February

பெப்ரவரி 20

பெப்ரவரி 20

….. நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும் (உபா.1:6)

தேவன் தமது மக்களுக்குப் பல இடங்களில் அநேககாரியங்களை வெளிப்படுத்தி, தொடர்ந்து வழிநடத்திக்கொண்டே வந்துள்ளார். அந்தநாட்களில் இஸ்ரவேலர் ஓரேபில் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக்கொண்டனர்.அங்கேயே தங்கிவிடாமல் தேவன் வாக்களித்த நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டியவேளையும் வந்தது.

பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடன் நமது இராட்சகர்மறுரூப மலைக்குச் சென்றபோது அங்கு அவர்கள் மோசேயையும், எலியாவையும் கண்டனர். அங்கேயேமலையின் மேல் மூன்று கூடாரங்களைப் போட்டுத் தங்கிவிடத் தீர்மானித்துவிட்டனர். ஆனால்கீழே பள்ளத்தாக்கிலோ தேவையுள்ள மக்கள் ஏராளமாயிருந்தனர். தன் மகனது சந்திரரோகம்நீங்கி பிசாசின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்று தன் தேவைக்கென ஒரு தகப்பன்ஏங்கிக் காத்துக்கொண்டிருந்தான். இந்தச் சம்பாவம் சீடர்களின் மனதில் நீங்காத இடம்பெற்றிருந்தது எனலாம். இதைப் பேதுரு தன் வாழ்வில் கடைசி வரையில் நினைவில்கொண்டிருந்தார் (2.பேதுரு. 1:16,18).

உன்னதத்திலிருந்து ஒப்பற்ற காட்சிகள் நமக்கும்சில வேளைகளில் காண்பிக்கப்படும். அதைப்பற்றிய நினைவு நம்மோடு என்றும் இருக்கவேண்டும்.அந்த இடத்தைவிட்டு நீங்கினாலும், அந்த இனிய நினைவுகளோடு தொடர்ந்து நாம் நமது ஊழியபயணத்தைத் தொடரவேண்டும். என்பதுதான் தேவ சித்தம். மலையின்மீதுதங்கியிருக்கும்போதுகூட நமது புதிய கடமைகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டும். அவரதுஆலோசனையின்படி நாம் தொடர்ந்து முன்னேற வேண்டியவர்களே. நீங்கள் இந்த மலையருகேதங்கியிருந்தது போதும்… இதோ இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன். நீங்கள்போய்… அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள் (உபா.1:6,8) என்கிறார்.தங்கினதுபோதும். புறப்படுங்கள். பெற்றுக்கொள்வீர்கள்.