உபா.31:1-29
பல மாற்றங்கள் வரவேற்கத்தக்கவைகள். ஆனால் சில காரியங்கள் மாறாமலே இருக்கவேண்டுவதும் அவசியமே மனிதனின் நிலையற்ற தன்மையினால் மக்கள் தலைவர்கள் மாறுவது அவசியம். ஆனால் கடவுளின் பிரசன்னம் மக்களோடு நிலைத்திருக்க வேண்டும். கடவுளின் சட்டங்கள், அவருடைய ஆசீர்வாதங்களையும்;, சாபங்களையும் நினைவில்கொண்டு, மாறிவரும் இவ்வுலகில் காலங்காலமாய் பின்பற்றப்பட வேண்டும். கடவுளின் வாக்குகள் ஒலிவடிவிலும், வரிவடிலும் எப்போழுதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரவேல் மக்களிடைய மோசே பேசினான் (1-6). தெரிந்தெடுக்கப்பட்ட புதிய தலைவனிடம் பேசினான்(7,8), மூப்பர்களுடனும், மதகுருக்களுடனும் பேசினான்(9-13). கடவுள் வழங்கிய திருச்சட்டங்கள் அனைத்தையும் எழுதி மதகுருக்களிடம் கொடுத்தான். மக்கள் கூடுகின்ற தருணங்களில் இவை வாசிக்கப்படவேண்டும். இச்செயல் இளைய தலைமுறையினரையும், புதியதலைமுறையினரையும் கடவுளிடம் பயமும், பக்தியும் கொள்ளச் செய்யும். கடவுள் மோசேயுடன் பேசினார். தனது எச்சரிக்கைகள் அனைத்தையும் இஸ்ரவேல் மக்கள் எளிதாக மனதில் இருத்திக்கொள்ளும்படி ஒரு பாடலாக எழுதி வைக்கும்படிச் சொன்னார் (19-22). நாம் நமது வழி பாட்டில் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இவ்வறிவுரையே தலையாய காரணம்.