Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home கிறிஸ்தவ நூற்கள்

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தாவீதின் இரண்டாவது இழப்பு

Webmaster by Webmaster
February 15, 2025
in கிறிஸ்தவ நூற்கள்
0
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

சகோ. பக்த் சிங்

You might also like

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்- தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம்

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள்

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக் கொள்வதின் இரகசியம்

அத்தியாயம் – 4

தாவீதின் இரண்டாவது இழப்பு

(1 நாளாகமம் 13ம் 15ம் அதிகாரம்)

தாவீது அடைந்த இரண்டாவது பெரிய இழப்பை இங்கு பார்ப்போம். அதற்கு ஆதாரமாக இரண்டு வேதாகமப் பகுதிகளை வாசித்துத் தியானிப்போம். முதற் பகுதி 1 நாளாகமம் 13 ஆம் அதிகாரமும், அடுத்தது 1 நாளாகமம் 15 ஆம் அதிகாரமுமாகும். தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அதனுடைய இருப்பிடமாகிய எருசலேமுக்கு மறுபடியும் கொண்டுவந்து சேர்க்க வேண்டுமென்று தாவீது மிகவும் வாஞ்சையும் வைராக்கியமுமுள்ளவனாக இருந்தான். அதைச் செய்து முடிக்கப் பெரும் முயற்சி செய்தான். ஆனால், அந்தோ ! நேர்ந்ததென்ன? தேவ திட்டத்தின்படி செய்யாததால், தேவனுடைய நியாயத்தீர்ப்பு வந்தது. எண்ணாகமம் 4ஆம் 7ஆம் அதிகாரங்களில் தேவன் கட்டளையிட்டிருக்கிறபடியே இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டிச் சேர்த்து, ஆரோனின் குமாரரும், கோகாத்தின் புத்திரரும் தங்களது தோள்களின் மீது பெட்டியைச் சுமந்து, இதர அலுவல்களை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தாவீது சுய ஞானத்திலும், வாஞ்சையிலும் புதியதொரு வண்டியில் பெட்டியைக் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தான். பெலிஸ்தர் தான் இவ்விதமாகச் செய்தார்கள் என்று 1 சாமுவேல 6ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.

ஏலியின் புதல்வர்கள் புத்தியீனமாய் உடன்படிக்கைப்பெட்டியைப் போர்முனைக்குக் கொண்டு சென்றது நினைவிலிருக்கலாம். பெலிஸ்தர் பெட்டியைக் கைப்பற்றித் தங்களது விக்கிரக தெய்வத்தின் கோவிலில் கொண்டு போய் வைத்தார்கள். தாகோன் என்னும் அவர்களது மீன்-தெய்வம், தேவனுடைய பெட்டிக்கு முன்பாகக் கீழே விழுந்து உடைந்துகிடந்தது. பின்னர் பயத்தினால் பெட்டியைக் காத், எக்ரோன் என்ற பெலிஸ்தரின் பட்டணங்களுக்கு அனுப்பினபோது, அங்கெல்லாம் தேவனுடைய பலத்த நியாயத் தீர்ப்பு வந்தது என்னும் விவரமும் நினைவிருக்கலாம். தேவனுடைய பெட்டி சென்ற இடமெல்லாம் தேவ கோபாக்கினை வந்தது. (1 சாமுவேல் 5: 10-12). எனவே வேறு வழியின்றி, முடிவிலே பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை இஸ்ரவேலரின் நாட்டிற்கே அனுப்பி விட்டார்கள் என்று 1 சாமுவேல் 6ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். பின்பு பெட்டி கீரியாத்யாரீமிலே அபினதாபின் வீட்டிலே வைக்கப்

பட்டிருந்தது.

அநேக ஆண்டுகளுக்குப் பிறகு தாவீது உடன்படிக்கைப்பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வர வேண்டுமென்று தீர்மானித்தபோது, அவனும் பெலிஸ்தர் செய்தது போலவே செய்தான்.  வியின் புத்திரராகிய கோகாத்தியரால் மட்டும் தேவனுடைய பெட்டி தோள்களின் மீது சுமக்கப்பட வேண்டும் என்று எண்ணாகமம் 4: 15 லும், 7:9 லும் தேவன் திட்டவட்டமாகக் கட்டளையிட்டிருக்கிறார். அதை ஒருபோதும் வண்டியிலோ, வேறு முறையிலோ கொண்டு போகக்கூடாது. தனது மிகுதியான ஆவலினாலும், பக்தி வைராக்கியத்தினாலும், லேவியரிடம் விசாரிப்பதற்குப் பதிலாக, தாவீது ஆயிரம் பேருக்குத் தலைவரோடும், நூறு பேருக்குத் தலைவரோடும், சகல அதிபதிகளோடும் ஆலோசனை பண்ணினான் என்று 1 நாளாகமம் 13: 1 ல் வாசிக்கிறோம். “இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்” (வ. 4). அதன் பலன் என்னவென்றால், உடன்படிக்கைப் பெட்டி ஒரு புது ரதத்தின்மீது வைக்கப்பட்டு, காளைகளால் இழுத்துச் செல்லப்படும்போது, காளைகள் இடறினபடியால், பெட்டி சரிந்தது. பெட்டி கீழே விழாமல் தடுத்து, அதை நேராக வைக்கும்படி ஊசா பெட்டியைத் தொட்டபொழுது, கர்த்தரின் கோபம் ஊசாவின் மேல் மூண்டது. கர்த்தர் அவனை அடித்தார். அவன் அங்கே தேவ சமுகத்தில் செத்தான். எனவே அவர்கள் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வருவது அன்று தடைப்பட்டது.

13 ஆம் அதிகாரத்தில் தாவீது தான் செய்த பெரும் பிழையை அறிந்துணர்ந்தவனாக, 15 ஆம் அதிகாரத்தில் மனந்திரும்புவதைக் காண்கிறோம். இப்பொழுது தாவீது, லேவியரையும், ஆரோனுடைய குமாரரையும் கூடிவரச் செய்தான் (1 நாளாகமம் 15:4 – 5; 11 – 13). அவர்களிடம் தனது தவறை அறிக்கை செய்தான். தேவனுடைய ஆலோசனையை விசாரித்தறியாமலிருந்ததினாலும், எண்ணாகமத்திலும், உபாகமத்திலும் தெளிவும் திட்டமுமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கை விட்டு விட்டதினாலும் உண்டான தேவ கோபம், சாபம் என்னவென்றும், மக்களெல்லாருக்கும் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்றும் எடுத்துரைத்தான். ஆனால் இப்பொழுதோ, தேவனுடைய சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, தேவ வசனத்திலே வெளிப்படுத்தப்பட்டபடியே செய்வதற்கு ஒப்புக்கொண்டவுடன், தாவீதும், இஸ்ரவேலனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேவனுடைய பெட்டியை அதனுடைய ஸ்தானத்திற்குக் கொண்டு வந்தார்கள் (1 நாளாகமம் 15: 28).

