1–5 தேவனின் எதிராளி களத்தில் இறங்குகிறான் – தேவனுக்கும்; அவனுக்கும் இடையிலான பெரிய போர் தொடங்குகிறது. அவன் ஒரு மெல்லிய சந்தேகக் கேள்வியுடன் தொடங்குகிறான், உடனடியாக மிகைப்படுத்துகிறான் (“ஒரு விருட்சத்தின் கனியையுமா”). அவன் தேவனின் தண்டனையின் தீவிரத்தை மறுக்கிறான் (வச.4). அவன் தேவனுக்குள் வீணான சுயநலத்தை செலுத்துகிறான், மேலும் அவனால் கொடுக்க முடியாத ஆசீர்வாதங்களை வாக்குறுதியளிக்கிறான்: தேவனைப்; பார்க்க புதிய கண்கள் மற்றும் புதிய அறிவுகள்… – தீமை எங்கிருந்து வருகிறது என்ற கேள்விக்கு வேதாகமத்தில்; எந்த பதிலும் இல்லை, அது எப்போதும் புதிதாக கேட்கப்படுகிறது. ஆனால், மனிதனிடம் தனது வழியில் பேசும் தீயவனை அது காண்பிக்கிறது.
6–7 ஏவாள் உரையாடலை நிறுத்தவில்லை, தேவனுடைய கட்டளைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறாள், ஆனால் அவளே அதை மிகைப்படுத்துகிறாள் (“தொடவும் வேண்டாம்” வசனம் 3). அவள் தன் பார்வையைக் கட்டுப்படுத்தாமல், தன் எண்ணங்களை அடக்காமல், பறித்து, பாவத்திற்கு ஒரு கூட்டாளியைத் தேடுகிறாள் (அடுத்தவர் மீது செல்வாக்கு செலுத்துதல்). அவள் தன் கணவனைத் தூண்டுகிறாள். அவர்கள் “புதிய கண்களை” பெறுகிறார்கள், ஆனால் தங்களைப் பற்றிய அறிவுக்கு மட்டுமே. அவர்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்து தேவனுக்குப் பயப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் மறைந்து, தேவனிடமிருந்து தப்பி ஓடுவது தொடங்குகிறது.
8–11 மனிதர்களைக் கைவிடாமல், தேவன் அவர்களைத் தேடிச் செல்கிறார். (ஏனெனில் அவர் எங்கும் நிறைந்திருப்பவர்.) அவர் அவர்களை அழைக்கிறார், அவர்களைக் கேட்கிறார், அவர்களை நிறுத்தி விசாரிக்கிறார், அவர்களைத் தேடுகிறார். இதுவே வேதாகமத்தின் முதல் பக்கங்களிலுள்ள நற்செய்தி!
12–13 மனிதர்கள் தங்கள் குற்றத்தை மற்றவர்கள் மீது சுமத்தத் தொடங்குகிறார்கள், ஏன், தேவனைக்கூட குற்றம் சாட்டுகிறார்கள் (“தேவரீர் தந்த ஸ்திரியானவள்!” – இன்று: தேவன் இதை எப்படி அனுமதிக்கலாம்?), ஏன், பிசாசைக்கூட குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள் (“சர்ப்பம் என்னை வஞ்சித்தது…”). ஆனால் ஏவாள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறாள்: “நான் மோசம்போனேன்.”
14-19 தேவன் கடுமையாகத் தண்டிக்கிறார்: புருஷனுக்கும் ஸ்திரீக்கும் இப்பொழுது வேதனையின் துன்பம், வேலையின் துன்பம், திருமணத்தின் துன்பம் மற்றும் மரணத்தின் துன்பம் வருகிறது. ஆனால் இதற்கிடையில் ஒரு சந்தோஷமான செய்தி பிரகாசிக்கிறது: மனிதன் சர்ப்பத்தை (சாத்தானை) ஆழமாக வெறுக்கும்படி (பகைமை), ஆம், வேறொருவர் (இயேசு கிறிஸ்து) அதை நசுக்கும்படி தேவன் தாமே பார்த்துக்கொள்வார். ஆனால் அது அவருக்கு மரணத்தை கொண்டுவரும் (வச.15).
20–24 மனிதனுக்கு உதவி செய்வதை தேவன் நிறுத்தவில்லை. ஆதாம் தன் மனைவியின் மூலம் வரப்போகும் சந்ததியினரின் தாயை பார்க்கும்படி ஒரு புதிய சந்தோஷத்தை தேவன் அவன் இருதயத்தில் கொடுக்கிறார் (வச.20). நிர்வாணத்தை மூடுவதன் மூலம் காமத்தை தடுக்கிறார் (வச.21). நம்முடைய விழுந்துபோன நிலை என்றென்றும் நிலைத்திருக்க அவர் விரும்பவில்லை. ஆகையால், ஜீவ விருட்சத்தை அவர் எடுத்துப்போட்டார். (வச.22). அவருடைய நியாயத்தீர்ப்பு நிலைத்திருக்கிறது: மனிதன் தன் பாவத்தின் மூலம் பரதீசை இழந்தான், தேவனுடைய தூதர்கள் அதை ஒரு பரிசுத்த வேலியைக்கொண்டு சூழ்ந்துள்ளனர். – இயேசுவினால் மட்டுமே இந்த பரதீசு திரும்ப வந்தது, இயேசுவின் மூலம் மட்டுமே நாம் மீண்டும் அதற்குள் நுழைய முடியும்.