தானாக முடிவெடுத்தலின் தீமை
2024 பிப்ரவரி 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 14,27 முதல் 33 வரை) “அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்” (வசனம் 28). அப்சலோம் குடும்ப உறவுகளின்மேல் ஆழ்ந்த பற்றும் அனுதாபமும் கொண்டவன். தன் சகோதரி தாமாரை அவனால் மறக்கமுடியவில்லை. அவளுடைய பெயரையே தன் மகளுக்கும் பெயரிட்டான். தன் சகோதரி தன்னோடு வசிக்காவிட்டாலும், அவளுடைய பெயர் தன் வீட்டில் அனுதினமும் உச்சரிக்கப்படுவதன் வாயிலாக, அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் அதற்குக் காரணமானவர்களின்மீதான கோபமும்…