இவ்விதமாகத் தெய்வீக ஒழுங்கின்படி, தான் பெற்ற இம்மா பெரும் வெற்றிக்குப் பின், தாவீது 105 ஆம் சங்கீதத்திலுள்ள ஸ்தோத்திரப் பாடலை இயற்றினான். இது, உடன் படிக்கைப்பெட்டி எருசலேமுக்குத் திரும்பவந்ததினாலுண்டான மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதாகவும், அவனது உள்ளத்தின் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துவதுமாயிருக்கின்றது. “கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கையை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்; அவரைப்பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்; அவருடைய செய்கையை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப் படுத்துங்கள். அவரைப்பாடி, அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.” (1-7; 14-45). தாவீதின் இதயம் நன்றியால் நிரம்பி, கர்த்தருக்குள் களிகூர்ந்து, கெம்பீரத்துடன், அவன் ஜனங்களிடம் கூறினதாவது : “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்: அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்,” என்பதே. தேவனுடைய முகத்தை எப்பொழுதும் தேடி, ஒவ்வொரு காரியத்திலும் அவரது ஒழுங்கு முறையை அறிந்து, அனுசரிக்காமற்போனால் நமது கடமைகள், நடவடிக்கைகள், திட்டங்கள் யாவற்றிலும்-வீட்டிலானாலும் வெளியிலானாலும், சபையிலானாலும்-எங்கும், எப்பொழுதும் பெருத்த நஷ்டமடைவோமென்பது திண்ணம். தேவனுடைய ஆலோசனைகளையும், வழிகளையும் விட்டு, நமது வைராக்கியம், வாஞ்சை, ஞானம், அறிவு, ஆராய்ச்சி ஆகியவற்றால் ஆட்கொள்ளப்படலாகாது.

இக்காலத்திலும் தேவனுடைய ஜனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் காரணம், தேவனுடைய வார்த்தையின்படியே நடவாததுதான். உதாரணமாக, சபையின் மூப்பர்கள், கண்காணிகளானவர்கள் ஒருக்காலும் அரசியல் தேர்தல் முறையாகிய வாக்கெடுப்பின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கர்த்தருடைய வார்த்தை திட்டவட்டமாகக் கூறுகின்றது. ஆனால் மிகுந்த ஜெபத்தின் மூலம், எல்லாரும் ஏகமனதாகத் தகுதியுள்ளவர்களைத் தெரிந்தெடுத்துப் பின்பு சோதித்து, பயிற்சியளித்து, எச்சரிப்போடும், விழிப்போடும் நியமிக்க வேண்டும். இது தான் தெய்வீக ஒழுங்கு. ஆனால், அந்தோ, பரிதாபம்! கர்த்தருடைய வீட்டிலுள்ள இந்த மேன்மையான ஆவிக்குரிய ஊழியத்திற்கு பெரும்பான்மையான சபைப் பிரிவுகளிலும், கிறிஸ்தவக் குழுக்களிலும், மூப்பர்களும், கமிட்டி உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஜெபத்தில் தரித்திருந்தே மூப்பர்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிந்திருப்பவர்களும், நம்புகிறவர்களும் தாங்களே, தேவனுடைய ஊழியக்காரராகவும், உடன் வேலையாட்களா கவுமிருந்த போதிலும், மூப்பர்களை நியமிக்கும் இந்த முக்கியமான பணியில் கவலையற்றவர்களாகவும், குறைவுள்ளவர்களாகவும், கடமையில் தவறுகிறவர்களாகவும் காணப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒருவருடைய உலகப்பிரகாரமான தகுதிகள், அந்தஸ்துகள், படிப்புகள், திறமை முதலான அம்சங்களினாலே அவரைத் தெரிந்து கொள்ள ஏவப்படுகின்றனர். இந்தத் தவறான நியமனங்களின் விளைவாக அநேக சபைகளிலே சண்டைகளும், சச்சரவுகளும் போட்டிகளும் பொறாமைகளும் பரவலாகக் காணப்படுகின்றன, இத்தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களை வெறுக்கவும், குறை கூறவும் அவர்களுடன் சண்டையிடவும் ஆரம்பிக்கின்றனர். இப்போட்டியின் எதிரொலி சபை முழுவதும் பரவுகிறது. தலைவர்களைச்சார்ந்து கட்சிகளும், பின்பு குழப்பங்களும் ஏற்படுகின்றன. இவையெல்லாவற்றின் நிகர பலன் என்னவென்றால் ஆவிக்குரிய கனியின்மையும், வளர்ச்சியின்மையும் வறட்சியுமாகும். அநேக ஆராதனைகளுக்கும், சபைகூடுதல்களுக்கும் வருகின்ற மக்கள், வந்தவண்ணமாகவே, ஆவிக்குரிய பசியோடும், தேட்டத்தோடும் திரும்பிச் செல்கின்றனர்.

அடுத்ததாக, ஆதிச்சபையிலே, விசுவாசிகள் தங்கள் தேவைகளுக்கெல்லாம் தேவனையே சார்ந்திருந்தார்கள். அவர்கள் யாரிடமும் உதவி கேட்கவோ, அல்லது குறிப்பால் தெரிவித்து தங்கள் குறைவைப் போக்கவோ முற்படவில்லை. தேவனை மட்டும் நம்பியிருந்தார்கள். தேவன் அவர்கள் விசுவாசத்தைக் கனப்படுத்தி, வேண்டியவைகளை அருளினார். எனவே அவர்கள் யாசிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால், இந்நாட்களில், அந்தோ பரிதாபம்! விசுவாசிகள் பலர் தங்கள் பணக்குறைவையும், இதர தேவைகளையும் எத்தனையோ வழிகளில் தெரிவிக்கின்றனர். நேர்முகமாக இல்லாவிடினும், மறைமுகமாகத் தெரியப்படுத்துகின்றனர் ! பலவந்தப்படுத்தி, தங்கள் சாதுரியத்தால் நெருக்கங் கொடுத்தும் பணத்தைக் கறக்க முயற்சிக்கின்றனர். இப்பேர்ப்பட்ட பணத்தைத் தேவன் ஆசீர்வதிக்கவோ, பரிசுத்தப்படுத்தவோ முடியாது. இவர்கள் தேவனுடைய சட்டதிட்டங்களையும் ஒழுங்குகளையும் புறக்கணித்து விட்டாலும், வேதாகமத்திற்கு முரணான முறைகளை மேற்கொள்வதாலும் பெருத்த ஆவிக்குரிய நஷ்டத்தையடைகின்றனர்.

