மே 19
‘எல்லாம் சரிதான்‘
இராஜாக்கள் 4:23
இது துன்பப்பட்ட விசுவாசி சொல்லுகிறது. நாமும் துன்பப்படும்போது இப்படித்தான் சொல்லவேண்டும். நம்முடைய துன்பமும், வருத்தமும், சோதனையும் பெரிதாயிருக்கலாம். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கு எல்லாம் நன்றாயிருக்கும், பாவம் உங்கள்பேரில் ஆளுகை செய்யமாட்டாது. நீங்கள் நியாயப்பிரமாணத்தின் கீழல்ல, கிருபையின் கீழ் இருக்கிறவர்கள். நீங்கள் சாத்தானுடைய பொல்லாத சிந்தனைகளாலும், பலத்த சோதனைகளாலும் வருத்தப்படுகிறவர்களா? அது நன்றாயிருக்கும். ஏனென்றால் சமாதானத்தின் தேவன் சாத்தானைச் சீக்கிரம் உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். வழியில் காணும் துக்கங்களாலும், வருத்தங்களாலும், சோதனைகளாலும், உங்கள் ஆத்துமா சோர்ந்து போனது. அதுவும் நலம்தான். தேவனை நேசிக்கிறவர்களுக்கு, தீர்மானப்படி அழைக்கப்பட்டவர்களுக்குச் சகலமும் நன்மையாகவே முடியும். உன் காரியம் விசேஷித்தது என்று சொல்லிப் பயப்படுகிறாயோ? அதுவும் நன்மைதான். மனிதருக்குச் சாதாரணமாய் நேரிடும் சோதனையின்றி வேறொரு சோதனையும் உங்களைப் பிடிக்கிறதில்லை. தேவன் உண்மையுள்ளவர்; தாங்குகிறதற்கு மேலான சோதனையை அனுப்பவுமாடடார். நீங்கள் தாங்கத்தக்க சோதனைகளோடுகூட தப்புவதற்கு வழியையும் உண்டுபண்ணுவார். கிருபை நிறைந்த தேவனுடைய வாக்கு எவ்வளவு அருமையானது. கர்த்தாவே, இதை நம்பிச் சந்தோஷப்படச் செய்யும். அப்போது உயிரோடிருந்தாலும் மரித்தாலும் சரிதான்.
இவ்வாக்கின் மதுரம்
யாரால் சொல்லக்கூடும்?
விசுவாசிக்கென்னேரமும்
சேமம் வந்துகூடும்.