April

சோதனையில் விழுந்துபோதல்

2024 ஏப்ரல் 15 (வேத பகுதி: 2 சாமுவேல் 21,1) “கர்த்தரின் கோபம் மறுபடியும் இஸ்றாயேலுக்கு எதிராக மூண்டது; அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, ‘நீ போய் இஸ்றாயேலரையும், யூதாவையும் கணக்கிடு என்றார்” (வசனம் 1 இலகு தமிழ்). தாவீதின் வாழ்க்கையில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று இந்தக் கடைசி அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கிடும்படியான உத்தரவாகும். மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமாகத் தோன்றினாலும் ஆழமான பொருளுடையது. இந்தக் கணக்கிடுதலுக்குப் பின்னால் தாவீதின் பெருமை, கீழ்ப்படியாமை,…

April

நிஜமான நாயகர்கள்

2024 ஏப்ரல் 14 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,24 முதல் 39 வரை) “யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்” (வசனம் 24). தாவீதின் பராக்கிரமசாலிகளின் முப்பது பெயர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. தாவீது சவுலுக்குத் தப்பியோடுகையில் அவன் தனக்கான ஒரு படையை உருவாக்கினான். அவர்கள் பல்வேறு பின்னணி மற்றும் சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை என்னவெனில், அது தாவீது துன்பத்திலும் நெருக்கத்திலும் இருந்தபோது தங்கள் இருதயத்தை அவனுக்காக அர்ப்பணித்தவர்கள் என்பதே.…

April

வெற்றியுள்ள ஊழியன்

2024 ஏப்ரல் 13 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,20 முதல் 23 வரை) “பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்” (வசனம் 20). தாவீதின் பராக்கிரமசாலிகளில் மற்றுமொரு சிறந்த வெற்றி வீரன் பெனாயா ஆவான். இவனுடைய தந்தை யோய்தாவும் ஒரு சிறந்த போர்வீரன். தந்தையைப் போல தமையன் என்னும் பழமொழிக்கு ஏற்ப இந்தப் பெனாயாவும் வல்லமையான செயல்களைச் செய்தான். மகன் தன்னைக் கண்டு பின்பற்றக்கூடிய ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்துப்போனவன் இந்த…

April

உண்மையுள்ள ஊழியன் 

2024 ஏப்ரல் 12 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,18) “யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்” (வசனம் 18). தாவீதின் பராக்கிரமசாலிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. மேலும் இருவருடைய பெயர் சொல்லப்பட்டுள்ளது, அவர்களின் ஒருவன் அபிசாய். இவன் பெத்லேகேமின் கிணற்றில் தண்ணீர் கொண்டு வந்தவர்களுமாகிய மூவருக்கும் பிரதானமானவன் (வசனம் 16). இவன் அந்த மூவரில் ஒருவன் அல்ல,…

April

தியாகமான ஊழியங்கள்

2024 ஏப்ரல் 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,13 முதல் 17 வரை) “தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்” (வசனம் 15). இங்கு பெயர் குறிப்பிடப்படாத மூன்று பராக்கிரமசாலிகள் சொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தாவீது பாதுகாப்பு கருதி அதுல்லாம் குகையில் இருந்தபோது அவனிடத்தில் வந்தார்கள். தாவீதுக்கு இரண்டு நன்மையான காரியங்கள் எப்போதும் இருந்தன. ஒன்று அவன் தேவன்மீது நம்பிக்கையாயிருந்ததினித்தம் அவர் அவனோடு இருந்தார்.…

April

எளிய விசுவாசிகளுக்கு உதவுதல்

2024 ஏப்ரல் 10 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,11 முதல் 12 வரை) “இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்” (வசனம் 11). தாவீதின் பராக்கிரமசாலிகளில் மூன்றாவதாகச் சொல்லப்பட்டிருப்பவன் ஆகேயின் மகனாகிய சம்மா என்னும் ஆராரியன். இஸ்ரவேலரின் வயல்வெளியைத் தாக்கி, மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு தானியங்களை அழித்துப்போடும் எண்ணத்துடன் வந்த பெலிஸ்தியர்களின் முயற்சியைத் தோற்கடித்தான் இந்த சம்மா என்னும் வீரன். வயல் நிலைத்தைப் பேணி, உழுது, ஏற்ற பருவத்தில் விதைத்து, களையெடுத்து…

April

இறுதிவரை போராடுதல்

2024 ஏப்ரல் 9 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,9 முதல் 10 வரை) “இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்” (வசனம் 9). தாவீதின் பராக்கிரமசாலிகளில் இரண்டாவதாக இடம் பெறுபவன் தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். பெலிஸ்தியர் படையெடுத்து வந்தபோது ஏதோ ஒரு காரணத்தால் இஸ்ரவேலின் படை போரிடாமல் திரும்பிச் சென்றபோதிலும், இவன் தைரியமாக தாவீதின் உடனிருந்து தன்னந்தனியாக போரிட்டு வெற்றிக் கனியைப் பறித்தவன். வீரர்கள் எல்லாரும் போரிடாமல் திரும்பிச் சென்றாலும்…

April

சார்ந்தோருக்குப் பெருமை சேர்த்தல் 

2024 ஏப்ரல் 8 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,8) “தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்” (வசனம் 8). தாவீதின் பராக்கிரமசாலிகளின் பட்டியலில் முதலாவது இடம்பெறுபவன் யோசேப்பாசெபெத் என்பவன். இவன் சேர்வைக்காரரின் தலைவன் அதாவது தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி. இவன் ஒரே நேரத்தில் எண்ணூறு பேர்களை வெட்டினான் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவனது தனிப்பட்ட வெற்றி அந்த…

April

உண்மையுள்ள ஊழியர்கள்

2024 ஏப்ரல் 7 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,8) “தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன …” (வசனம் 8).     இந்த அதிகாரத்தின் முதல் பகுதி (வசனங்கள் 1 முதல் 7), கர்த்தர் தாவீதுக்குச் செய்த நன்மைகளினிமித்தம் அவரது பெருமைக்குரிய காரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் அடுத்த பகுதி, தாவீதின் பராக்கிரமசாலிகளின் பெயர்களை அறிவித்து அவர்களைக் கனப்படுத்துகிறது. ஆண்டவரைச் சுமந்த கழுதைக்குட்டியும் வேதத்தில் இடம்பெற்றுள்ளதுபோல, இங்கே தாவீதினிடத்தில் தங்கள் விசுவாசத்தையும், ஒப்புவித்தலையும், வீரத்தையும் காட்டிய சேவகர்களின் பெயர்கள் இடம்…

April

உடன்படிக்கையின் வாழ்க்கை

2024 ஏப்ரல் 6 (வேத பகுதி: 2 சாமுவேல் 23,5 முதல் 7 வரை) “சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்” (வசனம் 5). “என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ?” (வசனம் 5) என்பது தன் வீட்டில் நடைபெற்ற சோகமானதும் வருத்தமானதுமான காரியங்களின் பிரதிபலிப்பாகும். அதாவது தேவனுடைய முழுமையான ஆசீர்வாதம் தன் குடும்பத்தின்மேல் இல்லையோ என்று ஐயம் கொண்டான். தன்னுடைய தீமையான செயலின் காரணமாக இரண்டு மகன்கள் கொலை செய்யப்பட்டார்கள். தன்னைப் போல…