செய்திகளை மற்றவர்களிடம் கூறும் முன்னர் தீர விவாரிப்பதும் கவனத்தோடு நடந்துகொள்வதும் சிறந்த முறையாகும். நான் சில எடுத்துக்காட்டுக்களைத் தருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த கதை இது. இது நிய+யார்க் நகரின் படகுத்துறை ஒன்றில் எருசலேம் ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்கள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இஸ்ரவேலில் ஏற்ற சூழ்நிலை உண்டாகும்போது, அக்கற்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் வதந்தி பரவிற்று. அவை இந்தியானா மாநிலத்திலிருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியை மிகுந்த ஆவலோடு கிறிஸ்தவர்கள் பரப்பினார்கள். அச்செய்தியில் உண்மையேதும் இல்லையென்று அறிந்தபோது அவர்கள் வெட்கம் அடைந்தனர்.

வேறொரு சமயத்தில், இன்னொரு கதை பிறந்தது. மனிதனுடைய காலவரலாற்றைக் குறித்த விவரங்களை மிக விரிவாகக் கணிப்பொறி ஒன்றில் கொடுத்து, அதன் விடையைப் பார்த்தபோது, வேதத்தில் காண்கிறபடி யோசுவாவின் காலத்தில் ஒரு நாள் பகற்பொழுது நீட்டப்பட்டது உறுதியானது என்பதே அந்தக் கதை. வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற நிகழ்ச்சியை உறுதிசெய்கிற எந்த செய்தியையும், ஆர்வமிக்க விசுவாசிகள் பத்திரிகைகளில் உடனடியாக எழுதிப் பரப்புகின்றனர். அதைக் குறித்துப் பிரசங்கங்களும் செய்கின்றனர். பின்னர் அந்தச் செய்தி நீர்க்குமிழி போன்று வெடித்துச் சிதறிப்போகின்றது. எந்த அடிப்படையும் இல்லாத கதையாக அது முடிவடைகிறது.

சிறிது காலத்திற்கு முன்னதாக, மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட ஒரு மனிதனை அந்திகிறிஸ்து என்று உறுதி செய்வதற்குக் கணிதத்தைக் கொண்டு கணக்கு ஒன்றைச் செய்தனர். அது எவ்விதம் செய்யப்பட்டது என்பதைப் பாருங்கள். அந்த மனிதனின் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை மதிப்பீடகக் கொடுத்தனர். அதன் பின்னர் சில கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாவற்றையும் செய்தனர். கிடைத்த விடை 666. இது எதனையும் உறுதிசெய்யவில்லை என்பதே உண்மை. எந்த ஒரு பெயரை எடுத்துக்கொண்டாலும் நம்மால் பல கணக்குகளைப்போட்டு 666 என்ற எண்ணை விடையாகக் கொண்டுவரலாம்.

சார்ல்ஸ் டார்வின், வாழ்வின் இறுதி நாட்களில் தனது பரிணாமக் கொள்கையைக் கைவிட்டு, வேதத்தை விசுவாசிக்கும் வாழ்விற்குத் திரும்பினார் என்னும் செய்தி அடங்கிய கைப்பிரதி ஒன்றை நான் கண்டேன். இது உண்மையாக இருக்கக்கூடும். அது உண்மையாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். அது உண்மையாக இருக்குமானால், ஒருநாள் அதைக் கண்டறிவேன். அது உண்மையானது என்பதற்குரிய ஆதாரம் என்னிடத்தில் இல்லை. ஆகவே அதை மற்றவர்களிடம் சொல்லத் துணியமாட்டேன்.

இன்றைய வசனத்தில் காண்கிற ஆறுவகையான சோதனைகளைக்கொண்டு எந்த ஒரு செய்தியையும் நாம் சோதித்துப் பார்ப்போமானால் இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கவோ, அவமானப்படவோ கூடியநிலை ஏற்படாது. இது வெறும் வதந்தியா? நான் விசாரித்தேனா? நன்றாக நான் ஆராய்ந்து பார்த்தேனா? கவனமாய்க் கேட்டேனா? அது மெய்தானா? அது நிச்சயமாய் நிகழ்ந்ததா?