தாவீது யூத அரசர்களுக்குள் பெரியவன் என்பதில் ஐயமில்லை. மாபெரும் போர்கள் புரிந்தவன்தான். தேவனுடைய இதயத்திற்கு உகந்தவன் என்று நற்சாட்சி பெற்றிருந்தான். ஞானிதான். பக்தன்தான். தேவன் அவனை அதிகமாய்ப் பயன் படுத்தி வந்தது உண்மையே என்றாலும், தேவனுடைய பெட்டியை அதனுடைய இருப்பிடத்திற்குக் கொண்டு வருவதற்குத் தன் சுய ஞானத்திலும், பலத்திலும் முயற்சித்தான். மக்களும் அம் முறை சரி எனக் கருதினர். தாவீது தன் தளபதிகள், பிரபுக்கள், அதிகாரிகளோடு ஆலோசனை பண்ணி, படைஅணிவகுப்புடன், வெற்றிமாலை சூடி, திருவிழாக் கோலத்துடன் பெட்டியை ரதத்தில் வைத்துக் கொண்டுவர வேண்டுமென எல்லோருமாக முடிவு செய்தனர். தேவனுக்குத் தொண்டு புரிவதாக எண்ணினார்கள். ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்கும், ஒழுங்குக்கும் முற்றிலும் முரணானது என்பதை அறியவில்லை. எல்லாம் சுயமாக இருந்தது.

தேவன், தயவும்’ கிருபையும், இரக்கமுமுள்ளவரானபடியால் தாவீது தன் தப்பிதத்திற்காக மனஸ்தாபப்பட்ட போது தேவன் அவனை மன்னித்தார். நாமும் நம்மைத் தாழ்த்தி நமது குற்றங்களையும், குறைகளையும் அவரிடம் அறிக்கையிடும்போது, அவர் நம்மையும் மன்னித்து, நாமிழந்ததையெல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்ள உதவி செய்கிறார். தாவீது தேவ ஒழுங்குக்குள் வந்தவுடன் தோல்வியெல்லாம் வெற்றியாக மாறிற்று. வேத வாக்கியங்களில் காணப்படுகிற அவநது கட்டளையின்படியே கோகாத்தின் புத்திரர் தேவனுடைய பெட்டியைத் தங்கள் தோள்களின்மீது சுமந்துகொண்டு எருசலேமுக்கு வந்தபொழுது எல்லாம் மங்களகரமாய் முடிந்தது. விபத்து எதுவும் நேரிடவில்லை. இஸ்ரவேல் மக்களனைவரும் மகிழ்ந்து பாடினார்கள். தேவன் மகிமைப்பட்டார்; அவரது வார்த்தையும் கனப்படுத்தப்பட்டது.

தேவனுடைய பெட்டி நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே குறித்துப் பேசுகிறது. அது அவருக்கு அடையாளமாயிருக்கிறது. மெய்யாகவே மறுபடியும் பிறந்து, அவராலே அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே அவரது உரிமை, அதிகாரம், அவர் அருளும் இரட்சிப்பு ஆகியவற்றை மக்களுக்கு அறிவிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். அதாவது தேவனுடைய பிள்ளைகளாயிருந்து, அவரால் அழைக்கப்பட்ட ஊழியர்கள் மட்டும் தான் கிறிஸ்துவைச் சுமந்து செல்ல முடியும். இதை ஆராய்கின்ற வேளையிலே, தற்காலத்தில் தேவனால் ஊழியத்திற்கு அழைக்கப்படாதஅநேகர். மிஷனரி ஸ்தாபானங்களுக்கும், ஊழிய ஸ்தலங்களுக்கும் கட்டாயமாக அனுப்பப்படுகின்றனர். அதன் விளைவாக ஊழியத்தில் ஒரு முன்னேற்றமும், சாதனையும் இல்லாததோடு இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து புறப்பட்டுச் சென்ற மிஷனரிகளில் மூன்றில் இரண்டு பேர் தாயகம் சென்றால், தங்களது ஊழியஸ்தானத்திற்குத் திரும்புகிறதே இல்லை! தங்களது முதல் ஒப்பந்த காலமாகிய ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தங்கள் தாய் நாடு சென்று, அங்கேயே இருந்துவிடுகிறார்கள். மிகுந்த ஏமாற்றத் தோடும், மனமடிவோடும் திரும்புகின்றனர். இவ்விதம் மனம் நொந்து, நரம்புத்தளர்ச்சியுடன் அவர்கள் திரும்புவதற்குக் காரணம், அவர்களை ஒருபோதும் தேவன் அழைக்கவே இல்லை. அவர்கள் தன்னிச்சையாகவே, ஒரு கமிட்டியால் அனுப்பப்பட்டோ, அல்லது மிஷனரி நிறுவனத்தில் பொறுப்புள்ள ஒருவரின் சிபாரிசினாலோ, தூண்டுதலினாலோ புறப்பட்டு வந்தவர்கள். அவ்விதமாகவே, உள்நாட்டிலும், கிறிஸ்தவ வட்டாரங்களிலே, செல்வம், செல்வாக்கு, கல்வி, திறமை என்ற காரணங்களின் அடிப்படையிலே தேவனால் தெரிந்துகொள்ளப்படாத அநேகர் பொறுப்பான சபைகாரியங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர். ஆனால் மந்தையை மேய்ப்பதற்கோ, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கோ (கண்காணிப்பதற்கோ) திராணியில்லாமல் திகைக்கிறார்கள்:

