February

பெப்ரவரி 13

பெப்ரவரி 13

இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய். தேவன் உன்னோடே இருக்கிறார். (1.சாமு.10:7)

தேவன் சர்வ வல்லமையுள்ளவர், அன்புள்ளவர். ஆகவேஅவருடைய வழிநடத்துதலுக்கென ஒரு குறிப்பிட்ட முறையோ, திட்டமோ கிடையாது. அவர் நீதியும்,ஒழுங்கும் நிறைந்த தேவன். அவர் தம்முடைய பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட முறைப்படிவழிநடத்தாமல் பல வழிகளில், பல முறைகளில் நடத்துகிறார்.

தனிப்பட்ட விசுவாசிக்கும் தேவனுடைய வழிநடத்துதல்பரிசுத்தாவியால் நேரடியாகக் கொடுக்கப்படுகிறது. தேவனால் எத்தியோப்பிய மந்திரியிடம்பிலிப்பு வழிநடத்தப்பட்டது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆவியானவர் நீ போய்அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புவுடனே சொன்னார் (அப்.8:29).பிறரைக்கொண்டும் தேவன் தம் பிள்ளைகளை வழிநடத்தக்கூடியவர் என்பதற்கு சவுலை சாமுவேல்வழிநடத்தினது சிறந்த எடுத்துக் காட்டு எனலாம்.

அவரது வழிநடத்துதல் திட்டவட்டமானது. சாமுவேல்சவுலை வழிநடத்தினபோது,… ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்.அவர்கள் உன்னைப் பார்த்து… சொல்லுவார்கள் (1.சாமு.10:2) எனக் குறிப்பாகக் கூறினார்.

இதைத் தவிர பொதுவான வழிநடத்துதலும் உண்டு.தொடர்ந்தும் சாமுவேல் சவுலிடம், இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது சமயத்திற்குஎற்றபடி நீ செய். தேவன் உன்னோடே இருக்கிறார் (1.சாமு.10:7) எனக் கூறியுள்ளதைப்பாருங்கள்! சவுலை, சாமுவேலின் கையில் உள்ள ஓர் இயந்திரமாகப் பயன்படுத்த தேவன்விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டத்திலும் தேவனே நேரடியாக நம்மை வழிநடத்தவிரும்புகிறார். நம்மை நடத்துவது அவர்தான் என்றாலும் தீர்மானித்துச்செயல்பட வேண்டிய பெரியபொறுப்பை நமக்குத் தேவன் அளித்துள்ளார். ஆகவே சமயத்திற்கு எற்றபடி நீ செய்.

நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்துநடக்கிறோம். உணர்ச்சியால் அல்ல. விசுவாசத்தால் நடக்கவேண்டும். அவரது சித்தத்தின்படிஅவரது வேளையில் நடத்த நம்மை அவர் கரங்களில் ஒப்புவிப்போம்.