அற்பமான சரீர முயற்சி

August 3rd, 2011 by Kesaran

ஒகஸ்ட் 3

வீரனுடைய கால்களில் பிரியப்படார் (சங்.147:10)

 

எத்தனை கவர்ச்சிமிக்க நுண்ணறிவு இங்கே விளங்குகிறது! மகத்துவமானவரும் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவருமாகிய தெவன் வீரனுடைய கால்களில் பிரியப்படார்!

விளையாட்டு உலகத்தோடு இதனைச் சம்பந்தப்படுத்தி எண்ணிப்பார்க்கலாம். தடகளத்தில் ஓடும் மாவீரன் வளைந்து வரைவாய் ஓடி எல்லைக்கோட்டைக் கடக்கும் வேளையில் கைகள் இரண்டையும் உயர்த்தி வெற்றியில் மகிழ்வடைகிறான். கூடைப்பந்து விளையாடுபவன் திடலில் மின்னல் போல் அங்கும் இங்கும் ஓடி கூடைக்குள்ளாக பந்தைப் போடுகிறான். கால்பந்து விளையாடுபவனோ முறுக்கேறிய தசையும் வலிமையும் மிகுந்து, தடைசெய்ய முடியாத வகையில் எதிரியின் பகுதிக்குள் பாய்ந்து செல்கிறான்.

இவற்றைக் கண்ணுறும் திரள்கூட்டம் கட்டுப்பாட்டை மீறுகிறது. அவர்கள் குதிக்கின்றனர், சத்தமிடுகின்றனர், ஆரவாரம் செய்கின்றனர். இல்லையேல் ஏளனத்தொனி எழும்பி வெறுப்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த விளையாட்டில் அவர்கள் வெறித்தனமாக ஆர்வங்கொண்டிருக்கின்றனர். வீரனுடைய கால்களில் அவர்கள் பிரியப்படுகிறார்கள் என்று அவர்களைக் குறித்து நிச்சயமாகச் சொல்லமுடியும். அதாவது, வீரர்களின் விளையாட்டுத் திறனில் அவர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

விளையாட்டில் ஆர்வம் கொள்ளக்கூடாது என்று இவ்வசனம் தடைசெய்வதில்லை. உடற்பயிற்சியைப் பற்றிச் சிறப்பாகவே வேதம் பல இடங்களில் பேசுகிறது. ஆயினும் வீரனுடைய கால்களில் தேவன் பிரியப்படார் என்று கூறி, நாம் எவ்வௌற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைவுபடுத்தப்படுகிறோம்.

ஒரு குறிப்பிட்ட விளையாட்டில், ஓர் இளம் விசுவாசி அதிகமாக ஈடுபாடு கொண்டவனாக, அதனையே நோக்கமாகக் கொண்டவனாக அவன் மாறிவிடுவது எளிது. அவ்விளையாட்டில், மிகச்சிறந்த வீரனாக உயரவேண்டுமென்று எல்லாவித முயற்சிகளையும் அவன் செய்கிறான். அதற்கென தனது நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்கிறான். அவன் உண்கிற உணவைக் குறித்தும் உறக்கத்தைக் குறித்தும் ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கிறான். முடிவில்லாமல் பயிற்சி பெறுகிறான், ஒவ்வொரு முறை விளையாடும் போதும் கருத்தூன்றிக் கற்றுத் திறமையை நிறைவாக்கிக் கொள்கிறான். உடற்கூறுகள் அனைத்தும் மிக நேர்த்தியாகச் செயல்படும்படி வைத்துக்கொள்ள எல்லா முயற்சிகைளயும் மேற்கொள்கிறான். அந்த விளையாட்டே தன்னுடைய வாழ்க்கையென்று பேசுகிறான். அவனுடைய வாழ்க்கையைப் பொருத்தமட்டில் அது உண்மையாகவே காணப்படுகிறது.