திருமண காரியங்களிலும் இதே உண்மைதான் நிலவுகிறது. திருமணப் பருவமடைந்தவுடன், பெரும்பான்மையினர் தங்கள் லெளகீக ஞானத்தையும், மனுஷீக புத்தியையும், யோசனையையுமே பயன்படுத்துகின்றனர். விசுவாசிகளாக இருந்தாலும், வாலிபப் பெண்களும், ஆண்களும் காதலுணர்ச்சி அல்லது வேறு கவர்ச்சியினாலே உந்தப்பட்டு வாழ்க்கைத் துணையைத்தேடி, மணம் புரிந்துகொள்ள முடிவு செய்கின்றனர். அவ்வேளையிலே தேவன் தான் தங்களைத் தம்பதிகளாக இணைப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆகிலும் அவர்கள் தேவனுடைய முகத்தைத் தேடவில்லை! தேவசித்தம் அறிய ஆசிக்கவுமில்லை! இதையெல்லாம் விசுவாசிகளைக் குறித்துத்தான் கூறுகின்றேன். அவிசுவாசிகளைப் பற்றியல்ல. அதேனென்றால், நாம் விசுவாசிகளானபடியால் தேவனிடம் சென்று, அவரது சித்தத்தை ஒவ்வொரு விஷயத்திலும் தெரிந்து கொள்ளும் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். தம்முகத்தைத் தேடி, தமது நோக்கத்தையும், சித்தத்தையும் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் “காணப்படுவேன், பதிலளிப்பேன், போதிப்பேன்” என்று தேவன் வாக்குரைத்திருக்கிறார். தங்கள் விவாக காரியங்களில், தேவன் தங்களுக்காகத் தெரிந்து கொண்டதை அவரிடம் கேட்டு விசாரிப்பதற்குப் பதிலாக, அநேக விசுவாசிகள் தங்களையே கேட்டுக்கொள்கிறார்கள். அதாவது தங்களுடைய விருப்பு வெறுப்புகள், உணர்ச்சிகள், எண்ணங்களின்படியே முடிவு செய்கிறார்கள். அல்லது தங்கள் மதிப்பிற்குரிய நண்பர்கள், இனத்தவர்களைக் கலந்துகொள்கிறார்கள். தங்களது முழங்கால்களில் நின்று, ஆண்டவரிடம் காத்திருந்து, அந்தக் காரியத்தை விசாரித்தறிவதில்லை. ஜெபித்து தேவனுடைய சித்தத்தைத் தெரிந்து கொள்ளக்கூடியவர்களோடு கூடி ஜெபிக்கவும் மறுத்து விடுகிறார்கள். எனவே தான் எண்ணிறந்த இதயங்களிலும், இல்லங்களிலும் இன்பமில்லை. தங்கள் இல்லறவாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்த்தலோடும் துவங்குகிறார்கள்; ஆனால் வெகு சீக்கிரத்திலேயே, இவ்விளம் தம்பதிகள் தங்களது பொருத்தமின்மையையும், சேர்ந்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும் உணருகிறார்கள். குடும்பத்தில் தகராறுகளும், பிரிவினைகளும் அதிகரிக்கின்றன. உள்ளத்தில் சந்தோஷம் மறைந்து, துக்கம் குடிகொண்டிருக்கிறது.

திவ்ய ஏற்பாட்டின்படி, சபையிலோ, ஊழியத்திலோ, அல்லது கர்த்தருடைய வீட்டின் பணிவிடையிலோ, ஒவ்வொரு காரியத்திலும், விசுவாசிகளாகிய நாம் தேவனுடைய பூரண சித்தத்தைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் பாக்கியம் நமக்குண்டு. நாட்டில் பற்பல பகுதிகளுக்கும், ஏன்? உலகமெங்குமே, சுவிசேஷத்தை பரப்பவேண்டுமென்ற வாஞ்சையும், வைராக்கியமும் அநேகரிடமுண்டு! மிகுந்த ஆர்வத்தோடும், பக்தி வைராக்கியத்தோடும், வீடு வீடாகவும், நாடு நாடாகவும், ஏராளமான நேரம், பணம், பலம் இவற்றைச் செலவிட்டுச் சென்று வருகின்றனர்! ஆகிலும் அவர்கள் அதிகம் சாதிப்பதாகத் தெரியவில்லை; கனிகளைக் காணோம். ஆரம்பத்தில் அநேகர் வேதாகமங்களையும், ஆவிக்குரிய நூல்களையும் அதிகமாக வாங்குவதையும், அக்கறையுடனும், ஆர்வத்துடனும் வேதாகமத்தை வாசிப்பதையும் கண்டு களிக்கிறார்கள். எனினும், அதன் பலனாக இரட்சிக்கப்படுகிறவர்கள் வெகு சிலரே என்பதைக் கண்டுகொள்ள நாளாகிறது. நாம் அவர்களை அதிகம் குற்றப்படுத்தக்கூடாது; ஏனெனில் நாமும் இவ்விஷயத்தில் குற்றவாளிகள் தான்.

