March

வேகமும் விவேகமும்

2024 மார்ச் 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,19  முதல் 27 வரை) “ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்” (வசனம் 27). அகிமாஸ் விரைவாகச் செய்தி கொண்டு போவதற்காகப் பிரபலமானவன். அவன் ஏற்கனவே அப்சலோமின் திட்டங்களை தன் தந்தையிடம் கேட்டு, எருசலேமிலிருந்து தாவீதுக்குத் தெரிவித்தவன். இவனும் இவனுடைய தந்தையும் அரச குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். ஆகவே அப்சலோமின் மரணச் செய்தியை ராஜாவுக்கு நெருக்கமான ஒருவனிடம் ஒப்படைக்க யோவாப் விரும்பவில்லை.…

March

நினைவுகூருதல்

2024 மார்ச் 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,16 முதல் 18 வரை) “அப்சலோம் உயிரோடே இருக்கையில்: … ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்” (வசனம் 18). யோவாப் எக்காளம் ஊதினான். போர் முடிவுக்கு வந்தது. ஒரு நினைவேறாத கனவாகவே  அப்சலோமின் சகாப்தம் முடிவுபெற்றது . தன் அழகின் கவர்ச்சியையும், பெருமையையும் மூலதனமாகக் கொண்டு நேர்மையற்ற முறையில் களமிறங்கியவனின் பின்னே சென்ற இஸ்ரவேல் மக்களின் வழியும்…

March

சரியானதும் தவறானதும்

2024 மார்ச் 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,15) “அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்” (வசனம் 15).     அப்சலோம் அடித்துக் கொல்லப்பட்டான். யோவாப் மூன்று ஈட்டிகளை அவனுடைய மார்பில் பாய்த்தும் அவன் சாகவில்லை. அதன் பின்னர், அவனுடைய ஆயுததாரிகள் பத்துப் பேர் அவனை அடித்துக் கொன்றார்கள். ஆயினும் அப்சலோமைக் கொன்றதன் முழுப்பங்கும் யோவாபையே சாரும். அப்சலோம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததை ஒரு படைவீரன் முதன் முதலில் யோவாபுக்கு…

March

நீதியும் அன்பும்

2024 மார்ச் 8 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,9 முதல் 14 வரை) “அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான்” (வசனம் 10). துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும் என்பதையும் (யோபு 20,5) அறியீர்களோ என்று சோப்பார் நமக்கு விவரிக்கிற வண்ணமாகவே அப்சலோமின் வாழ்க்கை சடிதியாக முடிவுபெற்றது. “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” (நீதிமொழிகள் 16,18…

March

சத்தியத்திற்குச் சாட்சி

2024 மார்ச் 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,6 முதல் 8 வரை) “யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்” (வசனம் 8). தாவீதின் சிறிய படையும், அப்சலோமின் மாபெரும் சேனையும் யோர்தான் ஆற்றின்  கிழக்கே, கீலேயாத் பகுதியைச் சேர்ந்த எப்பிராயீம் காடுகள் என அழைக்கப்பட்ட இடத்தில் மோதிக் கொண்டார்கள். இந்த இடத்தில்தான் போர் நடைபெற வேண்டும் என்பதை தாவீது தீர்மானித்திருந்தான். ஏனெனில், அதிக…

March

மாறாத அன்பு

2024 மார்ச் 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,5) “ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்” (வசனம் 5). ராஜாவாகிய தாவீது வழிதவறிச் சென்ற தன் மகனின் மீது கொண்டிருந்த அன்பு எவ்வளவு அதிகமாக இருந்தது. இந்த நேரத்திலும்கூட தாவீது அவனை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றான். அப்சலோம் ஒரு மன்னிக்க முடியாத கிளர்ச்சியாளன் என்பதை தாவீது அறிந்திருந்தான். அவன் தனது வாழ்க்கையையும் சிம்மாசனத்தையும் அபகரிக்கும்படி…

March

நம்பிக்கையும் உழைப்பும்

2024 மார்ச் 5 (வேத பகுதி: 2 சாமுவேல் 18,1 முதல் 4 வரை) “அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்” (வசனம் 4). தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்தான். இத்தகைய மக்கள் தாவீதுக்கு எங்கிருந்து கிடைத்தார்கள். தாவீதின்மீதிருந்த விசுவாசத்தினால் பலர் தங்களுடைய ஆயுதங்களோடு வந்து இணைந்துகொண்டார்கள் என்று தெரிகிறது. சற்றுக் காலதாமதம் ஆகினாலும்…

March

எதிர்பாராத உதவிகள்

2024 மார்ச் 4 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,24 முதல் 29 வரை) “ தாவீது மக்னாயீமுக்கு வந்தான்” (வசனம் 24). தாவீது யோர்தானைக் கடந்து, தனக்கும் தன்னோடிருக்கிறவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான இடமாகக் கருதி மக்னாயீம் என்னும் இடத்தில் தங்கினான். இது வரலாற்றுச் சிறப்பான ஓரிடம். யாக்கோபு லாபானிடம் இருந்து திரும்பி வருகிற வழியில், தன் சகோதரன் ஏசாவுக்குப் பயந்திருந்த வேளையில் இந்த இடத்தில் தங்கினான். தேவதூதர்கள் யாக்கோபைச் சந்தித்து அவனைப் பலப்படுத்தினார்கள் (ஆதியாகமம் 32…

March

எது முக்கியம்?

2024 மார்ச் 3 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,23) “அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்” (வசனம் 23). அகித்தோப்பேல் தனது அறிவுரையின்படி அப்சலோம் செய்யவில்லை என்பதைக் கண்டபோது விரக்தியடைந்தான். அரண்மனையில் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரியாக வலம் வந்தவன், இப்பொழுது ஓரங்கட்டப்படுகிறோம் என்று அறிந்தபோது இயல்பாகவே எல்லாருக்கும் வரக்கூடிய மனச்சோர்வை அவன் சந்தித்தான். ஒரு காலத்தில்…

March

கிருபையின் பாதுகாப்பு

2024 மார்ச் 2 (வேத பகுதி: 2 சாமுவேல் 17,22) “அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்து போனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை” (வசனம் 22). “தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்” (நீதிமொழிகள் 25,25) என்பதுபோல யோனத்தானும், அகிமாசும் கொண்டு வந்த செய்தி சோர்ந்துபோயிருந்த தாவீதுக்கும் அவனுடைய குழுவினருக்கும் இருந்தது. தாவீது தன்னுடைய குழுவினரோடு உடனடியாக யோர்தான் ஆற்றைக் கடந்து அக்கரை சென்றான்.…