தெசலோனிக்கேயர் 5:1-11
ஆண்டவர் திரும்ப வருவார். அதற்காக இப்பொழுதே ஆயத்தமாயிரு என்பதையே இந்த அதிகாரம் முழுவதிலும் கூறப்படுகிறது. எப்படி ஆயத்தமாக இருப்பது? 1. ஆண்டவர் எப்பொழுது வருவார் என்பது யாருக்கும் தெரியாது என்பதை ஒத்துக் கொள்ள அநேகர் புத்தியில்லாமல் அந்த நாள் தெரியும் என்று நினைந்து ஏமாந்து போயிருக்கிறார்கள். 2. நீ வெளிச்சத்தின் பிள்ளை என்பதை மறந்து விடாதே. நீ இருட்டில் நடந்தால் ஆண்டவருக்கு உண்மையானவனல்ல 3. இருட்டில் நடக்கிறவர்களுக்கு அதற்கு இணைந்த குணாதியங்கள் உண்டு. 4. ‘தெளிந்தவர்கள்” என்ற வார்த்தை இச்சை அடக்கமுள்ளவர்கள் என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப் படுகிறது. எண்ணத்தில், உணர்ச்சியிலும் பேச்சிலும் இச்சை அடக்கத்தைக் காட்டுகிறவர்கள். விசுவாசம் அன்பு, இரட்சிப்பின் நம்பிக்கை என்னும் ஆயுதங்களைத் தரித்தவர்களாக முன்னேறிச் செல்கிறார்கள். 5. ஒருவரையொருவர் தேற்றி தைரியப் படுத்தி அதின் மூலம் மற்றவர்களை வளரச் செய்யலாம். உன் குடும்பத்திலேயும், சபையிலேயும், பணியாற்றும் இடத்திலேயும் மற்றவர்களைத் தேற்றி தைரியப்படுத்துகிறாயா? அல்லது அவர்களின் குற்றங்களையே சுட்டிக் காட்டி அவர்களைத் திடனற்றுப் போகச் செய்கிறாயா?