நானும் எனது சொந்த அனுபவத்திலிருந்து இதைத் தான் சாட்சியாகக் கூறமுடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு (1933 – ல்) நான் எனது ஊழியத்தைக் கராச்சி நகரத்திலே தொடங்கினபோது நானும் இந்தியாவின் பல பாஷைகளிலுமுள்ள சுவிசேஷப்பிரதிகளையும், சிறுபுத்தகங்களையும், துண்டுப்பிரதிகளையும் ஏராளமாக எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகவும், வீடுவீடாகவும் போய் வருவேன். விடியுமுன்பே ஊழியத்தில் ஈடுபடத் தொடங்குவேன். சுவிசேஷங்களையும், வேதாகமங்களையும், இதர நூல்களையும் துண்டுப் பிரதிகளையும் பெருமளவில் வினியோகம் செய்ததுடன், அநேகரைச் சந்தித்துப் பலரோடு தொடர்புகொண்டேன். அநேக இந்துக்களும், முகம்மதியரும், சீக்கியரும் ஆர்வம் காண்பித்தனர். அவர்கள் என்னைத் தங்கள் இல்லங்களுக்கழைத்து, அவர்களோடு அமர்த்தி, மணிக்கணக்காக அவர்களுடன் ஆண்டவரைப்பற்றியும், இரட்சிப்பின் வழியைப் பற்றியும் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தனர். என்னுடைய சாட்சியையும் தெளிவாகக் கூறினேன். ஆனாலும் ஒரு பலனையும் நான் காணவில்லை. அந்த ஊழியத்தின் மூலமாக மறுபிறப்படைந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆகிலும் எனது கடமை முடிந்ததாக என்னைத் தேற்றிக் கொண்டேன். ஆத்துமாக்கள் ஒரே நாளிலா மறுபடியும் பிறந்து விடுவார்கள்? தேவனுடைய வேளை வரும்போது, அதிகப் பலனைத் தந்து ஆசீர்வதிப்பார் என்றெல்லாம் எண்ணி என்னைத் தேற்றிக் கொண்டேன். ஆனாலும், சிறிது காலத்தில் நான் மனம் சோர்ந்து போனேன். “ஆண்டவரே, ஏன் பலனில்லை? ஆத்துமாக்கள் அநேகம் இரட்சிக்கப்படவில்லையே? எனது அயறா உழைப்பினாலும், சேவையினாலும், அதிக கனிகள் காணப்படாத காரணம் கூற மாட்டீரா? பல நாட்களில் உணவையும் மறந்து, பல மைல்கள் கால் நடையாகச் சென்று, பல தியாகங்கள் செய்து, பலரிடம் சத்தியத்தை அறிவித்து வருகிறேன். என்றாலும் இவற்றால் ஒரு பலனுமில்லையே!” என்று ஆண்டவரிடம் கேட்டேன். அதற்குக் கர்த்தர் தெளிவாகப் பதிலளித்தார். “நீ அநேக வேளைகளில் உனது உணவை மறந்து விடு; பசிதாகத்துடனிரு; பல மைல்கள் அலைந்து திரி என்று ஒரு போதும் நான் உனக்குக் கட்டளையிடவில்லையே ! இவையெல்லாவற்றையும் நீ உனது சொந்த ஞானத்திலே செய்து வருகிறாய்” என்றார். இதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். தேவன் என்னைத் தமது ஊழியத்திற்கென்று பிரித்தழைத்தவுடனே; அதாவது, நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதற்கு முன்பே, நான் என் சுயமாக எந்தத் திட்டமும் பண்ணக்கூடாதென்று தேவன் எனக்குக் கட்டளையிட்டிருந்தும், எப்படியோ அதன் முழு கருத்தையும் புரிந்துகொள்ளாமலே வேலைசெய்து வந்தேன். நாம் கர்த்தரின் பிள்ளைகள், விசுவாசிகள், என்ற முறையில் அவரது முகத்தை நித்தமும் தேடி, ஒவ்வொரு நாளையும் தொடங்கு முன்பாக அவரது பரலோக திட்டத்தையும் ஒழுங்கையும் அறிந்து செயல்படலாம் என்கிற பேருண்மையைக் கண்டு கொண்டேன். அந்நாளில் நான் வெளியே எங்கும் செல்லப்போவதில்லை என்று தீர்மானித்தேன். கர்த்தர் என்னோடு பேசப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்தேன். எனவே ஜெபத்திலேயே தரித்திருந்தேன். நீண்ட நேரத்திற்குப் பிறகு “நீ வீரர்களின் வீதிக்கு போக வேண்டும்” என்று கூறினார். நான் உடனே எனது நண்பர்களை அழைத்து, “வீரர்களின் வீதியிலே ஒருவர் ஆயத்தமாயிருக்கிறதாக கர்த்தர் சொன்னார். ஆகையால் என்னுடன் வாருங்கள்; நாம் போகலாம்” என்றேன். அதற்கு அவர்கள், “அவ்விடம் வெகுதூரமாயிற்றே; இங்கிருந்து சுமார் நான்கு மைல்களிருக்கும். இப்பொழுதோ உச்சி வேளை, மேலும் இன்றையத்தினம் மிக உஷ்ணமாயிருக்கிறது. எனவே நாளை காலையில் குளிர்ந்த நேரத்தில் கட்டாயம் போவோம்” என்று பதிலளித்தார்கள். நான் அதற்கு இணங்கவில்லை. “இல்லை, இல்லை. இப்பொழுதே போகவேண்டுமென்று ஆண்டவர் திட்டமாகக் கூறிவிட்டார். அங்கு யாரோ ஒருவர் கர்த்தரின் செய்திக்காகப் பசியுடன் காத்துக் கொண்டிருக்கிறார். நாம் ஆண்டவரை வஞ்சித்துத் துக்கப்படுத்தக்கூடாது. நாம் இப்பொழுதே போகத்தான் வேண்டும்” என்று அவர்களை வற்புறுத்தினேன். அவர்கள் தயக்கத்தோடும், கஷ்டத்தோடும் புறப்பட்டனர். அந் நாட்களில் ஒரு பட்டணத்திற்குள் சுவிசேஷ ஊழியத்துக்குப் போகும்போதெல்லாம் பஸ், டிராம், இரயில் முதலியவைகளில் போகாமல், கால் நடையாகவே பல்வேறிடங்களுக்கும் நாங்கள் செல்வது வழக்கம். சுமார் நான்கு மைல்கள் நடந்து, ஒரு கடையின் முன்பாகத் திறந்த வெளியிருப்பதைக்கண்டு, அங்கு கூடி. ஒரு கீதம் பாடி, செய்தி கூறத் தொடங்கினோம். முஸ்லீம் ஒருவர் அக்கடையினின்று வெளியே வந்து, “இது என்னுடைய கடை. நான் ஒரு முஸ்லீம். எனது கடையின்முன் நின்று கொண்டு கிறிஸ்தவர்கள் பிரசங்கிப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினார். நான் பிரதியுத்தரமாக: “நல்லது ஐயா. தேவனுடைய செய்தியை யார் மீதும் திணிக்க முடியாது. ஆனால் நாங்கள் இவ்விடத்தை விட்டுப் போகும்படி நீர் நிர்ப்பந்தித்தால், நியாயத்தீர்ப்பின் நாளிலே நீர் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். நாங்கள் அவரால் அனுப்பப்பட்டிருக்கிறோம். நீர் எங்களை விரும்பாவிடில், இதோ, நாங்கள் வேறிடம் போகிறோம். ஆனால் இதற்குரிய பொறுப்பு முற்றிலும் உம்மைச் சேரும்,” என்று கூறினேன்.

