ஐனவரி 2
மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான் (எபி.3:5). இஸ்ரவேலருக்குள் மோசேயைப்போன்ற சிறந்த தலைவனைக் காணமுடியாது. காலங்கள் தோன்றி மறைந்த தலைவர்களுள் சிறந்த தலைவன் என்றே கூறலாம். தலைசிறந்த பெருந்தலைவன் மோசே. இதற்கென அவன் நாற்பதாண்டு காலம் வனாந்தரத்தில் பயிற்சி பெற்றான். இதனால்த்தான் அவன் பார்வோனை எதிர்த்து நிற்கவும், ஒழுங்கீனமான இஸ்ரவேலரை ஒழுங்குபடுத்தி ஒரு பெரும் படையாகத் திரட்ட முடிந்தது. அவன் அவர்களை வனாந்தரத்தில் பொறுமையோடும், ஜெபத்தோடும் வழி நடத்தினான். முறுமுறுப்பின்றி தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். தனக்கென ஆதாயம்…