April

ஏப்ரல் 19

ஏப்ரல் 19

நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள் (சங்.106:3).

தனி மனிதனாயினும் சரி, ஒரு தேசமாயினும் சரி, நியாயத்தைக் கைக்கொள்ளுவதும், நீதியைச் செய்வதும் அவசியமே. நியாயத்தைக் கைக்கொள்ள தவறிவிட்ட தனி நபர்களைப்பற்றியும், கூட்டத்தாரைப்பற்றியும் சங்கீதக்காரன் எடுத்துரைத்து நம்மை எச்சரிக்கிறான்.

துன்பமும், இடுக்கணும் நேரிடும்போது நம்மைக் கோழைகளாக்கிக்கொள்வது இயல்பு (சங்.106:7-12). இஸ்ரவேல் புத்திரர் எகிப்தின் இரும்புப் பிடியிலிருந்து தப்பிச் சென்றனர். வழியில் திரும்பிப் பார்க்கையில் தாங்கள் எகிப்தியரின் படைக்கும், செங்கடலுக்கும் நடுவே அகப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டனர்.

கிறிஸ்தவ வாழ்க்கையைத் தொடங்கும்போது கோழைத்தனம் தோன்றும் என்பதல்ல. இக்கட்டுகள் வரும்போது இது தோன்றும். நாம் சோதனைகளை வெற்றிகரமாக கடந்து வந்த பின்பும் நம்மை பயமும், திகிலும் சூழ்ந்துகொண்டு வெட்கப்படுத்தும், பார்வோன் மிரட்டிக்கொண்டுவரும் வேளையில் பயப்படாமலும், செங்கடலின் முன்பு சோர்ந்துபோகாமலும் நிற்கிறவர்கள் பாக்கியவான்கள்.

தேவனுடைய ஆலோசனைகளை மறந்து அவற்றைத் தள்ளிவிட்டு நம்முடைய மகிழ்ச்சியையும், ஆதாயத்தையும் மட்டுமே தெரிந்துகொள்ளும்படியான வேளைகள் அடிக்கடி நமக்கு வந்து சேரும் (சங்.106:13-15). இப்படி இஸ்ரவேலர் தங்கள் சொந்த வழியிலே செல்ல ஆயத்தமாயிருந்தனர். சர்வ வல்லமையுள்ள அவர்கள் ஆத்துமாக்களில் களைப்பை அனுப்பினார்.