நாங்கள் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, வேறொரு திறந்த வெளியைப் பார்த்து, அங்கே நின்று, பாடி, பிரசங்கிக்கத் துவங்கினோம். உடனே ஒரு காவற்காரன் அங்கு வந்து, எங்களைத் தடைபண்ணி, “இது காவல் நிலையம். நீங்கள் இங்கே கூட்டம்போட்டு, கூச்சலிடக்கூடாது” என்று சொன்னான். உடனே நான், “ஆண்டவரே, வீரர்களின் வீதிக்குச் செல்லுமாறு கட்டளையிட்டீர்; ஆனால் இங்கு யாரும் எங்களை விரும்பவில்லையே” என்று ஜெபித்தேன். அந்த இடத்தையும் விட்டு முன்னோக்கிச் சென்று, வேறொரு வெற்றிடத்தைக்கண்டபோது, அங்கே நிற்கும்படி ஆண்டவர் கூறினார். அவ்வாறே அங்கே ஊழியத்தைத் தடையின்றி நிறைவேற்றினோம். எப்பொழுதுமே பிரசங்கத்திற்கு முன்பும், பின்பும் நாங்கள் ஜெபிப்பது வழக்கம். செய்தி கொடுப்பதற்கு முன்பு ஜெபிப்பது, அதிக நன்மை பயக்கிறது என்பதை அனுபவத்தின் மூலம் நன்கு அறிந்துள்ளோம். மேலும் எவ்விடத்தில் ஜெபித்தாலும், முழங்காலில் நின்று ஜெபிப்பதையே ஒரு விதியாக அல்லது மரபு ஆகக் கொண்டுள்ளோம், முழங்காற்படியிட்டு, தேவன் தமது செய்தியைத் தந்தருள வேண்டுமென்றும், கேட்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நாம் மன்றாடுவதைப் பார்ப்பவர்களின் இதயங்கள் இளகுகின்றன. தேவதூதை ஆவலோடு கேட்க ஏவப்படுகிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்திலும் ஜெபம்பண்ணி, நான் பிரசங்கித்தேன். அதன் முடிவிலும் ஜெபித்த பிறகு, ஒரு மனிதன் வேகமாக வந்து, “ஐயா, எனது பெயர் அமரநாத். எனக்காகத்தான் கடவுள் உங்களை அனுப்பியிருக்கிறார். நான் ஒரு இந்து. பஞ்சாப் பல்கலைக் கழக பட்டதாரி. கடந்த நான்கு வருடங்களாக ஆத்மசாந்தி பெறும்படி பல இடங்களிலும் தேடியலைகிறேன். ஆனால் ஒருவராலும் எனக்கு உதவிசெய்ய முடியவில்லை. பிரபலமான புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் யாத்திரை சென்றேன். அவையெல்லாம் ஏனோ எந்த விதமான சாந்தியும், திருப்தியும் தரவில்லை. அதன்பின், மெய்க்கிறிஸ்தவர்கள் யாரையாவது சந்திக்க மிகுந்த ஆவலுடையவனாயிருந்தேன். ஆனால் எங்கு சென்று யாரைச் சந்திப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இவ்விடம் வந்து கிறிஸ்தவ கீதம் பாடினவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கடவுள் தான் எனக்கென்று உங்களையனுப்பியிருக்கிறார்.” என்று விவரித்தார். அந்நாளில் அமரநாத் மெய்ச்சமாதானத்தையும், சாந்தியையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டார். மேலும் பலர் வேதாகமத்தைப் படிப்பதையும் கிறிஸ்துவில் நிலையான மெய்ச்சந்தோஷத்தைக் கண்டறிவதையும் பார்த்து அந்நாளில் என்னுள்ளமும் பூரித்தது.

அந்நாள் முதல் எனது ஊழியமே புரட்சிகரமான மாறுதலடைந்தது. கர்த்தர் எங்களைப் பல்வேறிடங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறார். சில இடங்கள் வெறுமையாகவும், தனிமையாகவும் தோற்றமளித்தன. மக்கள் குறைவாக உள்ள இடங்கள் பல உண்டு. ஆனாலும் ஆண்டவர் ஆத்துமாக்களை இரட்சிக்கத் துவங்கினார். ஆண்டவரின் சமுகத்தில் ஏகோபித்துக் காத்திருந்து, அவரது திட்டத்தையும், தீர்மானத்தையும் அறிந்து, அவர் வெளிப்படுத்துகிறபிரகாரமே வெளியே போகவேண்டுமெனத் தீர்மானித்த நாளிலிருந்து ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுகிறதையும், நற்பலனையும் காண்கிறோம். அதுமுதல் எங்களது ஊழியம் நாளுக்கு நாள் மேம்பட்டு, வளர்ந்துகொண்டே இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பர்னூல் என்னும் குக்கிராமத்துக்குச் செல்லுமாறு கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார். அவ்விடத்திற்கு நான் அதற்கு முன் சென்றதும் இல்லை; அப்பெயரைக் கேள்விப்பட்டதும் இல்லை. எனவே அதைக் குறித்து நான் மறுபடியும் விண்ணப்பம் செய்தபோது “பர்னூலுக்குப்போ” என்று தெளிவாகச் சொன்னார். நான் என் நண்பரை அழைத்து, “சகோதரரே, நாம் பர்னூலுக்குப் போவோம், வாரும். அங்கு ஆண்டவருக்கென்று ஒருவர் ஆயத்தமாயிருக்கிறார்” என்று கூறினவுடன், அவர் என்னுடன் வருவதற்கிசைந்தார். இருவருமாகப் புறப்பட்டோம். ஆனால் அவ்விடம் நெடுந்தூரத்திலிருந்தது. முதலாவது இரயிலில் சுமார் நூறு மைல் சென்றோம். பிறகு அதிக தூரம் நடக்க வேண்டியதாயிற்று. அதன் பின்பு படகு ஏறிச்சென்று, அதற்கு மேலும் நடந்து அவ்விடத்தை அடைய வேண்டியதாயிற்று. அங்கு யாரோ ஒருவர் ஆண்டவருக்குத் தேவை. அதற்கு நாங்கள் சென்றுதான் ஆகவேண்டும் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாக இருந்தது. சில புத்தகங்களையும், சுவிசேஷப் பங்குகளையும் எங்களுடன் எடுத்துக்கொண்டோம். அத்துடன் ஒரு உருது வேதாகமத்தைக் கொண்டு செல்லும்படி கர்த்தர் ஏவினார். அந்த நாள் காலைமுதல் மாலை வரை, இரயிலிலும், படகிலும், நடையிலுமாகச் சென்று மாலை மயங்கும் வேளையில் பானூலை அடைந்தோம் . எங்கு போவது என்று எண்ணி, சாலைகள் சந்திப்பு ஒன்றில் நான் ஒரு ஓரத்திலும், எனது நண்பர் மறுபக்கத்திலுமாக நின்று கொண்டிருந்தோம். அவ்வேளையில், ஒருவர் என்னருகில் வந்து, “நீர் கிறிஸ்தவர் போலத்தெரிகிறது. நான் ஒரு முஸ்லீம். இது என்னுடைய கிராமம். இங்கு எந்தக்கிறிஸ்தவனையும் பிரசங்கம் பண்ண விடமாட்டேன்” என்று திட்டமாகக் கூறினார்.