வீரனுடைய கால்களில் தேவன் பிரியப்படுகிறதில்லை என்பதை இது போன்ற இளம்விசுவாசிகள் அறியும்போது தங்களுடைய செயல்களைக் கைவிட வலியுறுத்தப்படுகின்றனர். தேவனோடு ஐக்கியம் கொண்டு, அவன் நடக்க விரும்பினால், தேவனுடைய கருத்தினைத் தனது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேவன் எவற்றில் பிரியமாயிருக்கிறார்? “தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்” (சங்.147:11). அதாவது, சரீரத்திற்குரியவைகளைக் காட்டிலும், ஆவிக்குரியவற்றில் தேவன் பிரியமாயிருக்கிறார். “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேபவக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்தாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என்று இக்கருத்தினை பவுல் வலியுறுத்துகிறார் (1.தீமோ.4.8).

இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து, ஆரவாரங்கள் ஓய்ந்துபோகும். விளையாட்டு அரங்குகள் வெறுமையாய்க் காட்சியளிக்கும், ஆட்டக் கணிப்புகள் மறந்துபோகும். தேவனுடைய இராஜ்யத்தையும், அதனுடைய நீதியையும் தேடி தற்போது வாழ்ந்தால், அதுவே அந்நாளில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.

ஜெப ஊழியம்

June 30th, 2011 by Kesaran

யூன் 30

மோசே தன் கையை ஏறெடுத்;திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
(யாத் 17 :11)

அமலேக்கியரோடு இஸ்ரவேலர் போர் புரிந்துகொண்டிருந்தனர். மோசே மலையின் உச்சியில் நின்றுகொண்டு போர் களத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். மோசேயின் கையின் நிலையே வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாட்டை நிர்ணயித்துக்கொண்டிருந்தது. அவனுடைய கை தாழ்ந்தபோது, இஸ்ரவேலர் பின்வாங்கினர்.

கையை உயர்த்தினவனாக இருந்தபோது மோசே, நம்முடைய கர்த்தர் இயேசுகிறிஸ்து பரிந்துபேசுவதைச் சித்தரிக்கிறார். “அவருடைய பரிவினாலும், அன்பினாலும் அவர் தமது கரங்களை உயர்த்துகிறார்.” அவருடைய பரிந்துபேசுதலினால் நாம் கடைசிவரை இரட்சிக்கப்படுகிறோம். ஆனால் அதற்குப்பிறகு அந்த காட்சியில் மோசே இயேசு கிறிஸ்துவிற்கு நிழலாகக் காணப்படுவதில்லை. ஏனெனில் நம்முடைய கர்த்தரின் கரம் ஒருக்காலும் தாழ்வதில்லை. களைப்படையச் செய்யும் எந்த வேலையும் அவரை வெளியிலிருந்து உதவியை நாடச் செய்வதில்லை. எப்போதும் நமக்காகப் பரிந்துபேச என்றென்றும் வாழ்கிறவராக இருக்கிறார்.

நம்மை ஜெபவீரர்களாச் சித்தரித்துக் காட்டும் நிகழ்ச்சியாகவும் இதனைக் கருதலாம். இப்பூவியில் ஆவிக்குரிய நிலையில் போர் புரியும் ஊழியர்களுக்காக உண்மையோடு நாம் மன்றாடுவதை உயர்த்திய கை சித்தரிக்கிறது. ஜெப ஊழியத்தை நாம் புறக்கணிக்கிறபோது எதிரி மோலோங்கி நிற்கிறான்.

