Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்

புதையல்

Webmaster by Webmaster
January 13, 2008
in சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
0
நீயே என் குரு!
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1)

You might also like

புத்துயிர்

ஆடு

பாவம் என்னும் பாம்பு

இரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில் ஒரு பெரும் புதையல் இருக்கிறது. உடனே அதைத் தோண்டி எடுங்கள் என்று கட்டளையிட்டான்.  அவ்விருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். தங்கமும் வெள்ளியும் நிலத்தில் புதையுண்டு கிடக்கிறது. அகழ்ந்து அவற்றை எடுப்போம் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அந்த தந்தை கூறியதின் பொருள் அதுவல்ல. அந்தக் கிராமத்தில் தண்ணீர் வசதியில்லாதிருந்தது. மூன்று மைல்களுக்கப்பாலிருந்து நீர் கொண்டு வரவேண்டும். இரு ககோதரர்களும் தினந்தோறும் விடாது நிலத்தைத் தோண்டலானார்கள். தகப்பன் அவர்களை ஊக்குவித்தான். மனந்தளராமல் தோண்டுங்கள். மிகவும் அருமையானதைக் கண்டுபிடிப்பீர்கள் என்று ஆர்வம் புகட்டினான். சில நாட்கள் கழிந்த பின் சகோதரர் இருவரும் களைப்புற்று மனம் சோர்ந்தனர். எல்லாம் வீண், தங்கமும் வெள்ளியும் கிடைத்தால்கூட நாம் தாகத்தால் மடிந்துவிடுவோம். தண்ணீரே தங்கத்தைவிட அரியது என்று புலம்ப ஆரம்பித்தனர். அச்சயம் திடீரென்று ஆழத்திலிருந்து ஒரு நீரூற்று சுரந்தது. சகோதரர்கள் ஆனந்தக் கூத்தாடினர். தந்தையிடம் ஓடிச் சென்று விவரமறிவித்தனர். தண்ணீருக்காக நிலத்தைத் தோண்டும்படி உங்களிடம் நான் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கமாட்டீர்கள். மற்றவர்கள் உழைக்கட்டும் என்று மறுத்திருப்பீர்கள்.  புதையலிருப்பதாகச் சொன்னபடியால்தான் உடனே போனீர்கள். பொன்னுக்காக நீங்கள் போனாலும் பொன்னைவிட அரிய பொருளைக் கண்டுபிடித்தீர்கள் என்று அத் தந்தை கூறினான்.

ஜெபம் என்பது நிலத்தைத் தோண்டுவது போன்ற ஒரு பயிற்சி. மனிதனின் ஆன்மீக வாழ்வை அது சிறப்புச் செய்கிறது.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

புத்துயிர்

January 23, 2008
நீயே என் குரு!

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7) இளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் முழுவதும் காயமுற்று இரத்தம் பெருக்கெடுத்ததால் அவன் மரணத்தருவாயிலிருந்தான். மருத்துவரும் தன்னால் எதுவும்...

Read moreDetails

ஆடு

January 17, 2008
நீயே என் குரு!

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)  நூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு தன் பணியாட்களிடம் கூறினான். ஆனால், கொடிய மிருகங்களுக்கு...

Read moreDetails

பாவம் என்னும் பாம்பு

January 6, 2008
நீயே என் குரு!

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10) நீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன் இருந்தான். தன் பலத்தை எல்லாம் இழந்து பலவீனப்பட்டிருந்த அவனுக்கு மிகச்...

Read moreDetails

நீயே என் குரு!

January 4, 2008
நீயே என் குரு!

நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.  (யோ..8:31-32) இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்பட்ட சிறு பெண்ணொருத்தி தீபேத் நாட்டின் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வந்தாள். அவள் இயேசுவின்மேல் செலுத்தும்...

Read moreDetails
Next Post

இராஜ்யத்தின் வாழ்வு

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?