மே 24
‘சத்துரு‘
லூக்கா 10:19
கிறிஸ்தவனுக்குச் சத்துருக்கள் அநேகர் உண்டு. அவர்களில் விசேஷித்தவன் ஒருவன்; அவன் இந்த உலகத்தின் தம்பிரான்; கர்த்தரால் அழைக்கப்பட்டவர்கள் தவிர மற்றெல்லாரும் அவனை வணங்குகிறார்கள். ஆகாயத்தில் வல்லமையின் பிரபுவாய் அவன் எல்லா அவிசுவாசிகளையும் நடத்தி, அவர்களில் கிரியைசெய்து வருகிறான். அவன் தந்திரமான சர்ப்பம், மோசம் போக்குகிறவன், விழுங்கப்பார்க்கிற கர்ச்சிக்கிற சிங்கம், மரணத்திற்குரிய வல்லமையுடையவன். அவன் நம்முடைய இருதயத்தில் வந்து, நம்மைத் தப்பான வழியில் நடத்தப்பார்க்கிறான். அவனுக்கு வேதவசனம் நன்றாய்த் தெரியும், அதினின்று எடுத்துச்சொல்லி அதைத் தப்பாய் அர்த்தப்படுத்துவான். ஒரு வசனத்தைக்கொண்டு பயப்படுத்துவான். வேறொரு வசனத்தைக்கொண்டு பாவத்தை அற்பமாகக் காட்டுவான். நமக்கு எப்படிச் சேதமுண்டாக்கலாம் என்று பிரயாசப்பட்டுக்கொண்டே இருக்கிறான். சிநேகிதரே, இயேசுவின் பாதத்தண்டையில் சுகமாயிருக்கிறோம், நாம் அவரிடத்தில் நிலைத்திருந்து, அவரோடு நடந்தால்தான் சாத்தானை மேற்கொள்ளலாம். ஆட்டுக்குட்டியின் ரத்தமும், தேவனுடைய சாட்சியாகிய வசனமும்தான் நம்முடைய ஆயுதங்கள், விசுவாசம் கிறிஸ்து நிறைவேற்றின கிரியைக் கேடயமாகப் பிடித்துக்கொள்ளுகிறது. தேவனுடைய வசனம் அதின் பட்டயம். இவ்விதமாய் அந்தக் கொடிய சத்துருவை மேற்கொள்ளலாம்; தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்வோமாக.
இயேசு உனக்காய் மரித்தார்
அவர் அன்பெதிர்ப்போர் யார்?
விசுவாசத்தையே பிடி
நீ கெடுவதெப்படி?
இயேசு இரக்கத்தால் ஜெயிப்பாய்
திடனோடங்கே நிற்பாய்.