ஊழிய வேட்டைக்குச் சென்ற மிஷனரி ஒருவரும் அவருடைய குழுவினரும் கொள்ளையர் நிறைந்த ஒரு பகுதியில் இரவைக் கழிக்கவேண்டியதாய் இருந்தது. தங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்தவர்களாக, அவர்கள் படுக்கச் சென்றனர். பலமாதங்கள் கழிந்தன. ஒரு கொள்ளைக்காரனை மிஷன் மருத்துவ மனைக்குச் சிலர் கொண்டுவந்தனர். அங்கிருந்த ஊழியரைக் கண்டவுன் அக்கொள்ளைக்காரனுக்கு அவர் யார் என்று தெரிந்துவிட்டர். “நீங்கள் ஓர் இரவில் வயல் வெளியில் தங்கியிருந்தபோது உங்களைக் கொள்ளையிட நினைத்தோம். ஆனால் உங்களுடன் இருந்த 27 படைவீரர்களைக் கண்டு பயந்துவிட்டோம்” என்று அவன் கூறினான். இந்த நிகழ்சியைக் குறித்து தனது சொந்தசபைக்கு எழுதியபோது, ” அவன்றைக்கு சபையின் ஜெபக்கூட்டத்தில் 27 பேர் கலந்துகொண்டதாக” பதில் வந்தது.

இன்னொரு உண்மையையும் இந்நிகழ்ச்சியில் நாம் காண்கிறோம். தலைமுறை தலைமுறைதோறும் அமலேக்கியயோரு யுத்தம் நடக்குமென்று கர்த்தர் சூளுரைத்துள்ளார். அமலேக்கு மாம்சத்திற்கு அடையாளமாக இருக்கிறான். மாம்சத்திற்கு எதிராக கிறிஸ்தவன் இடைவிடாது போர் புரியவேண்டியவனாக இருக்கிறான். ஜெபம் அவனுடைய முக்கியமான போர் கருவியாக இருக்கிறது. அவனுடைய ஜெபவாழ்க்கையின் உண்மையுள்ள தன்மை வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாட்டை நிர்ணயிக்கிறது.

விசுவாசத்தினால் விடுதலை

June 29th, 2011 by Kesaran

யூன் 29

 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(யோ.5:24)


பலருடைய வாழ்க்கைப் புரட்சிகரமானதாக்கி, மாற்றத்தை வருவிக்கும் பேருண்மை இவ்வசனத்தில் பொதிந்திருக்கிறது.

“மெய்யாகவே” என்ற சொல் இருமுறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அதனின்று ஒரு சிறப்பான பொருளை எதிர்பார்க்க நாம் தூண்டப்படுகிறோம்.

“உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. 19ம் வசனத்திலிருந்து அவர் பேசுகிறார். அவர் பேசுவது அனைத்தும் மெய்யாகவே இருக்கிறது என்பதை நாம் அறியவேண்டும். அது முற்றிலும் உண்மை, எந்த வேறுபாடுமில்லை. அவரை ஏமாற்றவும் முடியாது. அவர் சொல்வதைக் காட்டிலும் உறுதிபடைத்ததும், நாம் சார்ந்துகொள்ளக்கூடியதும் வேறெதுவும் இல்லை.

யாருடன் அவர் பேசுகிறார்? “உங்களுக்குச் சொல்லுகிறேன்” நித்திய தேவ குமாரன் உங்களுடனும் என்னுடனும் பேசுகிறார். இப்படிப்பட்ட மேதகைமை வாய்ந்த ஒருவர் நம்மோடு இதுவரை பேசியதில்லை, இனிமேல் பேசப்போவதுமில்லை. ஆகையால் அவர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கவேண்டியவர்களாய் இருக்கிறோம்!
“என் வசனத்தைக் கேட்கிறவன்” இது ” எவனொருவன்” என்னும் பொருளோடு கேட்கிற எவனையும் குறிக்கிறது. அவருடைய வசனத்தை வெறுமனே காதினால் கேட்கிறதை மட்டும் குறிக்காமல், கேட்டு விசுவாசிக்கிறவனைக், கேட்டு ஏற்றுக்கொள்கிறவனைக், கேட்டு அதற்கு கீழ்ப்படிகிறவனையே இது குறிக்கிறது.

