எளிய விசுவாசிகளுக்கு உதவுதல்
2024 ஏப்ரல் 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,11 முதல் 12 வரை) “இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்” (வசனம் 11). தாவீதின் பராக்கிரமசாலிகளில் மூன்றாவதாகச் சொல்லப்பட்டிருப்பவன் ஆகேயின் மகனாகிய சம்மா என்னும் ஆராரியன். இஸ்ரவேலரின் வயல்வெளியைத் தாக்கி, மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு தானியங்களை அழித்துப்போடும் எண்ணத்துடன் வந்த பெலிஸ்தியர்களின் முயற்சியைத் தோற்கடித்தான் இந்த சம்மா என்னும் வீரன். வயல் நிலைத்தைப் பேணி, உழுது, ஏற்ற பருவத்தில் விதைத்து, களையெடுத்து…