Friday, October 17, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home வேதாகம ஆராய்ச்சி

புகழ் பெற்ற சில தேவனுடைய மனுஷர்களின் தவறுகள்

admin by admin
November 6, 2007
in வேதாகம ஆராய்ச்சி
0
புகழ் பெற்ற சில தேவனுடைய மனுஷர்களின் தவறுகள்
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

1. நோவா: நோவா திராட்சை ரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் வலகி படுத்திருந்தான். (ஆதி.9:21).

You might also like

1. இராஜாக்கள் 21:17-22:53

1. இராஜாக்கள் 19:5-21:16

1. இராஜாக்கள் 18:25-19:4

2. ஆபிரகாம்: ஆபிரகாம் எகிப்தில் வைத்தும், கோராரில் வைத்தும் தன் மனைவி சாராளைச் சகோதரி என்று சொன்னான் (ஆதி.12:10-20,  20:1-14)

3. மோசே: கர்த்தர் மோசேயிடம் ஜனங்கள் குடிக்கத் தண்ணீருக்காக கன்மலையைப் பார்த்து பேசும்படியாக கட்டளையிட்டார். ஆனால் மோசேயோ தன் கோலினால் கன்மலையை இரண்டு தரம் ஓங்கி அடித்தான் (எண்.20:8-11)

4. யோசுவா: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் சத்துருக்களோடே (கிபியோனியரிடம்) யோசுவா உடன்படிக்கை பண்ணினான் (யோசு.9:14-15,  உபா.7:1-6,  எண்.33:35,  யாத்.34:15-16)

 5. யோபு: நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது என்றான் (யோபு 3:25)..

 6. சிம்சோன்: நசரேய விரதக்காரனாகிய சிம்சோன் பெலிஸ்திய பெண்ணை விவாகம்பண்ணினான். (நியா.14:1-3,7). திம்னாத் ஊர் திராட்சத் தோட்டத்தின் வழியாய் சென்றான் (நியா.14:5). செத்த சிங்கத்தின் உடலிலிருந்து, தேன் எடுத்து சாப்பிட்டான் (நியா.14:8-9). காசாவுக்கு போய் அங்கே ஒரு வேசியைக் கண்டு அவளிடத்தில் போனான் (நியா.16:1). அடிக்கடி பொய் சொல்லி வந்தான் (நியா.16:10,13,15).

 7. சாமுவேல்: சாமுவேல் முகரூபத்தையும் சரீர வளர்ச்சியையும் பார்த்து ஈசாயின் மக்களில் ஒருவனை அபிஷேகம்பண்ணத் துணிந்தான் (1.சாமு.16:6-7).

 8. ஆரோன்: சீனாய் மலையண்டையில் ஆரோன் பொன்னினால் ஒரு கன்றுக் குட்டியை வார்ப்பித்து, அதற்குப் பலிபீடம் கட்டி, கர்த்தருக்கு பண்டிகை என்று கூறினான். ஜனங்கள் அதன் முன் சர்வாங்க தகனபலியிட்டு, புசித்து, குடித்து, உட்கார்ந்து விளையாட எழுந்தார்கள். ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான் (யாத்.32:1-6, 23-25).

 9. சவுல் இராஜா: சவுல் வேஷம் மாறி வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரியிடம் போனான் (1.சாமு.28:7-8,  லேவி.19:31,  20:27,  உபா.18:10-11).

10. தாவீது இராஜா: உரியாவின் மனைவி பத்சேபாளை இச்சித்து பாவம் செய்து, தன் உண்மை படைவீரனாகிய உரியாவைக் கொன்று அவன் மனைவியை எடுத்துக்கொண்டான் (1.இராஜா.15:5,  2.சாமு. 11-12 அதிகாரங்கள்).

 11. சாலோமோன் இராஜா: புறஜாதி ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால், அவன் மோவாபியரின் அவருவருப்பாகிய காமேசுக்கும் அம்மோன் புத்திரரின் அவருவருப்பாகிய மோளேகுக்கும் மேடைகளைக் கட்டி, விக்கிரகங்களைப் பின்பற்றி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் (1.இராஜா.11:1)

12. ரெகோபெயாம் இராஜா: சாலோமோனனின் மகனாகிய அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான் (2.நாளா.12:14,  2.நாளா.1011 அதிகாரங்கள்)

 13. ஆசா இராஜா:  யூதாவின் ராஜாவாகிய ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான் (2.நாளா.16:7-10:12).

14. யோசபாத் இராஜா: யூதாவின் இராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் இராஜாவோடே தோழமைபண்ணினான்.  அதனால் அவனுடைய கப்பல்கள் உடைந்துபோயிற்று. (2.நாளா.20:35-37).