“என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்”. பிதாவாகிய தேவனே அவரை அனுப்பினவர் என்பதை நாம் அறிவோம். “அவர் ஏன் அவரை அனுப்பவேண்டும்?” என்பது சிறப்பான கேள்வியாக இருக்கிறது. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென தமது இரத்தத்தைச் சிந்துவதற்காக, நான் பெறவேண்டிய தண்டனையை அவர் செலுத்தித் தீர்ப்பதற்காக, என்னுடைய பதிலாளாக அவர் மரணமடையவும் பிதா தமது குமாரனை அனுப்பினார் என்று விசுவாசிக்க வேண்டும்.

இப்பொழுது மூன்றத்தனையான வாக்குறுதி வருகிறது. முதலாவதாக “நித்திய ஜீவன் உண்டு”. ஒருவன் விசுவாசித்தவுடனேயே அவன் நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்கிறான். இவ்வளவு எளிமையானதாக இது இருக்கிறது.

இரண்டாவதாக, “அவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படமாட்டான்.” கிறிஸ்து ஏற்கனவே கடனைச் செலுத்தித் தீர்த்திவிட்டதால், என்னுடைய பாவத்தின் நிமித்தம் நான் நரகத்திற்கு அனுப்பப்படமாட்டேன். கடனை இருமுறை செலுத்தவேண்டுமென்று தேவன் கேட்கமாட்டார். மூன்றாவதாக, “அவன் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறான்”.  ஆவிக்குரிய வகையில் இறந்தவன் என்னும் நிலையிலிருந்து புதிய பிறப்படைந்து, முடிவில்லா வாழ்வைப் பெற்று தேவனோடு உறவு கொள்கிறான். உண்மையாகவே அவருடைய வசனத்தைக் கேட்டு அவரை அனுப்பிய பிதாவை விசுவாசிப்பீர்கள் எனில், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உறுதிமொழி அளிக்கிறார். இதனை “நற்செய்தி” என்று அழைப்பதில் வியப்பில்லை.

விசுவாசிகளின் மரணம்

June 23rd, 2011 by Kesaran

யூன் 23

இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்கள். (1.தெச.4:14)

நமக்கு அன்பானவர்களில் ஒருவர் கர்த்தருக்குள் மரணம் அடையும்போது நாம் எவ்விதமாக நடந்துகொள்கிறோம்? கிறிஸ்தவர்கள் சிலர் உணர்ச்சி வயப்பட்டு தொய்ந்துபோகின்றனர். மற்றவர்கள் , வருத்தமடைந்த போதிலும், அச்சூழ்நிலையைத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். நாம் எவ்வளவாக தேவனுக்குள் வேர்கொண்டிருக்கிறோம் என்பதையும், எவ்வளவாக விசுவாசத்தின் உண்மைகளை நிறைவாக நமக்குரியதாக்கிக்கொள்கிறோம் என்பதையும் அது சார்ந்திருக்கிறது.

முதலாவதாக, இரட்சகருடைய நிலையில் நின்று, மரணத்தை நாம் காணவேண்டும். அவருடைய ஜெபத்திற்கு விடையாக இது இருக்கிறது. “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை, நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்” (யோ.17:24). தமக்கு இன்பமானவர்கள் அவரோடுகூட இருக்கும்படியாகச் செல்கிறபோது, தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாகிறார் (ஏசா.53:11). “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்.116:15).

