Thursday, October 16, 2025
Tamil Bible Blog
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • Home
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home தினதியானம்

இயலாமையை அகற்றும் இறைவாக்கு

Kesaran by Kesaran
March 24, 2011
in தினதியானம்
0
74
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மார்ச் 24

You might also like

Smith´s Daily Remembrancer – September 5

Smith´s Daily Remembrancer – September 4

Smith´s Daily Remembrancer – September 3

கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7).

ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது, அதனைச் செயலாற்றத் தேவையான வலிமையை அவர் நமக்குத் தருவார் என்னும் உண்மையை நாம் எப்பொழுதும் நினைவுகூர்கிறவர்களாக இருக்கவேண்டும். நிறைவேற்ற முடியாதவைகள் என்னும் நிலையில் அக்கட்டளைகள் இருப்பினும், அவற்றைச் செய்துமுடிக்க வேண்டிய திறத்தையும் அக்கட்டளைகளோடு அவர் சேர்த்துத் தருகிறார்.

“இந்தப் பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்” என்று எத்திரோ மோசேயிடம் கூறினான் (யாத்.18:23). “ஒரு வேலையைச் செய்யும்பொருட்டு தேவன் ஒருவனை நியமிக்கும்போது, அதனை நிறைவேற்றத்தக்கவனாக அவனை ஆக்குவதும் அவர் பொறுப்பாகும்” என்று து.ழு.சேன்டர்ஸ் உரைத்துள்ளார்.

வாதநோயினால் பாதிக்கப்பட்ட மனிதர்களில் குறைந்தது இருவரை இயேசு கிறிஸ்து தமது ஊழிய நாட்களிலே சந்தித்தார் (மத்.9:6, யோ.5:8). இரண்டு முறையும் அவர்களை எழச்சொன்ன இயேசு கிறிஸ்து தங்களுடைய படுக்கையை எடுத்துச் செல்லும்படியும் கட்டளையிட்டார். அக்கட்டளைக்குக் கீழ்ப்படிய இணங்கியபோது, அவ்விருவருடைய வலிமையற்ற கை கால்களுக்குள் வல்லமை பாய்ந்தது.

நீரின்மேல் நடக்கும்படித் தன்னைக் கர்த்தர் அழைப்பாராயின் தன்னால் நீரின்மேல் நடக்க இயலும் என்பதை பேதுரு உணர்ந்தான். இயேசு கிறிஸ்து “வா” என்று அழைத்தவுடன் பேதுரு படகை விட்டிறங்கி நீரின்மேல் நடந்தான்.

சூம்பி தொய்ந்துபோன கரத்தை நீட்டுவது முடியாததாகும். ஆனால் தொய்ந்த கரத்தை உடைய ஒருவனிடம் கையை நீட்டும்படிக் கர்த்தர் கூறியவுடன் அவன் நீட்டினான். நலம் பெற்றான்.

ஒருசில அப்பங்களையும், மீன்களையும் கொண்டு 5000 பேருக்கு உணவளிக்க முடியும் என்ற கேள்விக்கு இடமேயில்லை. “அவர்கள் உண்ணுவதற்குக் கொடுங்கள்” என்று இயேசு நாதர் சீடர்களிடம் உரைத்தபோது இயலாமை மறைந்துபோயிற்று.

“லாசருவே வெளியே வா” என்று இயேசுகிறிஸ்து அழைத்தபோது, அக்கட்டளையோடு அவன் வெளியே வருவதற்குரிய வல்லமையும் புறப்பட்டுச் சென்றது. நான்கு நாட்கள் கல்லறையில் உறங்கியவன் எழுந்து வந்தான்.

இந்த உண்மைகளை நமக்குரியாதாக்கிக் கொள்ளவேண்டும். ஒருசெயலை நாம் செய்யும்படி தேவன் கூறும்போதும், அதற்குரிய பலத்தை அவர் தருவார் என்று நம்பாமல், அவரை எதிர்த்து வாதிடக்கூடாது. “தேவனுடைய கிருபையற்ற இடத்திற்கு அவர் உங்களை வழிநடத்திச் செல்லமாட்டார்.”

ஒரு வேலையைச் செய்ய தேவன் கட்டளையிடுவாராகில், அதைச் செய்வதற்கான பணத்தையம் அவர் தருகிறார். அவருடைய வழிநடத்துதலைக் குறித்து உறுதியுடையோர் பணத்தேவையைக் குறித்துக் கவலைப்படக்கூடாது. அவரே தேவைகளை நிறைவு செய்கிறவர்.

செங்கடலைப் பிளந்தவர், யோர்தனை வற்றிடச் செய்தவர். அவரே இன்றைக்கு நமது தேவனாக உள்ளார். அவர்தம் மக்கள் அவருடைய சித்தத்திற்குக் கீழ்படியும் வேளையில், எல்லா இயலாமையையும் நீக்கி விடும் கிரியையை அவர் இன்றும் செய்கிறவராகத் திகழ்கிறார். நம் தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தை நிறைவேற்ற கிருபை நல்கும் தேவன் ஆவார்!.

Share30Tweet19
Kesaran

Kesaran

Recommended For You

Smith´s Daily Remembrancer – September 5

September 5, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 5 'நான் புறம்பே தள்ளுவதில்லை' யோவான் 6:37 எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள எந்த வாக்குத்தத்தமும் தனக்குரியதோ என்று கலங்குகிறதுமுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் முன்னே...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 4

September 4, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 4 'உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்' எபேசியர் 1:13 நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே முடியாது. தேவன் நம்மை இலவசமாய்ப் பரிபூரணமாய், நித்தியமாய் மீட்கும்பொருட்டுத் தம்முடைய சொந்தக் குமாரனை நம்முடைய தன்மையைத்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 3

September 3, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 3 'என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்' பிலிப்பியர் 4:19 இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும் இப்படியே நிச்சயம் சொல்லுகிறார். அவர்களுக்கு அநேகம் குறைவுகளிருந்தன; நமக்கும் அப்படித்தான். அவர்கள் தேவனைச் சார்ந்திருந்தார்கள்; நாமும்...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 2

September 2, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 2 'மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு' ரோமர் 11:20 விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும், மிகவும் நிர்ப்பந்தரான பாவிகட்குமிருக்கிற வித்தியாசம் தேவனுடைய சுத்த இலவசமான கிருபையினால் உண்டாயிருக்கிறதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் பலவீனரானதால்,...

Read moreDetails

Smith´s Daily Remembrancer – September 1

September 1, 2025
Smith´s Daily Remembrancer – January 1

செப்டெம்பர் 1 'மீட்கிறவர்' ரோமர் 11:26 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்காக ஞானம் அறிவென்னும் பொக்கிஷங்கள் அவரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சகல மாம்சத்தின்மேலும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு...

Read moreDetails
Next Post

தேவனுக்கே முதலிடம்

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?