Monday, March 2, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home இயேசுவுடன் நூறு நாட்கள்

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 5

Webmaster by Webmaster
May 11, 2022
in இயேசுவுடன் நூறு நாட்கள்
0
இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36
74
SHARES
1.2k
VIEWS

நாள் 5: அப்பாவி மக்கள் மீது படுகொலை (மத்தேயு 2:16-23)

இயேசுவின் உயிரை மற்ற குழந்தைகளின் மரணத்தினால் மட்டுமே காப்பாற்ற முடிந்தது என்பது ஒரு சோகமான காரியம். ஆனால் இந்த துயரமானது மனிதனின் பாவத்தின் விளைவாகும். சுகபோகமான, தீங்கற்ற, உன்னதமான செயல்கள் சில நேரங்களில் வலிமிகுந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. நம்முடைய கர்த்தரின் வார்த்தைகள், பட்டயத்தையும் அமைதியையும் கொண்டுவந்தது என்பதை தெளிவுபடுத்துகிறது.

You might also like

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

அப்பாவிகள் மத்தியில் படுகொலை (மத்.2:16-18)

சாஸ்திரிகள் வேறுதிசையில் சென்றுவிட்டதை அறிந்த ஏரோது மிகுந்த கோபமடைந்தார்.

ஆனால் அவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. எனவே பெத்தலகேமை சுற்றியுள்ள இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் படுகொலை செய்ய உத்தரவிட்டார். எனவே சிம்மாசனத்தில் அவரோடு யாரும் போட்டியிட முடியாதவாறு கவனமாக இருந்தார். ஏரோதுவைப் பொறுத்தவரை படுகொலை ஒன்றும் புதிதல்ல. ஏராளமான அரசியல் கொலைகளுக்கு மத்தியில், அவன் தனது மனைவி, மாமி மற்றும் அவனது மூன்று மகன்களைக் கொலைசெய்தான். இந்த மனிதாபிமானமற்ற அரக்கனுக்கு சிறிய குழந்தைளின் மரணம் பெரிதாகத் தெரியவில்லை. இந்த கொடூரமான நிகழ்வு பெத்லகேம் பெரிய பட்டணமாக இல்லாதபடியால் அதிஷ்டவசமாக சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளே பாதிக்கப்பட்டனர். மக்கள் இயேசுவை துரத்துவதற்கு எப்படியான செயல்ககளை மேற்கொள்ளுகிறார்கள்.

யோசேப்பின் நிபந்தனையற்ற கீழ்ப்படிதல் (மத்.2:19-23)

யோசேப்பு வம்சவரலாற்றின் பக்கங்களில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார். குறிப்பாக தேவனின் சித்தத்திற்குக் அவர் கீழ்ப்படிதல் இந்த தாழ்மையின் பண்புகளில் ஒன்று. தேவன் பேசியவுடன், அவர் தயக்கமின்றி நிபந்தனையின்றிக் கீழ்ப்படிந்தார். அவர் திருமண ஏற்பாடுகளை விட்டு, இலகுவல்லாத விளைவுகளை தம்மீது எடுத்துக்கொண்டார் (மத்.1:24). அவர் குழந்தைக்கு இயேசு என்று பெயரிட்டார் (மத்.1:25). அவர் தனது குடும்பத்தினருடன் எகிப்துக்குத் தப்பிச்சென்றார் (மத்.2:14). அவர் கலிலேயாவுக்குத் திரும்பினார் (மத்.2:21). (இந்த 20ம் வசனத்தை தயவுசெய்து யாத்திராகமம் 4:19 உடன் பார்க்கவும்)

தேவனின் திட்டத்தை எதிர்ப்பது எவ்வளவு அர்த்தமற்றது என்பதை வரலாறு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வால்டேர் என்று நன்கு அறியப்பட்ட பிரெஞ்சு நாத்திகர், அவரது சிறந்த தாலந்துகளை வேதாகமத்தை அலட்சியம்செய்யும்படியான காரியத்தில் செலவழித்தார். பிற்காலத்தில் ஜெனீவாவில் உள்ள அவரது வீடு வேதாகம சங்கத்தின் பொக்கிஷசாலையாக மாறியது. தேவனே இறுதியில் நகைப்பார்.