இறந்துபோனவருக்கு, அது எத்தகைய மேன்மையுடையது என்பதை எண்ணி மகிழவேண்டும். மன்னரின் அழகினைக் கண்டு மகிழ அவர் வழி நடத்திச் செல்லப்படுகிறார். பாவம், நோய், வேதனை, வருத்தம் ஆகியவற்றினின்று அவர் என்றென்றைக்குமாய் விடுதலை பெறுகிறார். தீங்குவராததற்கு முன்னே அவர் எடுத்துக் கொள்ளப்படுகிறார் (ஏசா.57:1). பரிசுத்தவான் தனது வீட்டிற்குச் செல்வதற்கு ஒப்பானது வேறில்லை. ஒரு களிமண் கட்டி என்னும் நிலையிலிருந்தும், உலகப் பொருட்களின் கட்டுகளிலிருந்தும் நீங்கி, எண்ணிலடங்கா தேவதூதர்களால் வரவேற்கப்படுவது எத்தனை மேன்மை. இதனை மேலும் விளக்குகிறார் பிஷப் ரைல், “விசுவாசிகள் இறக்கும் அதே தருணத்தில், அவர்கள் விண்ணுலுகைச் சென்றடைகின்றனர். போர் முடிவடைந்துவிட்டது. இருள் நிறைந்த பள்ளத்தாக்கையும், ஆற்றையும் கடந்துவிட்டனர். நாமும் அதன் வழியாக ஒருநாள் கடந்து செல்லவேண்டும். மனிதர்களுக்கென்று பாவம் கலந்து கொடுத்த கசப்புமிக்க பானத்தைப் பருகிவிட்டனர். அவர்கள் சேர்ந்த இடத்தில் துக்கமில்லை, பெருமூச்சும் இனியில்லை. அவர்கள் அங்கிருந்து மீண்டும் வரவேண்டும் என்று நாம் நிச்சயமாய் விரும்பமாட்டோம்! அவர்களுக்காக அல்ல, நமக்காகவே நாம் அழ வேண்டியவர்களாயிருக்கிறோம்.

நமக்கு இன்பமானவர்களது மரணம் துக்கத்தையே கொண்டுவருகிறது. ஆயின் நம்பிக்கையற்றவர்களைப்போன்று நாம் துக்கப்படுகிறதில்லை (1.தெச.4:13). மேலான இடத்தில் அதாவது, கிறிஸ்துவுடன் அவர் இப்பொழுது இருக்கிறார் என்பதை அறிவோம். இந்தப் பிரிவு குறுகிய காலத்திற்குரியது என்பதையும் அறிவோம். இம்மானுவேலின் நாட்டில் மலைப்பகுதியாகிய மேலான சூழ்நிலையில் மீண்டும் அவர்களோடு இணைக்கப்படுவோம் என்று அறிவோம். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருக்கவும், உயிரோடிருக்கும் மற்றவர்கள் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு மேகங்களின் வழியாக அவர்களோடு கர்த்தரை எதிர்கொண்டு போகவும், பின்னர் எப்பொழுதும் கர்த்தருடன் இருக்கப்போகிறதுமான கர்த்தருடைய வருகையை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் (1.தெச.4:16-17). இந்த நம்பிக்கை பெருத்த மாற்றத்தை உண்டாக்குகிறது.

தேவனுடைய ஆறுதல் நமக்குக் கொஞ்சமானவை அல்ல (யோபு 15:11). நமது துக்கம் இன்பத்தோடு கலந்திருக்கிறது. நாம் அடையும் இழப்பு நித்திய நற்பேற்றினால் மிகுதியாக ஈடுசெய்யப்படுகிறது.

மாசில்லா தூய பக்தி

June 18th, 2011 by Kesaran

யூன் 18

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்.1:27)

மேற்கூறியவற்றை ஒரு விசுவாசி செய்வானானால், செய்யவேண்டிய அனைத்தையும் அவன் செய்துவிட்டான் என்ற பொருளுடன் யாக்கோபு இதை எழுதவில்லை. திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் சந்தித்து, தன்னைக் கறைபடாதபடிக்குக் காத்துக்கொள்வது மாசில்லாத பக்திக்கு இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன என்றே கூறுகிறார்.

வேத விளக்கப் பிரசங்கங்கள், நற்பணி ஊழியம், தனியாள் ஆத்தம ஆதாயம் ஆகிய இவற்றையே பக்தியின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அவர் சொல்லியிருக்கவேண்டும் என நாம் நினைக்கிறோம். அவற்றை அவர் கூறாமல், தேவையுள்ளவர்களைச் சந்திப்பதையே முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார்.