நான் அவருக்கு மாறுத்தரமாக, “நல்லது ஐயா, நீர் ஒரு முகம்மதியன் என்பதும், இது உம்முடைய கிராமம் என்பதும் முற்றிலும் உண்மையே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நான் ஒரு மனிதனால் இங்கு அனுப்பப்படவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளும். ஆண்டவரே என்னை இங்கு அனுப்பியிருக்கிறார் என்பதை உறுதியாய்க் கூறமுடியும். நான் எந்தக் குழுவிற்காகவும், சங்கத்திற்காகவும் உழைக்கிறவனல்ல. நான் சம்பளத்திற்காகவும் இவ்வேலையைச் செய்ய

வில்லை. நான் ஒரு காலத்தில் வேதாகமத்தையும், கிறிஸ்தவர்களையும் விரோதித்து வந்தவன். நான் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்து, சீக்கிய சமயபோதனைகளில் வளர்க்கப்பட்டவன். நான் எந்தக் கூட்டத்திற்கும் போகவில்லை, எந்த பிரசங்கத்தையும் கேட்கவில்லை. ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து 1929 – ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் என்னைச் சந்தித்தார். என்னை முற்றிலும் மாற்றினார். பின்னர் 1932 – ஆம் ஆண்டில் என் முழு வாழ்க்கையையுமே தேவனுடைய ஊழியத்திற்கென்று அர்ப்பணித்து விட்டேன். இப்பொழுது நான் அவர் அடிமை. அவர் சொல்லுகிறதைச் செய்கிறேன்; அவர் அனுப்புகிற இடத்திற்குப் போகிறேன். அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறேன், இயேசுகிறிஸ்து எல்லாப் பாவிகளுக்காகவும் மரித்துயிர்த்த ஜீவனுள்ள இரட்சகர். நான் அவர் சத்தத்தைக் கேட்டேன். ஏனெனில் இதற்கு முன்பு இந்தக் கிராமத்தின் பெயரைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை.” என்று கூறினேன். அதற்கு அந்த மனிதன் “சரி, எங்கே தங்கியிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். வேறு அறிமுகமில்லாததால், நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலேயே தங்கப் போவதாகச் சொன்னேன். “அப்படியானால் என்னுடன் வந்து தங்குங்கள்” என்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எனது கிராமவாசிகளையெல்லாம் நான் வரவழைத்தால் அவர்களுக்குச் செய்தி கொடுப்பீர்களா? என்று கேட்டார். அவர் அவ்வூரின் தலைவனானபடியால், தன்னுடைய வேலையாட்களை அனுப்பி, எல்லாருக்கும் விளம்பரப் படுத்தி, பெருங்கூட்டத்தைச் சேர்த்து விட்டார். அநேக முஸ்லீம்களும், இந்துக்களுமாக, வந்தனர்.

முதலில் எங்களுக்கு மறுப்பு தெரிவித்த அவரே, இவ்வளவு ஏற்பாடும் செய்து, எனது மொழி பெயர்ப்பாளராகவும் உதவி செய்தார். நான் செய்தி கொடுத்த பிறகு, பலர் முன்வந்து, புத்தகங்களையும், சுவிசேஷங்களையும் ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள். நாங்களெல்லாரும் ஒன்றாயிருந்து உணவு அருந்தினோம். அதன் பிறகு, ஒரு முகம்மதிய காவல்காரன் என்னிடம் வந்து, “கடவுள் என்னிமித்தமாகவே உங்களை இங்கு அனுப்பியிருக்கிறார்.” என்று சொன்னார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் அவரிடம் உருதுமொழியில் ஒரு சுவிசேஷப் பகுதியைக் கொடுத்ததாகவும், அதை அவர் அடிக்கடி படித்து, இரட்சிப்பின் வழியைக் குறித்து மேலும் விளக்கமாக யாராவது வந்து போதிக்கமாட்டார்களா என்று தான் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இவருக்கென்றே நான் உருது பைபிளையும் எடுத்துச் செல்லுமாறு ஆண்டவர் என்னைப் பணித்தார் என்பது அப்பொழுது தான் எனக்கு நன்கு விளங்கிற்று. அவருடன் பேசிய பின், அவருக்கு உருது வேதாகமத்தைக் கொடுத்தேன். அவரும் படிக்கத் தொடங்கி, சீக்கிரத்திலேயே மெய்ச்சமாதனத்தைக் கண்டடைந்தார்.

இவ்விதமாக, நாம் ஒரே மனதும், ஒரே சிந்தையுமுடையவர்களாய்க் கர்த்தர் சமுகத்தில் கூடி ஜெபிக்க வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் தேவ வல்லமையைப் புதிய வண்ணமாய் உணரலாம். மிகுந்த பலனையும், கனியையும், ஆசீர்வாதத்தையும் அனுபவிக்கலாம். எங்களது ஊழியத்தில் இதை எப்பொழுதும் காண்கிறோம். மேற்கூறியவை எல்லாம் ஏதோ ஓரிரு சந்தர்ப்பங்களில் அபூர்வமாக நிகழ்ந்த அற்புதங்களல்ல. கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளாக இவ்விதமாகவே எனது ஊழியம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. நாம் போதுமான சமயம், பொறுமையோடு ஆண்டவருக்காகக் காத்திருந்து, அவரிடம் மன்றாடும் போது, கர்த்தர் ஒரு விசேஷித்த முறையில் நம்மோடிருக்கிறார் என்பதை அனுபவவாயிலாக நன்கு அறியலாம். எனவே தான், எங்களது படையெடுப்பிலோ, கூட்டங்களிலோ, கான்வோக்கேஷன் (பரிசுத்த சபைகூடுதல்) என்னும் சிறப்புக் கூட்டங்களிலோ இவ்வளவு மிகுதியான தேவாசீர்வாதம் காணப்படுகிறது.