தெய்வீக எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்த யோசேப்பு (மத்.2:22), ஒரு சிறிய முக்கியமான பட்டணமான நாசரேத்துக்குத் திரும்பினார். இதன்மூலம் அவரது மகன் வெளிப்படையான காரியங்களுக்கு விலகியிருந்து, உலகத்தின் நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள ஏதுவாக இருந்தது. இந்தப் பட்டணம் அசட்டை செய்யப்பட்டிருந்தது, அதாவது நசரேயர்கள் என்ற மோசமான வார்த்தையையினால் இழிவுபடுத்தப்பட்டது, அந்தியோகியாவின் கிறிஸ்தவர்களைப் போலவே. (அப்.11:26).

பழைய ஏற்பாட்டின் மேற்கோள்கள் (மத்.2:6,15,18,23)

மத்தேயு இந்த அத்தியாயத்தை பழைய ஏற்பாட்டின் கருத்துக்களோடு மேற்கோள் காட்டும்போது சில சிக்கல்களை எழுப்புகிறது. ஒரு மேற்கோள் கூட மேசியாவின் பிறப்பில் தீர்க்கதரிசனமாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் சொந்த வரலாற்றை இணைத்துள்ளனர். மத்தேயு 2:23 வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஏசாயா 11:1 ற்கு ஒவ்வாததாகக் காணப்படுகிறது. ஆனால் எழுச்சியூட்டும் ஆவியின் வழிகாட்டுதலின் கீழ் உண்மையான ஆசிரியரான பரிசுத்த ஆவியானவர், மத்தேயு கிறிஸ்துவின் பிறப்பின் இரண்டாவது தீர்க்கதரிசன விளக்கத்தை அங்கீகரித்தார்.

உங்கள் சிந்தனைக்கு:

தேவனிடமிருந்து வரும் ஆறுதலையும் பலத்தையும் நாம் எடுக்கும்போது, அவரது குறிக்கோள்களுக்கு எதிரான எல்லாவற்றையும் அவர் தடுத்து நிறுத்துகிறார்.

Webmaster

Webmaster

Recommended For You

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 38

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும் நீதியும் காட்டப்படுகிறது. தவிர்க்க முடியாத விரோதம் (மத்.10:34-36) அவநம்பிக்கையின் பகை...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 37

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த நாட்களில் பயம் ஒரு அச்சுறுத்தும் காரணியாக உள்ளது. இது அனைத்து...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 36: அப்போஸ்தலராக இருப்பது சிரமமில்லாத ஊழியம் அல்ல மத்தேயு 10:16-23 தம்முடைய இராஜ்யத்தில் சேவையாற்றுவதற்கான முயற்சியை இயேசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. எந்த சீஷனும் எப்போதும் அவர் தவறான ஆசைக்காட்டி ஊழியத்திற்கு அழைத்தார் என்ற கூறமுடியாது. இந்தப்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 35

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 35: முதலாவது அனுப்புதல் மத்தேயு 10:5-15 அப்போஸ்தலர்களின் ஊழியத்திற்கு இயேசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகள் பலரைக் குழப்பிவிட்டன, ஆனால் இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. வரையறுக்கப்பட்ட கட்டளை (மத்.10:5-6) எல்லா தேசங்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது தேவனின் குறிக்கோள்...

Read moreDetails

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 34

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 36

நாள் 34: அறுவடைக்கு ஆயத்தம் (A) மத்தேயு 9:35-10:4 இந்தப் பகுதி கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது. கலிலேயா பட்டணங்கள் வழியாக அவரது பயணம் ஜனங்கள்மேல் இருந்த ஆழ்ந்த தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, மேய்ப்பர்கள் இல்லாத ஆடுகளைப்...

Read moreDetails
Next Post

நாள் 131 - எஸ்தர் 1-3

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • புலம்பல்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?