தான் “வீடுகள் தோறும்” சென்றதை, எபேசு நகர மூப்பர்களிடம், பவுல் நினைவுறுத்தினார் (அப்.20:20). வீடுகள் சந்திப்பதை மிகவும் இன்றியமையாத ஊழியமாக டார்பி கருதினார். “மணிக்கூண்டில் கடிகாரம் ஓசை எழுப்புகிறது. வழிப்போக்கர் அவ்வொலியைக் கேட்கின்றனர். ஆனால், கடிகாரத்தின் உள்ளே தொடர்ந்து வேலை நடக்கிறது. முட்கள் நகர்ந்து மணிஓசை எழுகிறது. வீடுகள் சந்திப்பது, அதிகமான நேரம் செலவிட வேண்டிய ஊழியம் எனக் கருதுகிறேன். மற்ற ஊழியங்கள் உங்களிடம் வரும்போது அவற்றைச் செய்யுங்கள். பொது இடங்களில் சாட்சிபகர நான் அஞ்சுகிறேன். வேறு மறைவான ஊழியம் இல்லையெனில் அப்பொழுது அதைச் செய்வேன்”.

தனியாக வசித்த விதவை, தனது வயது முதிர்ச்சியின் நிமித்தமாக அருகில் வசிப்பவர்களிடமும், நண்பர்களிடமும் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. தனது கையில் ஒரு நாட்குறிப்பு ஏட்டை வைத்திருப்பார். ஒவ்வொருநாள் நிகழ்ச்சியையும் அதில் எழுதிவைப்பார். குறிப்பாக வெளியுலகத் தொடர்புகளைப் பற்றி அதில் எழுதுவார். சிலநாட்கள் அந்த வீட்டின் உள்ளே எந்த நடவடிக்கையையும் காணாத அயலகத்தார் காவல்துறையினரை அழைத்தனர். உள்ளே சென்ற காவல்துறையினர், சில நாட்களுக்கு முன்னரே இறந்து கிடந்த மூதாட்டியின் உடலைக் கண்டனர். அம்மூதாட்டி இறப்பதற்கு முன்னதாக மூன்றுநாட்கள் தனது குறிப்பேட்டில், “ஒருவரும் வரவில்லை” , “ஒருவரும் வரவில்லை”, ஒருவரும் வரவில்லை” என்ற சொற்களையே எழுதியிருந்தார்.

தங்களுடைய சொந்த அலுவலில் மூழ்கிப்போய் இருப்பவர்கள், தனிமையில் வாடுவோரையும், தேவையுள்ள நிலையில் வசிப்பவர்களையும், வயது முதிர்ச்சியினால் பலவீனமடைந்த நிலையில் உள்ளவர்களையும் மறப்பது எளிது. வெளிப்படையாகச் செய்யப்படும் ஊழியங்களிலும், கவர்ச்சிமிக்க பணிகளிலும் ஈடுபட விரும்புகிறோம். அவற்றிற்கே முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆயின் நம்முடைய பக்தி தூய்மையாகவும, மாசில்லாததாகவும் இருக்கவேண்டுமாயின், திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும், வயது முதிர்ந்தோரையும், வீட்டில் தனிமையில் அடைபட்டுக்கிடப்போரையும் அசட்சை செய்யக்கூடாது. தேவையுள்ளவரைக் குறித்து அக்கறை கொண்டவராக தேவன் இருக்கிறார். அத்தகையோருக்கு உதவிசெய்ய முன்வருவோருக்கு அவர் சிறப்பான பரிசுப்பொருட்களை வைத்திருக்கிறார்.

இரக்கத்தின் தகப்பன்

June 13th, 2011 by Kesaran

யூன் 13

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் (எபேசி.2:4)

குற்றம் புரிந்தோர், தோல்வியுற்றோர், துன்புற்றோர் மற்றும் தேவையுள்ளோர் அனைவரிடத்திலும் தேவன் காட்டுகிற பரிவு, மிகுந்த கிருபை, ஆகியவையே தேவனுடைய இரக்கமாகும்.

தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் என்று வேதம் வலியுறுத்திக் கூறுகிறது. (எபேசி.2:4). மிகுந்த கிருபையுள்ளவர் (சங்.86:5). அவர் மிகுந்த இரக்கமுடையவர் (1.பேது.1:4). அது வானபரியந்தம் உயர்ந்தது (சங்.57:10). “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபை அவ்வளவு பெரிதாயிருக்கிறது (சங்.103:11). “இரக்கங்களின் பிதா” என்று தேவன் அழைக்கப்படுகிறார் (2.கொரி.1:3). அவர் இரக்கம் பாராட்டுவதில் பாரபட்சம் காட்டுவதில்லை, “அவர் தீயோர் மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்” (மத்.5:45). நாம் செய்த நீதியின் நிமித்தம் அவர் நம்மை இரடஇசியாமல் (தீத்து 3:5) அவருடைய ஒப்பற்ற இரக்கத்தினாலே நம்மை இரட்சித்தார் (யாத்.33:19, ரோ.9:15). அவருக்குப் பயப்படுபவர்கள் மேல் அவரது இரக்கம் என்றுமிருக்கும் (சங்.136:1, லூக்.1:50). ஆனால் மனந்திரும்பாதவரிடம் இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமே அவரது இரக்கம் காண்பிக்கப்படும்.

கிருபைக்கும் இரக்கத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. நான் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியற்ற நற்பேறுகளை என்னிடத்தில் பொழிவது தேவகிருபையாகும். நான் அடையவேண்டிய தண்டனையை அவர் எனக்குத் தராதிருப்பது அவரது இரக்கமாகும்.

தேவனுடைய உபதேசம் ஒவ்வொன்றினுடனும் ஒவ்வொரு கடமை இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தேவனுடைய இரக்கம் கோருகின்றது (ரோ.12:1). இதுவே நாம் செய்யத்தக்க பகுத்தறிவுள்ள, பக்தியுள்ள, நேர்மையான, மதிநுட்பமுள்ள செயலாகும்.

மேலும், ஒருவரிலொருவர் இரக்கம் பாராட்ட வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இரக்கம் பாராட்டுகிறவர்களுக்கொரு சிறப்பான வாக்குறுதி தரப்பட்டுள்ளது. “அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்.5:7). பலியையல்ல, இரக்கத்தையே கர்த்தர் விரும்புகிறார் (மத்.9:13). தேவபக்தியற்றவராய் இருப்போர் செலுத்துகிற பிரதானமான பலிகளை தேவன் ஏற்றுக்கொள்வதில்லை.

தனது அயலானுக்கு இரக்கம் பாராட்டினவர்களில் ஒருவன் நல்ல சமாரியன் ஆவான். பசியுற்றோருக்கு உணவளித்தல், ஏழைகட்கு ஆடை வழங்குதல், பிணியுற்றோருக்கு உதவிபுரிதல், திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் சந்தித்தல், அழுகிறவர்களுடன் சேர்ந்து அழுதல் யாவும் இரக்கம் காண்பித்தலாகும்.

நமக்கு எதிராகச் செயல்புரிந்தோருக்கு விரோதமாகப் பழிவாங்கும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் அவ்வாறு செய்யாதிருத்தலே, நமது இரக்கமுள்ள தன்மையாகும். உண்மையற்றவரிடம் தயவுபாராட்டுதலும் இரக்கமே.

நாம் யாராக இருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தவர்களாக, நாம் இரக்கம் பெறும்படியும் (எபி.4:16), பிறர் இரக்கம் அடையவும் (கலா.6:16, 1.தீமோ.1:2) நாம் ஜெபிப்போம். கடைசியாக, அவர் புகழ்பாட தேவகிருiபாயனது நமது இதய நாளங்களை மீட்டிவிடட்டும்.