15. யோவாஸ் இராஜா: கர்த்தரின் ஆலயத்தை விட்டு விட்டு தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தான். இதைத் திடசாட்சியாக எச்சரித்த தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடுக்கவில்லை. கடைசியாக எச்சரித்த தீர்க்கதரிசியாகிய சகரியாவை, இராஜாவினுடைய கற்பனையின்படி கர்த்தருடைய ஆலய பிரகாரத்தில் கல்லெறிந்து கொன்றார்கள் (2.நாளா.24:17-25).

16. அமத்சியா இராஜா: அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆனாலும் முழு மனதோடே அப்படிச் செய்யவில்லை. அவன் சேயீர் புத்திரரின் தெய்வங்களை கொண்டுவந்து அவைகளைத் தனக்குத் தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபம்காட்டினான்.

17. உசியா இராஜா: எருசலேமில் ஐம்பத்திரண்டு வருஷம் அரசாண்ட அவன் பலப்பட்டபோது, தனக்கு கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்தான். பராக்கிரமசாலிகளான எண்பது கர்த்தரின் ஆசாரியர்கள் எதிர்த்து நின்றும், அதையும்  மீறி கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசித்து தூபங்காட்டினான். அங்கே கர்த்தர் அவனை அடித்ததினால் நெற்றியில் குஷ்டரோகம் காணப்பட்டு, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டு, குஷ்டரோகியாகவே மரித்தான் (2.நாளா.26:3, 16-23).

18. யோதாம் இராஜா: இந்த இராஜா கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினாலும், கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான் (2.நாளா.27:2-3).

19. ஆகாஸ் இராஜா: தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான். தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்.  பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களையும் செய்தான். அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று. இவன் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டு துண்டாக உடைத்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டான் (2.நாளா.28:1-2,22-25).

20. எசேக்கியா இராஜா: கர்த்தரால் தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான் (2.நாளா.32:25-26,  2..இராஜா.20:1-7).

21. மனாசே இராஜா: தேவனுடைய ஆலயத்தில் அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான் (2.நாளா.33:8,10,5,12,13).

22. சிதேக்கியா: தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான் (2.நாளா.36:11-13,16-17).

23. யோவான் ஸ்நானன்: அவன் காவலிலிருந்தபோது தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து இயேசுவிடம் அனுப்பி, வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா என்று அவரிடம் கேட்கும்படி அனுப்பினான். (மத்.11:2-6,  லூக்.7:18-23). இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது இந்த யோவான்தான்.  இயேசுவைக்குறித்து இதோ, இவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி என்றான். இவர் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவரென்றும் எல்லாரிலும் பெரியவர் என்றும் சாட்சி கொடுத்தவனும் இவனே.

24. யாக்கோபும் யோவானும்: இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களை வானத்திலிருந்து அக்கினி இறக்கி அழிக்க விரும்பினார்கள் (லூக்.9:53-56).

25. பவுலும் பர்னபாவும்: அவர்களுக்குள்ளே கடுங்கோபம் மூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள் (அப்.15:56-39,  அப்.15:25-26,  14:11-12).

 26. பேதுருவும் பர்னபாவும்: இவர்கள் புறஜாதியாரோடு சாப்பிட்டபின், விருத்தசேதனமுள்ள யூதவிசுவாசிகளுக்குப் பயந்து, விலகி மாயம்பண்ணினார்கள் (கலா.2:11-14).

27. பேதுரு:  சேவல் இரண்டு தரம் கூவுகிறதற்குமுன் பேதுரு மூன்றுதரம் வேலைக்காரி பெண் முன் இயேசுவை அறியேன் என்று சபிக்கவும் சத்தியமும் சொல்லி மறுதலித்தது. இயேசு சிலுவையில் மரணமடைந்த பின்பு வேறு சில சீஷரையும் கூட்டிக்கொண்டு, தன் அழைப்பை மறந்து மீன்பிடிக்கச் சென்றது (மத்.26:24,69-75,  மாற்.14:30-31,66-72,  லூக்.22:33-34, 54-62,  யோ.13:36-38,  18:17-18,25-27,  21:1-3).

Share30Tweet19
admin

admin

Recommended For You

1. இராஜாக்கள் 21:17-22:53

October 4, 2021
1. இராஜாக்கள் 21:17-22:53

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_405.mp4

Read moreDetails

1. இராஜாக்கள் 19:5-21:16

September 13, 2021
1. இராஜாக்கள் 21:17-22:53

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_404.mp4

Read moreDetails

1. இராஜாக்கள் 18:25-19:4

August 4, 2021

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_403.mp4

Read moreDetails

1. இராஜாக்கள் 17:5-18:24

July 4, 2021

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_402.mp4

Read moreDetails

1. இராஜாக்கள் 15:7-17:4

January 24, 2021

https://www.tamilbible.org/blog/video/twr/11-1kings/1-kings_401.mp4

Read moreDetails
Next Post

உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பே இருந்தவர்

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?