செப்டெம்பர் 3
‘என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்‘
பிலிப்பியர் 4:19
இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும் இப்படியே நிச்சயம் சொல்லுகிறார். அவர்களுக்கு அநேகம் குறைவுகளிருந்தன; நமக்கும் அப்படித்தான். அவர்கள் தேவனைச் சார்ந்திருந்தார்கள்; நாமும் அப்படித்தான் சார்ந்திருக்கவேண்டும். அவர் குறைவை நிறைவாக்குவேனென்று கர்த்தர் சொன்னார்; நமக்கும் அப்படித்தான் சொல்லுகிறார். அவர்களுக்குக் கர்த்தர் உண்மையுள்ளவராயிருந்தார். நமக்கும் உண்மையுள்ளவராயிருப்பார். அவருடைய வாக்குத்தத்தங்கள் நமக்குப் பெரிய பொக்கிஷம். அவர் மாறாத தன்மை நமக்கென்றுமுள்ள ஆதரவு. யெகோவா இருக்கும்வரையில் நாம் சிநேகிதர்களற்றவர்களாகமாட்டோம்; நம்முடைய குறைவுகள் நீங்காமல்போகாது. கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம்பண்ணின எல்லாவற்றிலும் ஒன்றும் தவறவில்லையென்று நாம் கடைசியில் சாட்சியிடுவோம். இன்று காலையில், ‘கர்த்தர் இதுவரையில் என்னை ஆசீர்வதித்தார். கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின்படியே உம்முடைய அடியானை நன்றாய் நடத்தினீரே’ என்று சந்தோஷமாய் நாம் சொல்லலாம். நமக்குக் குறைவு நேரிடும்போது, நாம் தேவவாக்கை நினைக்கவேண்டும். அந்த வாக்குத்தத்தங்கள் தம்முடைய பயத்தைத் தணிக்கும், மனசுக்கு ஆறுதலைத் தரும். ஒரு நாளுக்குள்ளாக என்ன நடக்குமென்று ஆறுதலைத் தரும். ஒரு நாளுக்குள்ளாக என்ன நடக்குமென்று அறிவோம். நம்முடைய தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நம்முடைய குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவாரென்று அறிவோம். இதைக்கொண்டு வீண் கவலைகளைத் துரத்தி, தேவன் நம்முடைய சவரட்சணைகளைக் கர்த்தாவென்று மகிழ்வோமாக. நமக்கு வேண்டியதைத் தருகிறவர் ஒருபோதும் நம்மைக் கைவிடார்.
இயேசு பெரும் களஞ்சியம்
வற்றாத சமுத்திரம்,
அவரிடம் வருபவர்,
யாவையும் அடைபவன்;
போதும் என்று சொல்லுகிறவன்,
ஒன்றும் அடையாதவன்