February

பெப்ரவரி 12

பெப்ரவரி 12

உண்மையானவனைக் கர்த்தர் தற்காக்கிறார் (சங்.31:23).

தாவீது மிகுந்த துன்பங்களை அனுபவித்தவன்.கிறிஸ்து இயேசுவுக்குள் பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் என்றுதன் அனுபவத்தைக் கொண்டு பவுல் குறிப்பிட்டுள்ளார். பேதுருவும், உங்களைச் சோதிக்கும்படிஉங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்(1.பேதுரு.4:12) இருக்கவேண்டும் என்கிறார். தாவீது, நீதிமானுக்கு வரும் துன்பங்கள்அநேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் (சங்.34:19)என எழுதியுள்ளார்.

இங்கு எல்லாவற்றிலும் என்கிற வார்த்தையைக்கவனியுங்கள். சில நேரங்களில் இக்கட்டு அதிகரிக்கும்போது இந்த நேரத்தில் தேவன்நம்மை விட்டுவிட்டாரோ என்று பயப்படும்படியான சோதனை வரும். சங்கீதம் 31ல் தாவீது இவ்விதபயத்தை எதிர்நோக்கியிருந்தான். சர்வ வல்ல தேவனிடம் தான் கொண்டுள்ள நம்பிக்கையைத்தைரியமாக இதில் வெளிப்படுத்துகிறான். ஆகவே தன்னை வெட்கப்படுத்தாதபடி வேண்டுகிறான். இந்தவிண்ணப்பத்தைக் கேட்டு தேவன் பதிலளித்ததைக் கண்ட தாவீது, உமக்குப் பயந்தவர்களுக்கும்உம்மை நம்புகிறவர்களுக்கும் நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவுபெரிதாயிருக்கிறது. மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து…உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர் (வச.19-20) எனக் கூறியுள்ளான்.

உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார் என்பதைதத் தன் அனுபவத்தில் கண்ட தாவீதுநம்மைப் பார்த்து, நீங்களெல்லாரும்…. திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்என்று கூறி ஊக்கமளிக்கிறான் (வச.23-24).