எங்களுடைய ஊழியத்திற்குரிய தேவனுடைய திட்டத்தைத் தெரிந்து செயல்படுவதால், நாங்கள் எவரிடமும் பணம் கேட்கவோ, கெஞ்சவோ தேவை ஏற்பட்டதேயில்லை. இந்நாட்களில், தாங்களாகவே பெரிய திட்டங்களைத் தீட்டிக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்குரிய பொருள் வசதியில்லாததால், உடனே பிச்சை கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கு அவ்விதம் இரப்பது நியாயமெனத் தெரிகிறது. பொருளுதவி பெற எல்லா வழிகளையும் கையாளுகிறார்கள். அவிசுவாசிகளிடமிருந்தும், தேவனற்றவர்களிடமிருந்தும் பண சகாயம் பெறுவதற்குச் சற்றேனும் தயங்குகிறதில்லை. அப்போஸ்தலர்கள், யாரிடமும் வாய்திறந்து, உதவி நாடவில்லை என்பதை வேதாகமத்திலிருந்து அவர்கள் படித்துக் கொள்ளவில்லை. தேவன்பினால் நெருக்கி ஏவப்பட்ட மக்களே, வலிய முன் வந்து, மனமுவந்து, உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். இந்தியாவிலும் நாங்கள் தேவனுக்கு இத்தனை ஆண்டுகளாக செய்துவரும் ஊழியத்திலும், எவரிடமும், எந்தச் சமயத்திலும், எந்த சூழ்நிலையிலும் பணம் கேட்கவோ அல்லது குறிப்பாய்த் தெரிவிக்கவோ தேவையிருந்ததில்லை. இதிலிருந்து எங்களுக்கு ஒருபோதும் பணமுடையே இல்லை என்பது அர்த்தமல்ல. சில வேளைகளில் தீவிரமான பணத்தேவையும் நெருக்கடியும் இருந்ததுண்டு. ஆனாலும், மனிதரையணுகாமல், ஒருமனப்பட்டவர்களாய் ஊக்கமாக, தேவனிடத்திலேயே விண்ணப்பித்தோம். இது கர்த்தருடைய ஊழியமானபடியாலும், எங்கள் தேவைகளுக்கெல்லாம் கர்த்தரே பொறுப்பாளியானபடியாலும், அவர் எப்பொழுதுமே குறைவில்லாமல் கொடுத்து வருகிறார். எல்லாக் கட்டணங்களையும் குறிப்பிட்ட கெடுவுக்குள் கொடுத்துத் தீர்க்கிறோம். எல்லாவற்றையும் ஏற்ற வேளையில் செலுத்திவிடுவோம் என்பதே கர்த்தர் எங்களுக்களித்த வாக்குத்தத்தம், ஆனால், ஒவ்வொரு முயற்சிக்கு முன்பும், அல்லது ஓரிடத்தில் ஊழியந்தொடங்கு முன்பும் தேவனுடைய திட்டமும், ஒழுங்கும் என்னவென்பதை நாங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டிய தாயிருக்கிறது. நம் நாட்டிலோ, அல்லது அயல் நாட்டிலோ உள்ள எந்தக் கொடை வள்ளலையும், சங்கத்தையும் நாங்கள் எதிர் பார்த்திருக்கவில்லை. தேவனுடைய ஏற்பாட்டின்படியே நாங்கள் இசைந்து நடக்க முயற்சிக்கிறோம். இது நமது தனிப்பட்ட வாழ்க்கைக்கோ, குடும்ப அல்லது சபை வாழ்க்கைக்கோ இன்றியமையாதது. தெய்வீக திட்டத்தை மாத்திரம் பின்பற்றும்போது, தேவனே எல்லாவற்றிற்கும் பொறுப்பாளி, உத்தரவாதி என்பதை அறிந்து கொள்ளுகிறோம். நமது சுய ஞானத்தை உபயோகித்து, சுய புத்தியையும், பலத்தையும் சார்ந்திருப்போமானால், தாவீது தன்னிச்சையாக தெய்வீக ஒழுங்கை மாற்றினதினால் ஏற்பட்ட விளைவுபோலவே, நமக்கும் பெறுத்த நஷ்டமேற்படும். கர்த்தரின் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து, அவர் சித்தத்திற்கும், ஒழுங்கிற்கும் இசைந்து நடக்க வேண்டுமென்பதற்கு இது ஒரு பயங்கரமான எச்சரிப்பாயுள்ளது.

தேவனுடைய சபையைக் கட்டுகின்ற ஊழியத்திலே இது மிக மிக முக்கியமாகும். தேவனுடைய இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களே இன்றைய தேவை. இந்தப் பெரிதான ஊழியத்திற்கென்று கர்த்தர் யாரைத்தெரிந்து, அழைத்துப் பக்குவப்படுத்தி வருகிறாரோ, அவர்களுக்காக சபையோடு கூடச்சேர்ந்து வாரக்கணக்காகவோ, அல்லது மாதக் கணக்காகவோ ஜெபிக்கவேண்டும். தேவனுடைய சேவையில் நாம் எந்தக் கடமைகளையும், உத்திரவாதங்களையும் ஏற்க வேண்டுமானாலும் முதலாவது தேவனுடைய நோக்கத்தையும், திட்டத்தையும், ஜெபத்தில் ஆராய்ந்தறிவதவசியம், நாம் புதிய யுகத்தில், நவீன காலத்தில் வாழ்கின்றோமெனவும், சூழ்நிலைகள் எல்லாம் இப்பொழுது மாறிவிட்டன எனவும் கூறி, தேவனுடைய வெளிப்படுதலை நாம் மாற்றுவதற்குத் துணியக் கூடாது. தேவனுடைய வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கிறது. அது மாறுவதில்லை. ஆதலால் உங்களது சொந்த ஆலோசனையின் பேரில், சுயஞானத்தில், சுயபலத்தில் அவருக்கு ஊழியஞ் செய்யத் துணியவேண்டாம். அவ்வாறு செய்திருப்பீர்களென்றால், அல்லது அவரது சித்தத்தை அறியாமல் மணம் புரிந்திருப்பீர்களென்றால் அதனால் ஏற்பட்ட எல்லா தீய விளைவுகளையும், நஷ்டங்களையும் சரிக்கட்டவும், மிகுதியாகத் திரும்பிப் பெறவும் தேவ துணையை நாடுங்கள். உங்களது மனந்திரும்புதலால் மற்றவர்களும் பயனடையலாமே. அல்லது உங்கள் இல்லறவாழ்வில் ஏற்பட்ட தவறாக இருக்குமானால், நீங்களிருவரும் மனந்திரும்பி, தப்பிதத்தை அறிக்கை செய்யும்போது, ஆண்டவரிடம் மன்னிப்புக்காகக் கெஞ்சும்போது, கர்த்தர் உங்களை நிச்சயமாகவே மன்னித்து, அவரது கிருபையாலே நீங்கள் நஷ்டமடைந்த எல்லாவற்றையும் திரும்ப அளித்து, உங்களது ஜீவியங்களைப் பயனுள்ளதாக்கி உங்களை உபயோகிப்பார்.

Share30Tweet19
Webmaster

Webmaster

Recommended For You

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்- தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம்

April 4, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின் ஆவிக்குரிய பொருளைக் குறித்தும் திருமறையின் ஆதாரத்தைக்...

Read moreDetails

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள்

March 10, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக் கைக்கொண்டு நடப்போமாகில் நாம் இழந்ததைத் திரும்பப்...

Read moreDetails

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக் கொள்வதின் இரகசியம்

March 7, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும் முன்பு நாம் யாராயிருந்தாலும், நாம் செய்வது...

Read moreDetails

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தாவீதின் நான்காவது இழப்பு

March 5, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில் வசித்தனர். தாவீது தேவனுக்குக் கீழ்ப்படிந்ததின் மூலம்,...

Read moreDetails

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – இழப்பிற்குச் சில காரணங்கள்

February 25, 2025
தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 8 இழப்பிற்குச் சில காரணங்கள் நாம் இழந்து விட்ட சில பொருட்களைத் திரும்பப் பெறும்போது, மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊழியத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்....

Read moreDetails
Next Post
நாள் 1 – ஆதியாகமம் 1-3

ஆதியாகமம் 30

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?