ஜூன் 9
`இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக‘
சங்கீதம் 130:7
இந்தப் பெயர் கர்த்தருடைய ஜனங்கள் யாவருக்கும் உரியது. இது அவர்களுடைய மேன்மையை காட்டுகிறது, அவர்கள் பிரபுக்கள்; அவர்களுடைய அனுபவத்தை இது தெரியப்படுத்துகிறது. ஜெபத்தில் தேவனோடு போராடி மேற்கொள்ளுகிறார்கள்; அவநம்பிக்கைக்கு இடங்கொடுக்கிறது. பிரபுவுக்கு அடுத்ததல்ல, கிறிஸ்தவனுக்கு அடுக்குமா? நம்முடைய தேவன் நம்பிக்கையின் தேவன்; நாம் அவரில் நம்பிக்கை வைக்கவேண்டும். இஸ்ரவேல் அவருடைய இரக்கத்தில், அவருடைய பொறுமையில்; அவர் தயாளகுணத்தில், அவருடைய சம்பூரண ரட்சிப்பில் நம்பிக்கை வைக்கவேண்டும். இருட்டில் வெளிச்சமுண்டாகுமென்றும், பெலவீனத்தில் பெலன் உண்டாகுமென்றும், கலக்கத்தில் தெளிவுண்டாகுமென்றும்; மோசத்தில் விடுதலை கிடைக்குமென்றும், போராட்டத்தில் ஜெயம் உண்டாகுமென்றும், மரணத்தில் கெம்பீரம் கிடைக்குமென்றும் அவர்கள் நம்பவேண்டும். அவர்கள் தேவனை உறுதியாய் நம்பலாம், அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஜெபத்தோடு நம்பலாம், நாம் சொல்லுகிறதைக் கேட்பதே அவருக்குப் பிரியம், கீழ்ப்படிதலோடு நம்பலாம், நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டியவர்கள். எப்பொழுதும் நம்பலாம், அவர் எப்பொழுதும் ஒரே சீராயிருக்கிறவர். உங்கள் நிலைமையிலேயாவது, செய்கைகளிலாவது, மற்றெந்தக் காரியத்திலாவது நம்பிக்கை வையாதேயுங்கள். கர்த்தரைமாத்திரம் நம்பியிருங்கள். இஸ்ரவேலின் தேவன்தான் எக்காலத்திலும் இஸ்ரவேலின் நம்பிக்கை; இஸ்ரவேலின் நம்பிக்கை ஒருக்காலும் விருதாவாய்ப் போகாது; தேவனை நம்பு, மனிதன் கர்த்தருடைய ரட்சிப்புக்காக நம்பி அமைதலாய்க் காத்திருப்பது நல்லது; இது நம்பிக்கை புசலிலும் பெருங்காற்றிலும் உன்னைத் தற்காக்கும்.
சுவிசேஷம் என் மகிழ்ச்சி
அவருண்மை புகழ்ச்சி,
என் ஆதாரம் அவர் வாக்கும்
ஆணையோடு ரத்தமும்,
ஆத்மாவே அவரை நம்பு
அவர் உன் பிடி கொம்பு.