மே 30
‘என் ஊற்றுகள் எல்லாம் உன்னிலிருக்கிறது‘
சங்கீதம் 81:7
இயேசுவே ஜீவ ஊற்று, இரட்சிப்பின் கிணறுகள் அவரிலும் அவருடைய கிரியையிலும் வார்த்தையிலும் உண்டு. ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து குடிக்கக்கடவன் என்கிறார். ஆறுதல், சமாதானம், ரட்சிப்பு இவைகளின் ஊற்றெல்லாம் அவரிடத்தில் உண்டு; அவரில் நமக்காக இருக்கிறது; அதினால் நம்முடைய ஊற்று என்று சொல்லப்படுகிறது. இந்தத் தண்ணீர் எந்தத் தீட்டினின்றும் நம்மைச் சுத்தம் பண்ணும், ஆயாசத்தால் சோர்ந்திருக்கிறவர்களைத் தேற்றும், ஆசையுள்ள ஆத்துமாக்களைத் திருப்தியாக்கும். ஊற்று நிறைவுக்கு அடையாளம், மனசுள்ளவன் வந்து மொண்டுகொள்ளலாம், ஆறுகள் வற்றுகிறதே இல்லை. நாம் எக்காலத்திலும் இயேசுவில் சார்ந்திருக்கிறோம், இது நமக்குக் கிடைத்த இரக்கம். மற்றவர்களிடத்தில் நாம் போகவேண்டியதில்லை, இது நம்முடைய பாக்கியம், நம்முடைய ஆசைகளை அவரிடத்தில் சொல்லவேண்டும்; நம்முடைய பாசங்கள் அவரைப் பற்றினதாக இருக்கவேண்டும். இயேசுவில் பல வகைகள் உண்டு. நமக்குத் தேவையானதெல்லாம் செய்வார், கொடுப்பார், அவரிடத்தில் பரிபூரணம் வாசமாயிருக்கவேண்டுமென்று பிதா சுத்தமாயிருக்கிறார். நம்முடைய ஊற்றுகள் எல்லாம் இயேசுவில் இருந்தால் வேறு ஒருவரிடத்திலும் போகாமல், சந்தோஷத்தோடு ரட்சிப்பின் ஊற்றுகளில் இருந்து தண்ணீர்மொண்டுகொள்வோமாக, அவரைக் கேட்டால் ஜீவதண்ணீரைக் கொடுப்பார்; நாம் ஒருபோதும் தாகமடையோம். இயேசுவினிடத்தில் வருகிறதுதான் ஆத்துமாவுக்குத் திர்ப்தியுண்டாக்கும்.
இயேசுவே உமதண்டைதான்
பாவி ஓடி வரலாம்;
வா என்று சொன்னீர் நீர்தான்
என்றும் பாயும் நீரூற்றாம்;
அன்பால் என்னை நிரப்பும்
என் சிந்தைமேலெழுப்பும்.