February

பெப்ரவரி 16

பெப்ரவரி 16

மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக் குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மை பாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. (2.கொரி.10:8).

இந்த வசனம் புரிந்து கொள்வதற்குச் சற்றுகடினமாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய சீடருக்கு அறிவுரை கூறி அனுப்பும்போதுமற்றவர்களை விசவாசத்தில் வளர்க்கும்படி கட்டளையிட்டார். அவர்களுக்கு மாதிரியாயிருங்கள்என்றார். அதிகாரத்தை விரும்பும் ஊழியர்களை, உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள்மேய்த்து, கட்டயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்தற்திற்காக அல்ல,உற்சாக மனதோடும், சுதந்திரத்தை இறுமாய்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்குமாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள் என பேதுரு (1.பேதரு.5:2-3) எச்சரித்துளார்.

இதே பாடத்தைத்தான் பவுலும் இன்றைய வசனத்தில்போதிக்கிறார். கிறிஸ்தவர்களை அவர்களது விசுவாசத்தில் ஊன்றக் கட்டுவதற்குத்தான் பவுல்அதிகாரம் பெற்றுள்ளார். நிர்மூலமாக்குகிறதற்கல்ல. பவுலுக்கு மட்டுமல்ல, தேவனுடைய ஊழியர்கள்யாவருக்கும் இந்தக் கட்டளை பொருந்தும். நாம் பிறரை இருளிலிருந்து ஒளிக்குள்கொண்டுவரவேண்டும். பாவத்திலிருந்து இரட்சிப்புக்குள் வழிநடத்தவேண்டும். அவர்கள் நம்மைக்கேலி பண்ணினாலும் நாம் கூறுவதை அக்கறையின்றிக் கேட்டாலும் நாம் நம் கடமையில் தவறாமல்தேவனுக்கென தொண்டு செய்ய வேண்டும். மக்கள் நலனில் அக்கறை கொள்ளவேண்டும்.அன்பற்றவர்களுக்கு அன்பைக் காட்டவேண்டும். பாவத்தில் உழன்று கொண்டிருப்பவர்களுக்குஎச்சரிப்பை கொடுக்க வேண்டும். காணாமற்போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.அவர்களை விசுவாசத்தில் ஊன்றக் கட்டுகிறதற்கு பாடுபடவேண்டுமேயன்றி வெட்கப்படத்தேவையில்லை.