January

ஐனவரி 1

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்கச் சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன். (ஏசா.41:10)

இப்படிப்பட்ட அருமையான ஆணித்தரமான உறுதி மொழியை நாம் வேதாகமத்தில் வேறு எங்கும் காணமுடியாது. பல நூற்றாண்டுகளாக தேவனுடைய பரிசுத்தவான்கள் பலர் கவலையிலும், சந்தேகத்திலும், அவரது அடைக்கலத்தை நாடிச் சென்று, சர்வ வல்லவரின் சகாயத்தைப் பெற்றுள்ளனர். இவ்வசனத்தினால் தேவன் நமக்கு வாக்களித்துள்ளவற்றைக் காண்போம்.

நம்மோடுள்ள தேவன். நான் உன்னுடனே இருக்கிறேன் எனக் கூறுகிறார். அப்படி இல்லாவிட்டால் நாமும் ஏசாயாவைப் போல், என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று. என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது. (ஏசா.40:27) என புலம்பியிருப்போமே! துக்கத்தால் அழிந்துபோகும் வேளையிலும், மிகுந்த உறுதியுடன், நான் தனியாக விடப்படவில்லை என்று தேவனுடைய பிள்ளைகள் மட்டுமே கூறமுடியும்.

நம்முடைய தேவன். நான் உன் தேவன் என்கிறார். தேவனுக்கு உருவம் இல்லை. அவரை மனதால் மட்டுமே நினைத்துப் பார்க்க முடியும். அவர் உருவமற்ற ஒரு சக்தி என்றெல்லாம் நினைப்பது தவறு. அவர் ஓர் ஆள். அவரோடு நாம் உறவாடுவதற்கு ஏற்றவர். மென்மையானவர்.

நம்மைப் பலப்படுத்தும் தேவன். நான் உன்னைப் பலப்படுத்துவேன் என்கிறார். அவரது சீடர்கள் யாவரும் இயேசுவைப் பின்பற்ற வேண்டுமென விரும்பினார். ஆனால் பெந்தேகொஸ்தே நாள்வரையில் அவர்களிடம் அதற்கேற்ற பலன் இல்லை. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பலனடைவீர்கள் என ஆண்டவர் இயேசு வாக்களித்திருந்தார். அவர்களுக்குப் பலமளித்தவர் அவர். நம்முடைய பலமும் அவரே.

நமக்கு உதவிசெய்யும் தேவன். உனக்குச் சகாயம் பண்ணுவேன். உன்னைத் தாங்குவேன் என்கிறார். இதனால்த்தான் சங்கீதங்காரன், அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார் (சங்.37:24) எனக் கூறுகிறார். ஆகவே நீங்கள் பயப்படவேண்டாம்.

Leave a Reply