ஜூன் 4
‘அவர் நம்மிடத்தில் வைத்த தயவு‘
எபேசியர் 2:6
தேவன் நமக்குக் காண்பிக்கிற பட்சம் எப்படிப்பட்டது? கிறிஸ்தவர்கள் நடுவில் சுவிசேஷ ஒளி பிரகாசிக்குமிடத்தில் நாம் வாசம்பண்ணும்படி செய்கிறதிலும், நம்மைப் பயிற்றுவித்துவருகிற வகையிலும், நம்மைப் பாதுகாத்து வருவதிலும் இது விளங்குகிறது. முக்கியமாய் மாம்சத்தின் படியல்ல, ரத்தத்தினாலுமல்ல; தேவனால் நாம் மறுபடியும் பிறந்து மறுஜென்மமடையச் செய்ததில் இது காணப்படுகிறது. நாம் பிறந்த இடத்தில், பிறந்த காலத்தில் பிறந்து, நாம் படித்த பள்ளிக்கூடத்தில் படித்த எத்தனையோ பேர், மாம்சத்துக்குரியவர்களாய் நடந்து, தேவ சாபத்தைப்பெற்று மறுமையில் பிரவேசித்தார்கள். அல்லது அப்படிப்பட்ட நிலைமையில் இன்னுமிருக்கிறார்கள். நம்மை வித்தியாசப்படுத்தினது எது? கிருபையால் அழைக்கப்பட்டோம், இயேசுவின் நீதியால் குற்றமற்றவர்களாக்கப்பட்டோம், தேவவல்லமையால் பாதுகாக்கப்படுகிறோம், தேவவாக்கின்படி சகலத்தையும் பெற்றனுபவிக்கிறோம். தேவனோடு சகவாசஞ்செய்து இயேசுவின் வருகைக்கு நம்பிக்கையோடும், பரிசுத்த வாஞ்சையோடும், உறுதியான விசுவாசத்தோடும் எதிர்பார்த்திருக்கிறோம். இச் சீவனுக்கும் மறுமைக்குமுரிய வாக்குத்தத்தத்தையும் பெற்றிருக்கிறோம். நான் கிறிஸ்துவுடையவன், கிறிஸ்து தேவனுடையவர்; ஆதலால் சகலமும் என்னுடையதென்று சொல்லத் தைரியம் பெற்றிருக்கிறோம். நம்முடைய தேவன் நமக்குப் பாராட்டுந் தயவு எவ்வளவு பெரியது; அவருடைய கிருபை ஆராய்ந்து முடியாது; அவர் நமக்குக் காட்டும் பட்சம் ஆசசரியமானது,
என்னைப்போலே உம்மைப் பாடிப்,
போற்ற வேண்டுபவனார்?
பிதாவாம் உம்மைக் கொண்டாடி
கிறிஸ்து சொந்தமாக்கினார்;
நமக்குள்ள யாவும் தந்தார்
பாடக் கீதமும் தந்தார்;