மே 1
‘நான் உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்‘
2 கொரிந்தியர் 6:18
வேதவசனத்துக்கு ஒத்து நடக்கிறதினால் ஒருவனும் நஷ்டமடையான். அப்படிப்பட்டவனுக்கு இம்மையில் நூறு மடங்கும், மறுமையில் நித்திய ஜீவனும் கிடைக்கும் என்று தேவன் வாக்குக்கொடுத்திருக்கிறார். மாம்சத்துக்குரிய சம்பந்தங்களைத் தள்ளிப்போடவேண்டும்; உறுதியான தீர்மானம் பண்ணவேண்டும். உலகத்தைப் புறம்பே தள்ளவேண்டும். கிறிஸ்துவையும் உலகத்தையும் ஒன்றுபடுத்தக்கூடாது. மாம்ச சிந்தையும் ஆத்தும சிந்தையும் ஒன்றாய்ப் பொருந்தா. அவைகளை விட்டுப் பிரிந்துபோய் அசுத்தமானதைத் தொடாதிருங்கள். ‘நான் உங்களை ஏற்றுக்கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்’ என்று நம்முடைய தேவன் சொல்லுகிறார். உறுதியான தீர்மானஞ்செய்ய நம்மை உற்சாகப்படுத்தி ஏவிவிட இதைவிட நமக்கு என்னவேண்டும். மனுஷர் என்னைத் தள்ளி அசட்டை செய்து துன்பப்படுத்தினாலும், தேவன் என்னை ஏற்றுக்கொள்வார். அவர்கள் என்னைச் சேதப்படுத்தி பட்டினிபோட்டுக் கொன்றாலும், தேவன் எனக்குத் தகப்பனாயிருக்கிறார். அவர் எனக்காகக் கவலைப்பட்டு, என்னை ஆதரித்து, என்னோடு வாசஞ்செய்து, என்னை ஆற்றி, எனக்கு வேண்டியதைத் தந்து, எனக்குப் பிதாவாயிருப்பார். நான் சிநேகிதன் இல்லாமல் போகமாட்டேன்; நான் பயப்படமாட்டேன். நேசரே! என்னைப் பரீட்சித்துப் பாருங்கள் என்று தேவன் சொல்லுகிறாரே. சிநேகிதர்களை விட்டுப் பிரியவும், இனத்தாரை விட்டுப்பிரியவும், வேலை இழந்து துன்பத்தைச் சகிக்கவேண்டி வருகிறது. பயப்படாதே, தேவனுக்காக வேலை செய், அவரையே நோக்கிப்பார். அவர் உன்னை ஏற்றுக்கொண்டு பிதாவாயிருப்பார்.
லோகத்தைவிட்டும்மண்டை
வருவோர்க்கு நீர் பிதா;
உம்மையண்டி எந்தண்டை
போகியும் நீரே தாதா;
லோகத்தை சுவாமி விட்டேன்
உமது சொல்லைக் கற்றேன்.