ஜனுவரி 7
அவன் தன்னைத்தான் வெறுக்கக்கடவன்
மத்தேயு 16:24
தமது சீஷன் எவனும் தன்னைத்தான் வெறுக்கவேண்டுமென்று ரஷகர் சொல்லுகிறார். சுயநீதிக்கானவைகளை வெறுத்துச் சிலுவையில் அறைந்து, ரட்சிப்புக்கு அவர் செய்ததையும் அவர் சம்பாதித்ததையும்மாத்திரம் நம்பவேண்டும். புத்தி அறிவு என்பவைகளாலுண்டாகும் பெருமையைக் கொன்று, அவர் வார்த்தை சொல்லுகிறதை நம்பி, அவர் கட்டளைப் பிரகாரம் நடக்கவேண்டும். கிட்டின இனத்தாரும், அருமையான சிநேகிதரும், நமக்குப் பிரியமான இன்பங்களும், அவருடைய மகிமைக்கும் அவருடைய காரியவிர்த்திக்கும் விரோதப்படுமானால், அவைகளையும் தள்ளவேண்டும். ஒரு கிறிஸ்தவன் எதையும் ரட்சகருடைய பாதத்தில் வைத்து ‘என் ஆண்டவரே! உமது இஷ்டப்படி செய்யும்’ என்று சொல்லவேண்டும், நாமும் நம்முடையவர்களல்ல, நமக்குள்ளதெதுவும் நம்முடையதல்ல; அது கர்த்தருடையது. நம்முடைய விருப்பங்கள், இன்பங்கள், நோக்கங்கள் சகலமும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படும்படி செய்யவேண்டும். எல்லாக் காலங்களிலும் எல்லாக் காரியங்களிலும், எப்படிப்பட்ட சமயத்திலும், அவருடைய மகிமையையே தேடவேண்டும். இப்படிச் செய்வோமானால் யாதொரு குறைவுமின்றிப் பாக்கியசாலிகளாயிருப்போம். வேலையாள் தன் எஜமானுக்குக் கீழ்ப்படியவேண்டும். பிள்ளை தனது அன்புள்ள தகப்பன் ஞானமாய், யோசனையாய்ச் செய்வாரென்று சகலத்திலும் அவருக்குக் கீழடங்கவேண்டும். நான் யாருக்காக என்னை வெறுக்கவேண்டும்? இயேசுவுக்காகத்தான். அவர் என்னை இரட்சிக்கப் பிழைத்தார், மரித்தார்; இப்போதும் பரலோகத்தில் எனக்காகப் பரிந்துபேசுகிறார். மாணபரியந்தம் தம்மைத்தாமே தாழ்த்தித் தன்னை வெறுப்பதற்கு நல்லமாதிரி வைத்தார்.
என் நேசா உன்னை வெறுத்து
உன் சித்தம் முறியாயோ?
ஆசைவிட்டு உத்தரித்து
லோக இச்சை தள்ளாயோ?
பொறுமையே
உனக்கவுஷதமல்லோ?


