ஜனுவரி 19
‘அவனே எனக்குச் சகோதரன்‘
மத்தேயு 12:50
இயேசுவுக்குச் சகோதான் யார்? பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன், தன் நற்கிரியைகளினால் தன் விசுவாசத்தைக் காண்பிக்கிறவன், தன் நல் நடக்கையினால், தன் பக்தியினால், சற்குணத்தினால், தன் சுபாவம் நற்சுபாவம் என்று காட்டுகிறவன். விசுவாசியே! இயேசு உன்னைச் சகோதரனென்று அழைக்கிறார். உன்னைச் சகோதரனாக எண்ணி நேசிக்கிறார். இது எவ்வளவு அன்பான நேசம், பரீட்சிக்கப்பட்ட நேசம், மரணத்திலும் பலனுள்ளது, அறிவுக்கு மிஞ்சினது. உன்னுடைய பலவீனங்களைத் தாங்குகிறார்; உன் புத்தியீனத்தைக் கடிந்துகொள்ளுகிறார். உன் விசுவாசத்தைப் பிரியப்படுத்துகிறார்; பயப்படவேண்டாமென்று சொல்லி, உனக்குத் தேவையானதெல்லாம் நிச்சயமாகவே தருவார். பஞ்சகாலத்தில் யோசேப்பு எகிப்தில் தன் சகோதாருக்கு வேண்டியதெல்லாம் கொடுத்திருக்க, இயேசு தன் சகோதாருக்கு வேண்டியதைக் கொடுக்கமாட்டாரா? அவர் கடினமாய் பேசுகிறவர்போல் காணப்பட்டாலும், பட்சமாய் சகோதரனைப்போல் நடத்துவார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குண்டு. அவர் சகலத்தையும் தமது இஷ்டபடி செய்கிறவர். நம்மைச் சகோதரரென்றழைக்க அவர் வெட்கப்படுகிறதில்லை. அவர் நம்மோடு பேசுகிறார். தினந்தோறும், நிமிஷந்தோறும் அவரோடு நாமும் பேசவேண்டுமென்கிறார். நீ கிருபாசனத்தண்டை சேரும்போது, உன் சகோதரன் அதில் வீற்றிருக்கிறார் என்று நினை. உன்னை அங்கே வரவழைத்து எந்த நற்காரியத்தையும் உனக்குக் கொடாமல் மறைக்கமாட்டார். ‘அருமையான இயேசுரட்சகரே! சகோதர நேசத்தை எனக்குக் காட்டி உமது சகோதர பஷத்தின்மேல் நான் சார்ந்திருக்கச் செய்யும்.’
தூதர்மேல் பணிந்து போற்றும்
நேசர் நம் சகோதான்;
நம்மோடவர் துதிசாற்றும்
ஓசை எட்டும் உம்பரன்.


